பெங்களூரு:பெண்கள் கொடுக்கும் வரதட்சணை, வன்கொடுமை தொடர்பாக புகார்களை பதிவு செய்து விசாரிக்கும் போது, ஒருசாரார் பாதிக்கப்படுவதை தவிர்க்க, தனி பெண் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க, கர்நாடக போலீஸ் நிலையங்களுக்கு, அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.மத்திய அரசு கொண்டுவந்துள்ள புது சட்ட விதிமுறைகள், கர்நாடகாவில் உடனடியாக அமல்படுத்தப்பட்டது போன்று, தமிழகத்திலும் அமல்படுத்தப்படுமா என்று, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொதுவாக, திருமணமாகி ஏழாண்டுகளுக்குள் வரும் வரதட்சணை மற்றும் வன்கொடுமை வழக்குகளை, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் உள்ள அதிகாரிகள், உடனடியாக பதிவு செய்வதில்லை. மாறாக, இரு தரப்பினரையும் அழைத்து, கட்டப் பஞ்சாயத்து நடத்தி, பணத்தை பறிப்பதாக, நாடெங்கும் பல புகார்கள் எழுந்தன. ஒரு சாரார் கொடுக்கும் பிரஷர் காரணமாக, வழக்கை மறு சாராருக்கு எதிராக திருப்பும் வகையில் பதிவு செய்வது, பணம் பறிப்பது போன்றவையும், சர்வ சாதாரணமாக நடந்தது.
உண்மை நிலை:இது போன்ற புகார்களை பதிவு செய்யும் போது, போலீஸ் அதிகாரிகள் குறுக்கீடின்றி, திருமண கவுன்சிலிங் நிபுணர்கள் மூலம் புகார்கள் ஆராயப்பட்டு, உண்மை நிலை இருந்தால் மட்டுமே, சம்பந்தப்பட்டவர்கள் மீது, விசாரணை செய்ய வேண்டும் என்று, பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.இதையடுத்து, ராஜ்யசபா மனு பரிசீலனை கமிட்டி, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ள வழிகாட்டுதல்படி, அனைத்து போலீஸ் நிலையங்களிலும், பொதுமக்கள் தங்கள் உரிமைகளையும், சலுகைகளையும் அறிந்து கொள்ளவும், பயமின்றி புகார் கொடுக்கும் வகையிலும், இத்தகைய விதிமுறைகளை பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, கர்நாடக போலீஸ் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுக்கும் வரதட்சணை உட்பட, அனைத்து புகார்களும் பதிவு செய்யப்பட்டு, குடும்ப ஆலோசனை நிபுணர்கள் மூலம், அந்த புகார்களின் உண்மைத் தன்மை ஆராயப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.இந்த விசாரணை அறிக்கைகள், போலீஸ் டி.சி.பி., அல்லது அவருக்கு இணையான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு, கவுன்சிலிங் முடிவுகள் திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க, சட்ட விதிமுறை, 498 "ஏ' பிரிவை பயன்படுத்தலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நியாயம்:இச்சட்டம், தற்போது நாடு முழுவதும், அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தும் வகையில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், வன்கொடுமை, வரதட்சணை புகார்களில், நியாயம் கிடைக்கும்.வரதட்சணை கேட்காதவர்கள் மீது கூட, சிலர் தவறான புகார்கள் கொடுக்கும் போது, போலீஸ் உதவியுடன் அப்பாவி கணவர்கள், அவர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, மன உளைச்சல், பண விரயம்
ஆகியவையும் ஏற்படுகிறது.
புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், 498 "ஏ' பிரிவு, தவறாகப் பயன்படுத்துவது தவிர்க்கப்படும். நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று, பலரும் எதிர்பார்க்கின்றனர்.
பெங்களூரு சட்டம்-ஒழுங்கு ஏ.சி.பி., சுனில் குமார் கூறுகையில், ""பெண்கள் கொடுக்கும் புகார்களை பதிவு செய்ய, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், பெண் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். புகார்கள் பதிவு செய்யப்பட்டு, குடும்ப கவுன்சிலிங் நிபுணர்களிடம் அனுப்ப, டி.சி.பி., உதவி செய்வார். சில வழக்குகளில், குழந்தைகள் சம்பந்தப்பட்டிருப்பின், அவர்களை தற்காலிகமாக பராமரிக்கவும், பாதுகாக்கவும், குழந்தைகள் நலத்துறை கமிட்டி பொறுப்பேற்கும்,'' என்றார்.
இந்த சட்டம், கர்நாடகாவில் உடனடியாக அமல்படுத்தப்பட்டது போன்று, தமிழகத்திலும் அமல்படுத்தப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பெண்களை அசிங்க படுத்திய வரதட்சினையை ஒடுக்க நினைத்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி, திருமணம் ஆன நான்காவது நாளில் விவாகரத்து கேட்டு கணவன் வீட்டாரை நாசம் செய்த உதாரணங்களும் உண்டே. அவர்களுக்கு இந்த மாதிரி ஒரு சட்டம் அமைந்தால்தான் அமைதி, தீர்வு. சட்டமும் நீதியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர எந்த பாலரும் அடுத்தவரை தவறான புகார் கொடுப்பதன் மூலமே ஆதாயம் அடைய முடியும் என்ற நோக்கு இருக்குமாயின் அந்த சமத்துவம் நிச்சயமாக பாதிக்கப்படும். என்னுடைய ஆருயிர் நண்பன் இவ்வாறு பாதிக்க பட்டுள்ளான். அந்த வேதனையின் வெளிப்பாடுதான் இந்த கருத்து....
பெரும்பாலும் பெண்களே தமது தாய்வீட்டிலிருந்து பணம் கறக்க புகுந்த வீட்டின் மேல் பழிபோடுகின்றனர். வரதட்சிணையே பெண்களில் பேராசையின் விளைவுதான். ஏகப் பட்ட செலவு செய்து கடன் கூட வாங்கி திருமணம் செய்து கொடுத்தபின்னும், பிறந்த வீட்டுக் சொத்தில் பங்கு கேட்க , வரதட்சணை சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர். பழியோ மாப்பிள்ளை வீட்டாரின் பேரில் திருமணத்துக்கு முன்பே மணமகளான பெற்ற பெண்ணிடமே சொத்தில் பங்கு வேண்டாம். ஏற்கனவே செய்த சீர் போதும் என எழுதி கட்டாயப் படுத்தி விடுதலைப் பத்திரம் வாங்க வேண்டிய நிலைமை வரதட்சிணைக்கு உள்ள தண்டனையைவிட அதனை துஷ்பிரயோகம் செய்வோருக்கு பத்து மடங்கு தண்டனை அளிக்கவேண்டும்
கிராமத்தில் உள்ள படிக்காதவர்களுக்கு தனி சட்டமும், நரகத்தில் உள்ள மெத்த படித்தாக சொள்ளபடுபவர்களுக்கு தனி சட்டமும் வேண்டும். கிராமங்களில் அதிகம் பாதிக்கபடுவோர் பெண்கள் தான் என்றால், நகரத்தில் அதிகம் பாதிக்கபடுவோர் ஆண்கள் ? கிராமத்தில், பெண்கள் தங்கள் கணவர் பெயரை சொல்லவே சங்கடபடுவார்கலாம். நகரத்தில், பெண்கள் தங்களுக்கு கணவன் இருக்கிறார் என்று சொல்லவே சங்கடபடுவார்கலாம் :)

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.