E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012,23:24 IST
கருத்துகள் (5)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சரக்குகளை கையாள முடியாமல் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் நெருக்கடியில் இருக்கும் நிலையில், சென்னைக்கு அருகிலேயே கட்டி முடிக்கப்பட்டும் கூட, காட்டுப்பள்ளி துறைமுகம் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் கூட, சுங்க வரி சோதனை அலுவலகம் அமைப்பதற்குரிய ஒப்புதலை மத்திய அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், இந்த துறைமுகத் திறப்பு விழா தள்ளிப் போகிறது.
கால தாமதம் :சென்னை, எண்ணூர் ஆகிய இரண்டு துறைமுகங்களிலும் சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால், கப்பலில் வந்திறங்கும் சரக்குகளை, துறைமுகத்தை விட்டு வெளியில் கொண்டு வருவதற்கு மிகுந்த கால தாமதம் ஆகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக, சென்னைக்கு அருகே எண்ணூரில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் காட்டுப்பள்ளி என்ற கிராமத்தில், துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஐ.மு., கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தின் போது தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி இருந்தபோது, இதற்கான பணிகள் ஆரம்பமாகின.கட்டுமானத் துறையில் பெரிய அளவில் புகழ் பெற்று விளங்கும், "எல் அண்ட் டி' நிறுவனம் சார்பில் இந்த துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. காட்டுப்பள்ளி துறைமுகத்தின் உரிமையாளர் இந்த நிறுவனம் தான். இருப்பினும் இந்த திட்டத்தில், தமிழக அரசின் நிறுவனமான டிட்கோவுக்கும் பங்களிப்பு உள்ள வகையில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் ஆரம்பமாகின. டிட்கோ நிறுவனத்திற்கு இந்த நிறுவனத்தில் 10 சதவீதம் வரை பங்குகள் இருப்பதால், அரசாங்க துறைமுகம் போலவே கருதப்பட்டு வந்தது.
நெருக்கடி நீங்கும்:ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு, ஒரு துறைமுகத்திற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டன. வெறும் துறைமுகமாக மட்டும் இல்லாமல் கப்பல் கட்டும் வசதிகளும், சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்பட்டு வந்தது. இதனால், மிகுந்த எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் காட்டுப்பள்ளி துறைமுகம் பெற்றது. சரக்குகளை கையாள்வதில் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு உள்ள நெருக்கடிகள் விரைவில் நீங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஒப்புதல் இல்லை:ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த துறைமுகம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டும்கூட இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கு துறைமுகத்தில் அமைக்கப்படவேண்டிய சுங்கவரிச் சோதனை அலுவலகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காமல் இருப்பதே மிக முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. எந்த ஒரு துறைமுகமாக இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமாக விளங்குவது சுங்கவரிச்சோதனை அலுவலகம்தான்.கப்பலில் இருந்து வரும் சரக்குகளை சோதனையிட்டு அவற்றுக்கு சுங்கவரிச்சோதனை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே சரக்குகளை துறைமுகத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்லவே இயலும். ஆகவே ஒரு துறைமுகத்திற்கு ஆன்மா போல விளங்கும் சுங்கவரிச்சோதனை அலுவலகம் அமைப்பதற்குண்டான கட்டிடம், இயந்திரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த துறைமுகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் அரசின் ஒப்புதல் மட்டும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
காரணம் என்ன?சுங்கவரிச்சோதனையில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகுந்த பற்றாக்குறையாக உள்ளது. இதனால்தான் சுங்கவரிச் சோதனை அலுவலகத்துக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் மத்திய அரசு வட்டாரங்களில் காரணங்கள் கூறப்படுகிறது. பொதுவாக சுங்கவரிச்சோதனையில் ஈடுபட திறமைவாய்ந்த அதிகாரிகளே தேவைப்படுவார்கள். அதுபோன்ற அதிகாரிகள், தற்போது பிற துறைமுகங்களிலுமே கூட குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர். இதன்காரணமாக, காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.பொதுவாக சுங்கவரிச்சோதனை குறித்த விவகாரங்கள் எல்லாமே மத்திய அரசின் நிதித்துறை இலாகாவின் கீழ் வருகிறது. மத்திய நிதியமைச்சகம்தான் இவற்றுக்கு எல்லாம் அனுமதி அளித்திடவேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவரான பழனிமாணிக்கம்தான் மத்திய நிதித்துறையில் இணை அமைச்சராக உள்ளார். அதிலும் சுங்கவரித்துறை குறித்த விவகாரங்கள் எல்லாம் இவரது கட்டுப்பாட்டின் கீழ்தான் வருவதாக தெரிகிறது. இருந்தும்கூட என்ன காரணத்தினாலோ பிரச்னைகள் தீர்க்கப்பட்டு ,காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு சுங்கவரிச் சோதனை அலுவலகம் அமைப்பதற்கு தேவையான அனுமதி கிடைக்காமல் இருந்து வருகிறது.

Advertisement

மாற்று யோசனை:இதற்கிடையில் மாற்று ஏற்படாக சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் உள்ள சுங்கவரிச்சோதனை அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்ற யோசனையும் பரிசீலிக்கப்படுகிறது. ஆனாலும் ஒரு துறைமுகத்தின் அனுமதி பெற்று வந்து மற்றொரு துறைமுகத்திற்குவந்து சுங்கவரிச்சோதனை நடத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் கருதப்படுதால் காட்டுப்பள்ளி துறைமுகத்தின் சிக்கல் நீடித்தபடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெ., மன்மோகன்தேதி கிடைக்கலயா: ஆரம்பத்தில் இருந்தே இந்த துறைமுகம், அரசுக்கு சொந்தமான துறைமுகமாவே கருதப்பட்டு வருகிறது. தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்திற்கும் பங்குகள் இருப்பதால், சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலுமே அரசின் துறைமுகமாகவே முன்னிறுத்தப்பட்டு வந்தது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான துறைமுகம் என்றாலும், டிட்கோ சம்பந்தப்பட்டுள்ளதால் தமிழக முதல்வரை வைத்து திறப்புவிழா நடத்த வேண்டுமென்று அதிகாரிகள் விரும்புகின்றனர். ஆனால் எல் அன் டி நிறுவனமோ பிரதமரையும் அழைத்துவந்து திறப்பு விழா நடத்த வேண்டுமென கருதுகிறது. முதல்வருக்கும் பிரதமருக்கும் ஒருசேர தேதி கிடைக்காமல் இருப்பதாலேயே திறப்புவிழா தள்ளிப்போய்க் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆக விஐபி க்களின் தேதி கிடைக்காத காரணத்திற்காவே காலதாமதம் ஆகும் தமிழக திட்டங்களில் காட்டுப்பள்ளி துறைமுகமும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆந்திராவுக்கு போன கதை:நாட்டின் கிழக்கு கடற்கரை முழுவதும் மேலும் சில மிகப்பெரிய துறைமுகங்களை அமைப்பது என்ற முடிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டது. அப்போது இதே காட்டுப்பள்ளியைச் சுற்றியுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு துறைமுகம் அமைக்க முடிவானது.மத்திய அரசே பல்லாயிரம் கோடிகளை செலவு செய்து இங்கு துறைமுகம் கட்டுவதாக இருந்தது. இதனால் சென்னை, எண்ணூர் ஆகியவற்றோடு சேர்ந்து காட்டுப்பள்ளி துறைமுகமும் தமிழகத்துக்கு கிடைத்து இருக்கும். ஆனால் சில தலையீடுகள் காரணமாக கைநழுவி எல் அன் டி வசம் இந்த காட்டுப்பள்ளி போய்விட்டது. தமிழகத்தின் கிழக்கு கடற்கரைக்கு மத்திய அரசால் அமைக்கப்படவிருந்த அதே துறைமுகம், இப்போது ஆந்திராவுக்கு சென்றுவிட்ட சோகத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.
-நமது டில்லி நிருபர்-




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PARTHAN - Coimbatore,இந்தியா
25-ஜூலை-201203:27:40 IST Report Abuse
PARTHAN தமிழக முதல்வர் எதட்கேடுத்தாலும் மத்திய அரசுடன் முரண்டு பிடிப்பதை விட்டு ஆக்கபூர்வமாக அந்தஅந்த துறை காபினெட் அமைச்சருடன் கலந்துரையாடினால் இது போன்ற பிரச்சனைகளை எளிதிலும் விரைவிலும் முடிக்கலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Unmai Vilambi - Ambasamudram,இந்தியா
16-ஜூலை-201213:01:06 IST Report Abuse
Unmai Vilambi இங்கே ஒரு 5000 கோடி வீணாகிறது. கூடங்குளத்தில் ஒரு 13000 கோடி திறப்பு விழா காணாமல் வீணாகிகொண்டிருக்கிறது. மக்கள் வரிப்பணம் வீணாகாமல் அரசு வேகமாக செயலாற்ற வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Mohanadas Murugaiyan - Ras al Khaima,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-201214:15:36 IST Report Abuse
Mohanadas Murugaiyan அரசியலில இதெல்லாம் சாதாரணமப்பா என்ற கவுண்டமணி வசனம்தான் ஞாபகம் வருகிறது.முந்தைய ஆட்சியில் கட்டப்பட்ட தலைமை செயலகமும்,அண்ணா நூற்றாண்டு நூலகமும் என்ன ஆயின? பாதிக்கப்படும் பொதுமக்களை பற்றிய அக்கறை அவர்களுக்கு இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
14-ஜூலை-201212:01:11 IST Report Abuse
Hasan Abdullah PM க்கு கூட டைம் கிடைக்கும், ஆனால் நம்ம CM க்கு கொடநாட்டில் ரெஸ்ட் எடுத்து களைச்சி போய் மீண்டும் ரெஸ்ட் எடுக்கிறார்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201205:52:25 IST Report Abuse
மதுரை விருமாண்டி "சுங்கவரிச்சோதனையில் ஈடுபட திறமைவாய்ந்த அதிகாரிகளே தேவைப்படுவார்கள்" அது என்ன தெறமை ??
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.