Terrorism will be Contained: Chidambaram | பிரதமர் கவனிக்கிறார்; வளர்ச்சி வரும்: ஜோசியம் சொல்கிறார் சிதம்பரம்| Dinamalar

பிரதமர் கவனிக்கிறார்; வளர்ச்சி வரும்: ஜோசியம் சொல்கிறார் சிதம்பரம்

Updated : ஜூலை 15, 2012 | Added : ஜூலை 13, 2012 | கருத்துகள் (30)
Advertisement
பிரதமர் கவனிக்கிறார்; வளர்ச்சி வரும்: ஜோசியம் சொல்கிறார் சிதம்பரம்,Terrorism will be contained, says Chidambaram‎

சண்டிகர் : ""பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், தேவையான நடவடிக்கைகளை, பிரதமர் மன்மோகன்சிங் மேற்கொள்வார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார். சண்டிகரில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று கூறியதாவது:பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு, இதற்கு முன் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுவது, மிகவும் தவறானது. பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு, இதற்கு முன்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இன்னும் அதிகமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை கண்டறிந்துள்ளோம். பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், தேவையான நடவடிக்கைகளை, பிரதமர் மன்மோகன்சிங் மேற்கொள்வார். நிதிப் பற்றாக்குறையை போக்குவதற்கும், சேமிப்பு மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும், என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை, பிரதமர் அடையாளம் கண்டுள்ளார். அவை, முறையாக செயல்படுத்தப் படும். நம் நாட்டின் பொருளாதாரம், மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்.

சட்ட விரோதம்:உ.பி.,யில் உள்ள ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து அமைப்பினர், பெண்களுக்கு எதிராக, சட்ட விரோதமாக, கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து, அதை அமல்படுத்த முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. ஜனநாயக சமுதாயத்தில், இதுபோன்ற சட்ட விரோத உத்தரவுகளுக்கு இடம் இல்லை. உ.பி.,யின் பாக்பாத் கிராமத்தில், இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கு மாநில அரசு உத்தரவிடும் என, நம்புகிறேன்.

ஆபரேஷன் புளூ ஸ்டார்:பஞ்சாபில் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கைகளின்போது கொல்லப் பட்டோருக்கு, பொற்கோவிலில் நினைவிடம் அமைக்கப்படுவதாக வெளியான தகவல், மத்திய அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. அங்கு மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகிறோம். சிரோன்மணி குருத்வாரா பிரபந்திக் கமிட்டி தான், இதை செய்து வருவதாகவும், மாநில அரசுக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் என்னிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம்:பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து இன்னும் நாம் விடுபடவில்லை. ஆனாலும், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. இந்த விஷயத்தில், தனிப்பட்ட நபர்களையும், அமைப்புகளின் நடவடிக்கைகளையும், மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், பெரிய அளவிலான பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.

உறவு:மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண்பதற்காகவும், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும், பிராந்திய கவுன்சில்களை, மேலும் பலப்படுத்த வேண்டும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஜூலை-201221:48:54 IST Report Abuse
g.s,rajan பணவீக்கம் பெருமளவு அதிகரித்த நேரத்திலும் கிட்டத்தட்ட பதிமூன்று சதவீதத்திற்கு மேலாக சென்றபோதும் விலை வாசி குறையல , தற்போது பத்து சதவீதத்திற்கு கீழே குறைந்துள்ள போதிலும் விலைவாசி துளிக்கூட குறைய வில்லை. என்ன பண வீக்கமோ, என்ன கருமமோ? தெரியல . என்ன புள்ளி விவரமோ மக்களின் மண்டைக்கு ஒண்ணும் புரியல. பாழாப்போன புள்ளி விவரம் கூறுவது பொய்யா ?மொத்தத்தில் நேர்மையாகவும் ,உண்மையாகவும் உழைத்து சம்பாதிக்கும் பணத்திற்கு மதிப்பு இல்லை ,குறுகிய காலத்தில்,குறுக்கு வழியில் முறைகேடாகவும் ,சட்ட விரோதமாகவும் சுருட்டும் பணம் உண்மையான உழைப்பின் மதிப்பை, கௌரவத்தை குலைத்து விட்டது மற்றும் சிதைத்துவிட்டது என்பதுதான் நிதர்சனம் ....இன்னும் உங்களை நம்ப மக்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு ?விலைவாசி குறையும் என்ற நம்பிக்கையில் மளிகை கடை வாசலில் மக்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தால் என்ன ஆவது ?சிந்திப்பர சிதம்பரம் ? ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
hmt.ansari - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-201221:29:54 IST Report Abuse
hmt.ansari தேவை இல்லாமல் திரு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Anand VG - chennai,இந்தியா
14-ஜூலை-201221:29:01 IST Report Abuse
Anand VG சிதம்பரம் சொல்வது முற்றிலும் சரியே. பிரதமர் கவனித்தால் வளர்ச்சி நிச்சயம் வரும். அவர் ராஜாவை தட்டி கொடுத்து கவனித்தார். இப்போ ராஜா பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி. கல்மாடியை கவனித்தார். அவரும் நல்ல வளர்ச்சி அடைந்தார். இந்த list-இல் சோனியா, சரத் பவார், சிதம்பரம் etc இருக்கிறார்கள். So, பிரதமர் கவனித்தால், வளர்ச்சி வரும்...ஆனால் யாருக்கு என்று தான் தெரியாது.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
14-ஜூலை-201218:47:32 IST Report Abuse
Natarajan Ramanathan he was elected by fraudulent means in sivaganga. by declaring that prime minister is watching he means that NOTHING WILL HAPPEN. PRIME MINISTER WILL SIMPLY "WATCH". unless chidambaram is removed from cabinet, congress will bait the dust in 2014 elections.
Rate this:
Share this comment
Cancel
gnanasekaran - manama ,பஹ்ரைன்
14-ஜூலை-201218:35:28 IST Report Abuse
gnanasekaran சிதம்பரத்தை ஜோசியராக்கி விட்டீரே தினமலர். கொஞ்சம் மனசாட்சியோடு நடந்து கொள்ளவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Uva Raj - Chennai,இந்தியா
14-ஜூலை-201216:09:40 IST Report Abuse
Uva Raj அப்ப இவர் எதுக்கு ????/
Rate this:
Share this comment
Cancel
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-201215:35:15 IST Report Abuse
S. ரெகுநாதன் என்னிக்கு பொருளாதார மேதை ஜோசியரானார்? யாராவது கிளி இருந்தால் பெட்டியில் அடைத்து கொடுங்கப்பா. அடுத்த தேர்தலுக்குள் மஞ்சத்துண்டு சகிதமாய் மரத்தடி ஜோசியம் சொல்லட்டும். நாட்டு நிலைமையை படு பாதாளத்தில் கொண்டு தள்ளிய சிதம்பரம் அமைச்சக அறிவிப்பில்லாமல் நிதி மற்றும் உள்துறை இரண்டையும் கையாளுகிறார் என்று சொல்லாமல் சொல்கிறார் மௌனகுரு மன்மோகன்சிங். இந்தியா மக்கள் பாடு அடுத்த 2 வருடம் கோவிந்தா கோவிந்தா...
Rate this:
Share this comment
Cancel
Rajesh Kannan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-201213:38:31 IST Report Abuse
Rajesh Kannan ஒண்ணும பண்ண போவது இல்லைன்னு வெளிப்படையாக சொல்லி இருக்கலாம் இதற்க்கு
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
14-ஜூலை-201210:56:11 IST Report Abuse
K Sanckar ஜோசியம் சொல்வதற்குமந்திரி வேண்டாம். ஜோச்யரே போதும். இவர் நிதிமந்திரி ஆகபோகிறார். ஆகவேதான் இந்த காக்கா பிடிக்கிற வேலை எல்லாம். ஒரு பொருளாதார நிபுணன் என்றால் எப்படி கீழே தள்ளப்பட்ட பொருளாதாரம் மேலே தூக்கி நிறுத்தப்படும் என்று புள்ளி விவரங்கள் உத்திகள் ஆகியவற்றை விளக்கி சொல்ல வேண்டும இவர் எப்போதுமே காதில் பூ சுற்றுபவர் தானே. படித்தவர்கள் மத்தியில் இவர் பேச்சு எடுபடாது.
Rate this:
Share this comment
Cancel
Sathiya Arunachalam - Tirunelveli,இந்தியா
14-ஜூலை-201210:36:11 IST Report Abuse
Sathiya Arunachalam பாரு பாரு நல்ல பாரு பயாஸ்கோப் படத்தை பாரு..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை