E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : ஜூலை 10,2012,00:28 IST
கருத்துகள் (4)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

வரும் 12ம் தேதி நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,), கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. எட்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின்படி தேர்வு என்றாலும், பிளஸ் 2 நிலையில், கேள்விகள் கடுமையாகவும், சிந்தித்து விடை அளிக்கும் வகையிலும் இருக்கும் என கூறப்படுகிறது. திணறடித்த குரூப்-4:கடந்த 7ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப்-4 தேர்வில், 10 லட்சம் பேர் பங்கேற்றனர். 10ம் வகுப்பு கல்வித்தகுதி நிலையில் நடக்கும் தேர்வு என்றாலும், மிகக் கடுமையாக, தேர்வர்களை குழப்பும் வகையில், நீண்ட நேரம் சிந்தித்து விடை அளிக்கும் வகையில், கேள்வித்தாள் அமைந்தது. இதனால், தேர்வெழுதியவர்கள் புலம்பி வருகின்றனர்.
குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு, பன்மடங்கு போட்டி எனும்போது, கடுமையான தேர்வு முறையை கையாளாவிடில், ஆட்களை

தேர்வு செய்வதில் சிரமம் ஏற்படும் நிலையும் உள்ளது.இந்நிலையில், 12ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தும், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. குரூப்-4 தேர்வெழுதிய தேர்வர்கள் பலர், டி.இ.டி., தேர்வையும் எழுத உள்ளனர். 10ம் வகுப்பு நிலையில் நடந்த தேர்வே அதிர்ச்சி அடைய வைத்ததால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் நடக்கும் தேர்வு எப்படி இருக்குமோ என, பீதி அடைந்து உள்ளனர். திறமையை சோதிப்போம்:ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை
பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியருக்கு, ஆரம்பக்கல்வி நிலையிலும்; ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியருக்கு, எட்டாம் வகுப்பு பாடத்திட்ட அளவிலும், தேர்வு நடக்க வேண்டும். எனினும், இரு பிரிவு ஆசிரியருக்குமே, பிளஸ் 2 பாடத்திட்ட நிலையில், கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

Advertisement

இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறும்போது, இருக்கும். ஆசிரியர் பணிக்கு வருபவரின் திறமையை சோதிக்கும் வகையிலும், சிந்திக்கும் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாகவும், கேள்விகள் இருக்கும்,'' என்றனர்.பட்டதாரி ஆசிரியருக்கு சவால்டி.இ.டி., தேர்வு, 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. கட்டாயக்கல்வி சட்டத்தின்படி, ஆசிரியர் பணியில் உள்ளவர்கள்மற்றும் ஆசிரியர் பணிக்கு செல்ல இருப்பவர்கள், தேர்ச்சி பெற, 90 மதிப்பெண் (60 சதவீதம்) பெற வேண்டும். இடைநிலை ஆசிரியரைப் பொறுத்தவரை, தேர்ச்சி பெற்றால் போதும். ஏனெனில், அவர்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்பட உள்ளனர்.ஆனால், பட்டதாரி ஆசிரியரைப் பொறுத்தவரை, முழுக்க முழுக்க மதிப்பெண் அடிப்படையில் தான் நியமிக்கப்பட உள்ளனர். எனவே, இடைநிலை ஆசிரியரை விட, பட்டதாரி ஆசிரியருக்கு, இந்த தேர்வு பெரும் சவாலாக இருக்கும் .- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
11-ஜூலை-201203:49:48 IST Report Abuse
P. Kannan தேர்வு கடுமையாகவும், தேர்ந்து எடுப்பதில் கறாராகவும் இருந்தால், எதிர் காலத்தில் மாணவர் தரம் தானாகவே உயரும். கல்வியை போதிப்பவர் மிகச்சிறந்தவராக இருக்கவேண்டும். இது ஒருவருக்கு வேலை கொடுக்கவேண்டிய பிரச்சினை அல்ல. மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க தகுதியானவரை தேர்ந்தெடுப்பதாகும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
MB KarthiKeyan Raja - Erode,இந்தியா
10-ஜூலை-201217:21:32 IST Report Abuse
MB KarthiKeyan Raja டியர் சார், நல்ல முடிவு தான். இருந்தாலும் சில சமுக விரோதிகள் ரூபாய் ஆறு லச்சம் பணம் கொடுத்தல் போதும் வேலை வாங்கி தருவதாக பணம் வசூலித்து வருகிறார்கள்... எது சரியாய்..............
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
APJ - Madurai,இந்தியா
10-ஜூலை-201212:54:55 IST Report Abuse
APJ appuram ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Diviya Rathi - jeddah,சவுதி அரேபியா
10-ஜூலை-201211:40:46 IST Report Abuse
Diviya Rathi தேர்வு எழுத பயப்படும் ஆசிரியர்கள் விளங்கும் தமிழக கல்வி துறை தமிழக மாணவர்களின் எதிர்காலம் பாவம் இனி இவர்களின் கைகளில் ..என்ன கொடுமைடா சரவணா ..?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.