சாந்திநிகேதன் : விடுதியில் தங்கியிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவி, படுக்கையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்து, அந்த மாணவியை சிறுநீர் குடிக்க வைத்த வார்டன் கைது செய்யப்பட்டார் . மேற்கு வங்கம், மக்ராம்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் மிஸ்திரி. இவரின் மகள் அஜிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவள் தன் கிராமத்தில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள, சாந்திநிகேதன் பகுதியில், விஸ்வபாரதி பல்கலைக் கழகக் கட்டுப்பாட்டிலுள்ள, பாத பவன் உறைவிட மேல்நிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவள் அங்குள்ள கராபி மகளிர் விடுதியில் தங்கியிருந்தாள். இவள், கடந்த வெள்ளியன்று இரவு தூங்கும்போது, படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டாள். இதை அறிந்த விடுதி வார்டன் உமா போடார் ஆத்திரமடைந்து, மறுநாள் மாணவியை அழைத்து வலுக்கட்டாயப்படுத்தி, அவளது சிறுநீரை குடிக்க வைத்தார்.
இந்தச் சம்பவம் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, மாணவியின் தந்தை மனோஜ் மிஸ்திரி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விடுதி வார்டனை கைது செய்தனர். அதேநேரத்தில், விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக, பல்கலை நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில், மாணவியின் தந்தையும், தாயும் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்ட மூன்று பேருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
இந்த பொம்பளைய பார்த்தாலே பயமா இருக்கு.அந்த குழந்தை பயத்திலே சிறுநீர் போயிருக்கும். இந்த பொம்பளைய பார்த்தாலே எதோ சைகோ மாதிரி தெரியுது.முதலில் மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.
Fifth standard படிக்கிற குழந்தைய ஏன் அவளோட parents பாத்துக்க முடியலையா, எதுக்காக hostel - ல சேர்க்கணும். அப்பா அம்மா - வே பாத்துகல பின்ன எப்படி ஒரு ஆயா பாசமா பாத்துக்குவா? Every parents should think about their children .
என்னப்பா நீ விவரம் தெரியாத ஆளா இருக்க? ஹாஸ்டல் ல இருந்தா தானே பிள்ளை நல்லா படிக்கும்...அஞ்சாம் வகுப்பு படிச்சதும் டாக்டர் ஆகும்...100 க்கு 200 மார்க் எடுக்கும்...முக்கால் வாசி பெற்றோர்கள் இப்படி தான்......
இது போன்ற சிலர் கடுமையாக நடந்து கொள்கிறேன் என்கிற பேர்விளியில் கொடூரமாக நடந்து கொள்கின்றனர். ....இவர்களுக்கு தண்டனையும் கொடூரமாக தான் இருக்க வேண்டும்......
பசு தோல் போர்த்திய (பெண்) புலி ............. 10 வயது குழந்தை, அவள் மனது என்ன பாடு பட்டிருக்கும். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி செய்ய எப்படி மனசு வந்தது. மாமியார் வரிசையில் இந்த (பெண்) வார்டன்களும் சேர்கிறார்கள்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.