திருவனந்தபுரம்:கேரளாவில் ஓடும் நதிகள் மாசடையாமல் பாதுகாக்கவும், நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், மணல் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக, நதிகள் பாதுகாப்பு என்ற புதிய சட்டம் இயற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளதாக, மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் சட்டசபையில் தெரிவித்தார்.
கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று காலை கேரள காங்கிரஸ் (மானி) கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஜெயராஜ் எழுப்பிய கேள்விக்கு, மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் பதிலளித்ததாவது:மாநிலத்தில், ஓடும் அனைத்து நதிகளையும் பாதுகாக்க வேண்டும். நதிகள் மாசடையாமலும், அவற்றின் மண் மற்றும் நீர் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும், 44 நதிகளில் மண் அள்ளப்படுவது மாநில அரசுக்குப் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.ஆற்று மணலுக்கு மாற்றாக, கட்டடப் பணிகளுக்கு எம். சான்ட் முறையை கடைபிடிப்பது குறித்தும், அதை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நதிகளைப் பாதுகாக்க, புதிய சட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு அமைச்சர் ஜோசப் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கேரளாவின் 50 % மக்கள் தொகையினர் வெளி மாநிலங்களிலோ, வெளிநாட்டிலோதான் வாழ்கிறார்கள். அவர்கள் கொண்டுவந்து குவிக்கும் அந்நிய செலாவணிவருடத்துக்கு 50 ஆயிரம் கோடிகளுக்கு மேல். மேலும் மரங்களும் மழைவளமும் நிறைந்துள்ளது. விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்வதில்லை. பாரம்பரியங்கள் காப்பாற்றபடுகின்றன. எங்கு சென்றாலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் வாழ தயாராக் உள்ளனர்.
NRI களை நம்பி அங்கு செய்யப்படும் தொழில்கள் சிறப்பாக (tours & travels , transport)நடக்கின்றன. எந்த ஒரு மிடில் ஈஸ்ட் கம்பனியும் ஆள் சேர்ப்பு என்றால் calicut அல்லது கொச்சிக்குதான் முதலில் வருகிறார்கள். நீராதாரத்தை பாதிக்கும் coke தொழில்சாலையை விரட்டினார்கள். பெரிய அளவில் தொழில் வளர்ச்சி இல்லாவிட்டாலும் தேவைப்படும் பொருட்களை வாங்கிகொள்ளும் பணபலம் உள்ளது. எனவேதான் இன்னமும் கேரளா பசுமையாக உள்ளது.
அவனவன் அவனது மாநிலத்தை தான் பார்ப்பான், கடந்த ஆட்சியில் செயல்படுத்த பட்ட தமிழக நதிகள் இணைப்பு திட்டம் எந்த அளவில் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை, நாம், நம்முடைய ஆறுகளை இணைத்தாலே, மழை காலத்தில் கடலில் வீணாக கலக்கும் நீரை தடுத்து, நிலத்தடி நீரின் அளவை உயர்த்தலாம், ஓரிரண்டு ஆண்டுகள், மொத்த நீரும் கடலில் கலக்கா வண்ணம் பார்த்து கொண்டால், நீர் வழி போக்குவரத்தை எற்படுதல்லாம், அது மாநிலத்தை சிறந்த சுற்றுலா தளமாக மாற்றுவதோடு, சாலை போக்குவரத்து நெரிசலை கொஞ்சம் குறைக்கமுடியும், இந்த திட்டம் திரு. அப்துல் கலாம் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட திட்டமாகும், ஆனால் இந்த திட்டம் இந்த ஆட்சியில் எந்நிலையில் இருக்கிறது என்பதை யாராவது அறிந்தால் தயவு செய்து சொல்லும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.