Mysore ba is danger to our health | மைசூர்பாகு, காராபூந்தி உடலுக்கு அபாயம்: எச்சரிக்கிறது ஆய்வறிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மைசூர்பாகு, காராபூந்தி உடலுக்கு அபாயம்: எச்சரிக்கிறது ஆய்வறிக்கை

Updated : ஜூலை 14, 2012 | Added : ஜூலை 13, 2012 | கருத்துகள் (7)
Advertisement

சென்னை: மைசூர்பாகு, அல்வா, அதிரசம் போன்ற, பாரம்பரிய இனிப்பு வகைகளை, அளவிற்கு அதிகமாக உண்டால், உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என, ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கிறது.


இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில், உடல் பருமன் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. உடல் உழைப்பு இல்லாமல், பிட்சா, பர்கர், சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடும் பழக்கம், சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதே, இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.ஆனால், "மைசூர்பாகு, அல்வா, அதிரசம், காராபூந்தி, உருளை கிழங்கு சிப்ஸ் போன்ற, நம் பாரம்பரிய இனிப்பு, கார வகைகளிலும், அளவிற்கு அதிகமாக கொழுப்புச் சத்து உள்ளது' என, "கன்சியூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா' எனும், தன்னார்வ நுகர்வோர் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.


இதுகுறித்து, இந்த அமைப்பின் பொதுச் செயலர் ராஜன் கூறியதாவது:ஒரு நாளைக்கு, நாம் உண்ணும், 100 கிராம் அளவுள்ள உணவில், 20 கிராம் வரை, கொழுப்புச் சத்து இருக்கலாம் என, உணவு ஆலோசகர்கள் கூறுகின்றனர்.நம் பராம்பரிய இனிப்பு, கார வகைகளில், கொழுப்புச் சத்து எவ்வளவு உள்ளது என்பதை அறிய, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள, "ஸ்வீட் ஸ்டால்'களில் விற்கப்படும் குறிப்பிட்ட இனிப்பு, கார வகைகளை ஆய்வுக்கு உட்படுத்தினோம்.இவற்றில் பெரும்பாலான தின்பண்டங்களில், அளவுக்கு அதிகமாக கொழுப்புச் சத்து உள்ளது, ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. எனவே, பராம்பரிய இனிப்பு, கார வகைகளையும், நாம் அளவோடு உண்ண வேண்டும்.இல்லையெனில், உடல் பருமன், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் சேர்க்கப்படும் எண்ணெய், நெய் மற்றும் கார்போ ஹைட்ரேட் சம்பந்தப்பட்டமாவுகள், இந்த அபாயத்தை அதிகரிக்கின்றன. இவ்வாறு ராஜன்கூறினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - chennai,இந்தியா
14-ஜூலை-201218:42:59 IST Report Abuse
Natarajan Ramanathan அந்த காலத்துல எல்லா மக்களும் மைசூர் பாகு அதிரசம் எல்லாம் சாப்பிட்டு நன்றாகத்தான் இருந்தார்கள். அனால் ஏதாவது விஷேசம் என்றால்தான் இனிப்பு சாப்பிடுவார்கள். சும்மா சும்மா இனிப்பு சாப்பிடும் வழக்கம் கிடையாது. எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அமிதமும் விஷம்தான்
Rate this:
Share this comment
Cancel
Madukkur Nesan - Madukkur ,இந்தியா
14-ஜூலை-201214:06:50 IST Report Abuse
Madukkur Nesan அளவுக்கு அதிகம் நஞ்சு இதை சொல்ல ஒரு அமைப்பு தேவையா ? பழமொழி மறந்த கூட்டம். முதாதையரின் அறிவுரைகளை மறந்து தின்ன கூடாததை தின்னு விட்டு இப்போது அமைப்பு அமைத்து அறிவுரை கூற வந்து உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
nagainalluran - Salem,இந்தியா
14-ஜூலை-201209:44:40 IST Report Abuse
nagainalluran அந்த காலத்துல எல்லா மக்களும் மைசூர் பாகு அதிரசம் எல்லாம் சாப்பிட்டு நன்றாகத்தான் இருந்தார்கள். இது நம் பாரம்பரிய உணவு முறையை நம்மிடம் இருந்து பிரித்து வெளி நாட்டு உணவு முறையை திணிக்க கர்பரேட்டுகள் செய்யும் குடாக்கு வேலை
Rate this:
Share this comment
Narayanan Gopalan - Chennai,இந்தியா
14-ஜூலை-201217:18:07 IST Report Abuse
Narayanan Gopalanஅதேதான் சந்தேகமே இல்லை.கன்சூமர் அமைப்பே சோரம் போனது மிகவும் வேதனைக்குரியது....
Rate this:
Share this comment
Jackson Burrow - Chennai,இந்தியா
14-ஜூலை-201220:32:29 IST Report Abuse
Jackson Burrow"கார்பரேட்டுகள் செய்யும் குடாக்கு வேலை" - கார்பரேட்டுகள் வில்லன்கள் தாம், சந்தேகமில்லை. ஆனால் இந்த செய்தியில் corporation எந்த குடாக்கு வேலையும் செய்வதாக தெரியவில்லை. நண்பர் natarajan சொல்வது போல், "அந்த காலத்துல எல்லா மக்களும் மைசூர் பாகு அதிரசம் எல்லாம் சாப்பிட்டு நன்றாகத்தான் இருந்தார்கள். ஆனால் ஏதாவது விஷேசம் என்றால்தான் இனிப்பு சாப்பிடுவார்கள். சும்மா சும்மா இனிப்பு சாப்பிடும் வழக்கம் கிடையாது."....
Rate this:
Share this comment
Cancel
EGAMURTHY.K Kandasamy - coimbatore,இந்தியா
14-ஜூலை-201208:16:42 IST Report Abuse
EGAMURTHY.K Kandasamy நல்ல கருத்து. ஆனால் செவி சாய்க்கவேண்டுமே.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
14-ஜூலை-201207:43:45 IST Report Abuse
villupuram jeevithan மைசூர்பாகு, அல்வா, அதிரசம் இவைகளை தினமும் உட்கொள்ளுவதில்லையே. பிட்சா, பர்கர், சாக்லெட், ஐஸ்கிரீம் போல் எதுவும் அளவுக்கு அதிகம் கூடாது தான். அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டதின் விளைவுதான் சிறைநிரப்பும் போராட்டத்தில் விட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை