Central govt warns, who support ban organisations | தடை செய்த அமைப்புக்கு பரிவு காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடை செய்த அமைப்புக்கு பரிவு காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு

Added : ஜூலை 10, 2012 | கருத்துகள் (45)
Advertisement
 தடை செய்த அமைப்புக்கு பரிவு காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு,Central govt warns, who support ban organisations

"இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு குறித்த விவரங்களை, அனைத்து மாவட்ட கலெக்டர், தமிழக டி.ஜி.பி., மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி டி.ஐ.ஜி.,க்கள், க்யூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு, மத்திய உள் விவகாரத்துறை அமைச்சக இணைச் செயலர் தர்மேந்திர சர்மா, அனுப்பி உள்ளார்.


மத்திய அரசின் உத்தரவு விவரம்:தமிழருக்கு என, தாய் நாட்டை (தமிழ் ஈழம்) உருவாக்கும் நோக்கம், இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், சட்ட விரோத நடவடிக்கை வரம்புக்குள் வருகிறது.தோல்வியடைந்த பின் கூட, தனி ஈழம் என்ற கொள்கையை கைவிடாமல், ஐரோப்பாவில் நிதி திரட்டியும், பிரசார நடவடிக்கைகள் வழியாகவும், தனி ஈழம் அமைப்பதற்காக, மறைமுகமாக செயல்பட்டு வருவதாலும், எல்.டி.டி.ஈ., தலைவர்கள் அல்லது போராளிகள், சிதறிக் கிடக்கிற தீவிரவாதிகளை ஒன்று சேர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரிவினைவாத தமிழ் பற்றார்வக் குழுவினரும், எல்.டி.டி.ஈ., ஆதரவாளர்களும், மக்களிடையே பிரிவினைவாத போக்கினை தொடர்ந்து வளர்த்து வருவதுடன், தமிழகத்தில் எல்.டி.டி.ஈ.,யினருக்கு ஆதரவான அடித்தளம் அமைத்து வருவதால், இந்திய ஒருமைப்பாடு சிதையும் சூழல் உள்ளது.


அதனால், பொது அமைதிக்கு தொடர் அச்சுறுத்தல், குந்தகம் விளைவிப்பதாக கருதி, சட்டவிரோதமான அமைப்பாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர் அச்சுறுத்தலாக இருக்கிறது.எனவே, 1967ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை கொண்டு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, இந்த அறிக்கை வெளியிடப்பட்டதும், உடனடியாக செயலுக்கு வரும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-ஜூலை-201216:27:27 IST Report Abuse
Pugazh V இந்த இயக்கத்தை "தடை செய்யப்பட்ட இயக்கமாக" ஆக்கியது தமிழக முதல்வர் ஜெயலலிதா என்கிற நிஜத்தையும் சேர்த்து சொன்னால் உபயோகமாக இருக்கும். எல் டி டி ஈ இயக்கத்தை தடை செய்யப்பட இயக்கமாக அறிவிக்க பாடுபட்டு அதை செய்தும் காட்டியவர் ஜெயலலிதா தான் என்பது வரலாறு சொல்லும் மறுக்க முடியாத உண்மை.
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
10-ஜூலை-201215:58:59 IST Report Abuse
Ramasami Venkatesan இதுவும் ஒரு வேடிக்கை பார்க்கவேண்டிய வேட்டைதான். பார்ப்போமா.
Rate this:
Share this comment
Cancel
nathan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜூலை-201214:54:27 IST Report Abuse
nathan ஒன்றுபட்ட இலங்கை இல் தமிழனுக்கு முழு சுதந்திரம் இருக்கும் என என்ன காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா .விடுதலி புலியை விட்டு விடுவோம் எஞ்சி இருக்கும் தமிழனில் நிலை என்ன , இதை பற்றி பேசினால் தவறு ...................... ஆண்டவனுக வெளிச்சம்
Rate this:
Share this comment
Cancel
Thiru - Chennai,இந்தியா
10-ஜூலை-201213:38:35 IST Report Abuse
Thiru இலங்கையில் மீதமுள்ள தமிழர்களையும் சிங்களவர்கள் அழிக்க இந்தியாவின் இந்த சட்டம் மிக மிக உதவியாக இருக்கும். இலங்கையை கேட்க பக்கத்தில் யாரும் இல்லை, ஆழில்லா வீட்டில் திருடன் நுழைவது போல் சிங்களவருக்கு. இரு தினங்களுக்கு முன் தான் தற்போதைய பாரத பிரதமர் ஒரு "under performer" னு அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை பட்டம் அளித்துள்ளது. நல்லா வாங்கி வசசிகுங்க ஐயா. நாடு உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
prak - chennai,இந்தியா
10-ஜூலை-201213:24:03 IST Report Abuse
prak "தமிழருக்கு என, தாய் நாட்டை உருவாக்கும் நோக்கம் இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையும்".. அப்ப தமிழருக்கு தாய் நாடே கிடையாதா
Rate this:
Share this comment
Cancel
rajaram avadhani - Tiruchy,இந்தியா
10-ஜூலை-201212:12:16 IST Report Abuse
rajaram avadhani "தனி ஈழம் அமைய என் உயிரை விடவும் தயார். ஆனால், தமிழ் ஈழத்தை காணாமல் என் உயிர் போகாது" என்பது போன்ற டயலாக்குகள் எல்லாம் தூசு தட்டி எடுக்கப்பட்டு இந்த உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கபடுமா? இங்கு ஒரு வாசகர் கூறியதுபோல, "அரசியல் சட்டத்தை கொளுத்த வில்லை வெறும் காகிததைதானே கொளுத்தினோம்" என்பதுபோல மன்றாடபோகிறார்களா? நல்ல தமாஷ், வேடிக்கை, பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Deepak - Nellai,இந்தியா
10-ஜூலை-201211:27:06 IST Report Abuse
Deepak ஆனால் தலைநகரில் வந்து பேசிவிட்டு செல்லும் காஷ்மீர் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க முதுகெலும்பு கிடையாது
Rate this:
Share this comment
Cancel
Pongutamil - chennai,இந்தியா
10-ஜூலை-201211:25:57 IST Report Abuse
Pongutamil அன்பான வாசகர்களே, எல்லா விடுதலை புலி ஆதரவாளர்களும் இலங்கை தமிழர் ஆதரவாளர்கள்தான். ஏனென்றால் இலங்கை நாட்டில் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பது விடுதலை புலிகள் மட்டுமே. இதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளது. இதற்கு அரசியல் தீர்வு ஓன்று மட்டுமே இறுதியாக இருக்கும். ஈழதவர்களோடு எப்படி சேர்ந்து வாழமுடியும்? என் தங்கை இன் மார்பு அறுபட்டது எனக்கு எப்படி மறக்கும்?. எனவே எங்களை தனியாக வாழ விடுங்கள் என்று கேட்க அவர்களுக்கு உரிமை உண்டு. கொடுக்கும் வலி உண்டா என்று பார்ப்பதே சால சிறந்தது.உங்கள் அன்பு எழுத்தாளன் ..........
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
10-ஜூலை-201210:29:09 IST Report Abuse
N.Purushothaman தமிழ் ஈழம் (தனி நாடு ) என்பது ஏற்கமுடியாத நடைமுறைக்கு ஒத்துவராத ஓர் கோரிக்கை....ஒரு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த மற்றொரு நாட்டிற்கு அதிகாரம் கிடையாது......ஆனால் நூறாண்டிற்கும் மேலாக ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டில் குடியேறிய மக்களை தன் நாட்டு மக்களுக்கு சமமாக நடத்துதல்,சம உரிமை அளித்தல் போன்றவை கண்டிப்பாக அந்நாடு தர வேண்டும்.....இலங்கையில் வாழும் நம் மக்களை இலங்கை தமிழர்கள் என்று கூறுவதை விட இலங்கை மக்கள்,அந்நாட்டை சார்ந்தவர்கள் என்று தான் கூற வேண்டும்.......நாமே இலங்கை தமிழர்கள் என்று கூறும் போது அந்நாட்டில் உள்ளவர்கள் அவர்களை எப்படி அந்நாட்டு மக்களாக அனுசரிப்பர்...... இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆரம்பிக்க பட்ட ஓர் இயக்கம் திசை மாறி,தடம் மாறி கோரிக்கை வலு இழந்து கடைசியில் தன் மக்கள் பெற்ற குழைந்தைகளையே கேடயமாக்கி கொன்று போட்ட அந்த இயக்கம் இன்று ஒடுக்கப்பட்டு உள்ளது.....அரசிய ஆதாயம் பெற இங்குள்ள சில குள்ளநரிகள் அந்நாட்டில் வாழும் நம் மக்களுக்கு ஆதரவு தருவதாக கூறி தீவிரவாதத்திற்கு மீண்டும் தூபம் போடுவதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்......இதுவரை எதுவுமே செய்யமுடியாத இவர்களால் இனியும் எதுவும் செய்துவிட முடியாது என்கிற நிதர்சனந்தை புரிந்து இவர்களை இனியும் நம்பி ஏமாற கூடாது என்பதை உறதியாக ஏற்று கொள்ள வேண்டும்....உங்கள் பிரச்சனைக்கு இங்குள்ள தமிழர்கள் பக்க பலமாக இருப்பார்களே தவிர பிரச்சனைக்கு தீர்வு நீங்கள் தான் காண வேண்டும்....அது உங்கள் கையில் .....
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜூலை-201210:21:12 IST Report Abuse
Jeyaseelan தம்ழ்நாட்டில் உள்ள தமிழர்கள் போராட வேண்டியது இலங்கை அரசை எதிர்த்து அல்ல, நமது இந்திய அரசை எதிர்த்து. தனி ஈழத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று நாம் போராட வேண்டும்.. இல்லை சிங்களருக்கு இணையான உரிமை தமிழர்களுக்கு கொடுக்க படவேண்டும் என்று போராட வேண்டும். இலங்கைக்கு எதிரான வெளிஉறவு கொள்கையில் மாற்றம் வேண்டும் என்று போராட வேண்டும். இல்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலை தமிழ்நாடு முழுவதும் புறக்கணிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை