இந்த ஆண்டு நிகழ இருக்கும், வானிலை மாற்றத்தை எண்ணி இப்போதே விவசாயிகள் வயிற்றில் புளியை கரைக்கிறது. இதற்கு காரணம், எல் நினோ என்ற வானிலை மாற்றம் தான்.
எல் நினோ என்றால் என்ன:என் நினோ என்பது ஸ்பானிஷ் மொழிச் சொல். இதற்கு சிறு பையன் என்று பொருள். பரந்த வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடல், உலகிலேயே அதிக சூரிய ஒளியை பெறுகிறது. இந்த ஒளி, வெப்பமாக கடலினுள் சேர்த்து வைக்கப்படுகிறது. பொதுவாக, பசிபிக் காற்று கிழக்கிலிருந்து மேற்காக வீசி, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி, வடகிழக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் இருந்து வெப்ப மேற்பரப்பு உடைய நீரை மேற்கு நோக்கி கொண்டு சேர்க்கிறது. இதற்கிடையே, கிழக்கு பசிபிக் பகுதியிலிருக்கும் குளிர்ந்த நீர், மேற்பரப்பிற்கு வரும். இது பூமத்திய ரேகை பகுதியில் சேர்ந்து கிழக்கு மேற்கு பகுதியில் வெப்பநிலை மாறுபாட்டை உருவாக்கும்.
பசிபிக் காற்று, வடதுருவத்தில் வசந்த காலம் துவங்கியதும், தனது வலிமையை இழக்கும். குறைந்த அளவிலான தண்ணீர் மேற்கு நோக்கி தள்ளப்பட, மத்திய, கிழக்கு பசிபிக் பகுதியிலுள்ள நீர் வெப்பமேற துவங்கும். ஆசியாவில் கோடை மழை ஏற்படும் போது, இந்த காற்று மீண்டும் வலிமை பெறும். இதனால் வெப்பச் சமநிலை மீண்டும் பராமரிக்கப்படுகிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹம்போல்ட் நீரோட்டம், தென் அமெரிக்காவின் மேற்கு கரையோரமாக, வடக்கு திசையில் நகர்ந்து பூமத்திய ரேகை பகுதிக்கு சென்று விடும். இதனால், வெதுவெதுப்பான வறண்ட காற்று பெரு, ஈக்வேடார் போன்ற நாடுகளின் கரையோரத்தை அடையும்.
இந்த வெப்ப நீரோட்டம் கடலின் அடியில் இருக்கும் குளிர்ந்த நீரை மேலே கிளப்பிவிடும். இது தான் எல் நினோ என அழைக்கப்படுகிறது. பொதுவாக 3 முதல் 7 ஆண்டு இடைவெளியில் இந்த வெப்பநிலை மாற்றம் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தோன்றும் இந்த எல் நினோ, காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது செப்டம்பர் மாதமே தோன்றும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு, மேற்கு பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை மாறுபாட்டை கணக்கில் கொண்டு, எல் நினோவின் தாக்கம் அளவிடப்படுகிறது. எல் நினோவால், பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் 0.5 டிகிரி செல்சியஸ், வெப்பநிலை மாறுகிறது.
திசை மாறும் காற்று:எல் நினோ ஏற்படும் போது, கிழக்கு மேற்காக வீசும் காற்றின் திசை நேர்மாறாக மாறி, மேற்கு கிழக்காக வீசுகிறது. இதனால் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பசிபிக் பகுதிகளின் வெப்பநிலை தலைகீழாக மாறுகின்றன. மேற்கத்திய பகுதிகள், வழக்கமாக ஈரப்பதத்தையும் மிதவெப்பத்தையும் அதிகமழையையும் கொண்டிருக்கும். ஆனால், எல் நினோ தாக்கத்திற்கு பின் தென் கிழக்கு ஆசியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா பகுதிகள் ஈரப்பதம் இல்லாமல் குறைந்த மழையையும் வறண்ட நிலையையும் அடையும்.
முதல் அறிகுறி:
* இந்தியப் பெருங்கடல், இந்தோனேசியா, ஆஸ்திரேலிய கடல்களின் மேற்பரப்பில் அழுத்தம் அதிகரிக்கும்.
* மத்திய கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளின் காற்றழுத்தம் வீழ்ச்சியடையும்.
* தெற்கு பசிபிக் பகுதிகளில் காற்று (டிரேடு வின்டு) வலுவிழக்கும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.