E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நல்ல வேட்டை தான்; வேடிக்கை பார்க்கலாம்: கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 ஜூலை
2012
23:57
பதிவு செய்த நாள்
ஜூலை 10,2012 00:02

சென்னை:"ஒவ்வொரு துறையிலும் ஊழல். நிர்வாகமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது கேள்வி-பதில் அறிக்கை:


கடந்த தி.மு.க., ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, மின் வாரியம் நெருக்கடியில் சிக்கித் தவித்தது என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மின்சாரம் எப்போது வரும், போகும் என, யாருக்கும் தெரியாது. இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கட்டணம். மின்சார மீட்டர் கிடைக்காமல், பொதுமக்கள் திண்டாடுகின்றனர். இதிலே, தி.மு.க., ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை என்று அறிக்கை விடுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. ஒவ்வொரு துறையிலும் ஊழல். நிர்வாகமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது.


ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் அனல் மின் திட்டம், 1,200 மெகாவாட் மின் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் திட்டம், 600 மெகாவாட் மின் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டம் ஆகியவற்றின் பணிகளை, முழுவீச்சில் முடுக்கிவிட்டதை அடுத்து, விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளன என கூறியுள்ளார். இந்தத் திட்டங்கள் எல்லாம், கடந்த ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்டது அல்லவா?


ஜவ்வாக இழுத்ததற்கு...:கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளில் ஏற்பட்ட பிரச்னையை, விவேகத்துடன் தன் தலைமையிலான அரசு கையாண்டதன் காணமாக, விரைவில், அது உற்பத்தியைத் துவங்கவுள்ளது என கூறியுள்ளார். மிக வேகமாகச் செயல்பட்டு வந்த கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளில், சுணக்கம் ஏற்பட யார் காரணம்? எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டு, அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, அந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென, மத்திய அரசை ஜெயலலிதா கேட்டுக் கொண்டாரா இல்லையா?


மக்கள், அதற்குள் இதையெல்லாம் மறந்திருப்பர் என எண்ணிக் கொண்டு, கூடங்குளம் பிரச்னையை, விவேகத்துடன் அவர் தலைமையிலான அரசு கையாண்டதாக, கதை அளந்திருக்கிறார். தற்போது, 4 ஆயிரம் உதவியாளர்களை, மின் வாரியத்தில் நேரடியாக நியமிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். நல்ல வேட்டை தான். வேடிக்கை பார்க்கலாம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (214)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.k.natarajan - chennai,இந்தியா
10-ஜூலை-201222:52:50 IST Report Abuse
g.k.natarajan உங்கள் ஆட்சியில் மின்சார திட்டங்கள் அறிவித்ததோடு சரி. அவைகளை தூசி தட்டி எடுத்து இப்பொழுது முடிக்கி விட்டு இருக்கிறார்கள். தயவு செய்து, மக்களின் நலனுக்காக மத்தியில் இந்த திட்டங்களுக்கு உண்டானான உதவிகளை செய்து, புன்னியம் தேடவும். மக்களின் துன்பங்கள் வந்தால் அதை" வேடிக்கை பார்ப்பேன்" என்று சொல்வது இவ்வளவு முதிர்ந்த அரசியில்வாதிக்கு நல்லது அல்லவாழ்கையின் கடசிநேரதிலாவது நல்லது செய்யுங்கள் காழ்புணர்ச்சி வேண்டாம் நடராசன்.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
சாதனா - சென்னை,இந்தியா
10-ஜூலை-201222:47:28 IST Report Abuse
சாதனா காமராஜர் அ‌ன்றே சொன்னது எவ்வளவு சரியாக இருந்து வருகிறது பாருங்கள் ... இரண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்.....
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
10-ஜூலை-201220:22:29 IST Report Abuse
Rangiem N Annamalai இவ்வளவு கடிதங்களா?.தினமலர் ஆசிரியர் சிறப்பு பக்கங்கள் /வெப்சைட் போட்டு விட்டால் சிறப்பாக இருக்கும்
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Appavi Tamilan - London,யுனைடெட் கிங்டம்
10-ஜூலை-201220:20:14 IST Report Abuse
Appavi Tamilan அ.தி.மு.க கவுன்சிலர்களின் கட்டுக்கடங்காத அராஜகம் பற்றி பெரிதாக கண்டுகொள்ளாதது...மக்கள் பிரச்னைகள் மற்றும் தேவைகள் பற்றி கவலைப்படாமல் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைகளில் மும்முரமாக இருப்பது...தி மு க ஆட்சிகாலத்தில் செய்த நல்ல திட்டங்களை பொறாமை தாளாமல் ஒழிக்க முயல்வது...அதல பாதாளத்திற்கு சென்று விட்ட தொழில் துறையை பற்றி கண்டு எள்ளளவும் கவலை கொள்ளாதது...எல்லா கட்டணங்களையும் உயர்த்தி அடித்தட்டு மக்களை துன்புறுத்துவது..என்று துக்ளக் ஆட்சி நடத்தும் ஜெயாவுக்கு இப்பிடிப்பட்ட சவுக்கடி அறிக்கைகள் தேவைதான்...
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Lightning View - Fahaheel,குவைத்
10-ஜூலை-201220:04:37 IST Report Abuse
Lightning View தலைவா, உன் ஆட்சியிலும் வேட்டைதான், மக்கள் மாற்றி குத்திவிட்டனர் ஓட்டைதான், அதான் தவற விட்டாய் கோட்டைதான். தன்னிறைவு திட்டத்தில் செய்த சாதனை எண்ணில் அடங்காது, ஏட்டிலும் அடங்காது.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
jayakumar tamilan - villupuram,இந்தியா
10-ஜூலை-201219:52:23 IST Report Abuse
jayakumar tamilan உங்களையெல்லாம் ஒருகாலமும் திருத்த முடியாது மதிப்பிற்குறிய கலைஞர் அய்யா அவர்களே ....... உங்கள் கட்சியினரின் ஊழல் தண்டவாளம்,வண்டவாளம் எல்லாம் உலகம் அறிந்ததே ... ஊழல் என்ற வார்த்தைக்கு கலைஞர் கட்சி என்று கூட ஒரு பொருள் உண்டு என உலகம் அறியும்.....
Rate this:
0 members
0 members
0 members
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
10-ஜூலை-201219:41:19 IST Report Abuse
villupuram jeevithan ஏன் மானாட, மயிலாட எல்லாம் அலுத்து போயிடுச்சா? எப்படியோ வேடிக்கை பார்த்து டைம் பாஸானா சரிதான்.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
kurumbu - tirupur,இந்தியா
10-ஜூலை-201219:21:25 IST Report Abuse
kurumbu வடை போச்சே என்று மனதளவில் புலம்புகிறார்.நீங்கள் உலகளவில் வேட்டை ஆடினீர்களே பெருசு....அப்ப நாங்க வேடிக்கை பார்கலையா..........நீ எங்க வேடிக்கை பார்க்கப்போற உன் உள்ளம் அழுகிறது உதடு சிரிக்கிறது......
Rate this:
0 members
0 members
0 members
Cancel
v6crazy frog - madurai,இந்தியா
10-ஜூலை-201219:19:26 IST Report Abuse
v6crazy frog தண்ணிய குடிங்கப்பா, தண்ணிய குடிங்க
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Muthu Jeya - Chennai,இந்தியா
10-ஜூலை-201218:22:47 IST Report Abuse
Muthu Jeya ஒன்னைய யாரு கூப்பிடுறது
Rate this:
0 members
0 members
0 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.