Jaya slams Central government and Karunanidhi on Sri Lankan airmen training issue | புலி போல பாயாமல் சுண்டெலி போல் பணிவதா? முதல்வர் பாய்ச்சல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

புலி போல பாயாமல் சுண்டெலி போல் பணிவதா? முதல்வர் பாய்ச்சல்

Updated : ஜூலை 15, 2012 | Added : ஜூலை 13, 2012 | கருத்துகள் (83)
Advertisement
புலி போல பாயாமல் சுண்டெலி போல் பணிவதா? இலங்கை விவகாரத்தில் முதல்வர் பாய்ச்சல்,Jaya slams Central government and Karunanid

சென்னை:"இலங்கை அரசிடம், புலி போல் பாய வேண்டிய மத்திய அரசு, சுண்டெலி போல் பணிந்து செல்வது வருந்தத் தக்கது' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஒட்டுமொத்த தமிழர்களின் கடும் எதிர்ப்பு; எனது கடும் கண்டனம் காரணமாக, இலங்கை விமானப் படை வீரர்களுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்ப பயிற்சியை, சென்னை தாம்பரம் விமானப் படை நிலையத்திலிருந்து, பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப்படை நிலையத்திற்கு மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகவல் கிடைத்தவுடன், இலங்கை வீரர்கள் எவருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக் கூடாது; அவர்களை, உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று, நான் மத்திய அரசை வலியுறுத்தினேன்.

மீண்டும் நிரூபணம்:ஆனால், "தமிழினத் தலைவர்' என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு, தமிழினத்தை, இலங்கை அரசு அழிக்க காரணமாக இருந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, மத்திய அமைச்சர் பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தில்,"2 ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு, ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில், "இலங்கை ராணுவத்திற்கு, தமிழகத்திலேயே பயிற்சி அளிக்காமல், வேறு மாநிலத்தில் பயிற்சி அளித்தால்...' என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு,"அப்படி பயிற்சி அளிக்க முன் வந்தால், அப்போது பார்ப்போம்' என்று நழுவலாகவும் பேசியிருக்கிறார்.

இதை நினைக்கும் போது, முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக மத்திய அரசை எதிர்த்து, மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கும் என அறிவித்து, அதை கேரள அரசுக்கு எதிரான, போராட்டமாக மாற்றி, கடைசியில், அதையும் கைவிட்ட நிகழ்ச்சி தான் நினைவுக்கு வருகிறது. தன் நடவடிக்கைகள் அனைத்தும், கபட நாடகங்கள் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் கருணாநிதி.

வியப்பை ஏற்படுத்தாது:இவரின் இந்த நடவடிக்கைகள், "உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம்' என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகின்றன. தமிழ் இனத்தின் மீது, கருணாநிதிக்கு, உண்மையிலேயே அக்கறை இருந்தால், தான் தாங்கிப் பிடித்திருக்கும், மத்திய அரசை, வற்புறுத்தி, பயிற்சிக்காக இந்தியா வந்திருக்கும், இலங்கை விமானப் படை வீரர்களை, உடனே திருப்பி அனுப்ப வலியுறுத்தி இருக்க வேண்டும்.ஆனால் தனக்கும், தன் குடும்பத்திற்கும், பாதிப்பு ஏற்படும் போதெல்லாம், மத்திய அரசை மிரட்டி, சாதிக்கும் திறமை படைத்த கருணாநிதி, இலங்கை தமிழர் நலனுக்காக, அவ்வாறு செயல்படாதது, அவரைப் பற்றி அறிந்த எவருக்கும் வியப்பை ஏற்படுத்தாது."புலி போல் பாய வேண்டிய மத்திய அரசு, சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிந்து செல்வது, வருந்தத் தக்கது என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை விமானப்படை வீரர்களை, உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மத்திய அரசை மீண்டும் வற்புறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manoharan - chennai,இந்தியா
19-ஜூலை-201211:37:10 IST Report Abuse
manoharan இவர் பெரிய சூரப்புலி. காங்கிரஸ்வுடன் ஒட்ட பார்த்து கொண்டு இருந்தபோது எல்லாம் வாய் திறக்க வில்லை. சோனியா சேர்க்க மாட்டேனென்று விரட்டி அடித்த பின்பு தைரியம் வந்து விட்டதோ. இந்த கதையெல்லாம் விசிலடிச்சான் குஞ்சிகளுக்கே. ஈழ தமிழர் கொன்று குவிக்க பட்டபோது (2009 ) இந்த சூரப்புலி சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன் " போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது இயற்கையே"
Rate this:
Share this comment
Cancel
senthil rao - industriel area, street 37,கத்தார்
14-ஜூலை-201222:47:44 IST Report Abuse
senthil rao அம்மானா சும்மா இல்லடா பெண் சிங்கம்
Rate this:
Share this comment
Cancel
maha - bangalore,இந்தியா
14-ஜூலை-201214:03:51 IST Report Abuse
maha அரசியல் சண்டைகளை விட்டு சற்று யோசியிங்கள் . உலகின் அடுத்த பிளாஷ் பாயின்ட் , தெற்கு ஆசியா தான் . கோல்ட் வாருக்கு பிறகு ஐரோப்பா தனது முக்கியத்துவத்தை இழந்து விட்டது . அமெரிக்கா வுக்கு அடுத்த பவரான சைனா இங்கு இருப்பதால் , இங்கு தான் உலகின் அனைத்து உட்டலாக்கடி வேலைகளும் நடக்கும் .சைனாவுடன் நாம் எவ்வளவுதான் மோதலை தவிர்த்தாலும் , சைனாவின் சூப்பர் பவர் ஆசை நம்மை மோதலுக்கு இழுத்தே இழுக்கும் .எனவே நமது குளோபல் கஊட்டணி களில் மற்றம் வேண்டும் , அமேரிக்கா பக்கம் செல்லவேண்டும் அன்றால் சென்றுதான் ஆக வேண்டும் . இலங்கை போன்ற எலிகளை வைத்து சைனா விளையாட்டு காட்டினால் , பயப்படாமல் எதிர் கொள்ள வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Puthiyavan Raj - New Delhi ,இந்தியா
14-ஜூலை-201214:00:36 IST Report Abuse
Puthiyavan Raj வழக்கை தைரியமாக புலி போல சந்திக்காமல் 200 வாய்தாக்கள் வாங்கி எலி போல பதுங்குவந்து ஏனோ?
Rate this:
Share this comment
Cancel
Maali Raja - Tuticorin,இந்தியா
14-ஜூலை-201212:59:27 IST Report Abuse
Maali Raja சுண்டெலியாக இருந்தாலும் மலையையும் குடைந்தி செல்லும் சதி கொண்டது.
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
14-ஜூலை-201212:58:29 IST Report Abuse
saravanan சரி, இறுதி போரின் போது மஞ்சத்துண்டு ஒன்னும் செய்யல...... இந்த பச்சை பாட்டி என்ன செஞ்சிதுன்னு யாராவது சொல்றீங்களா??? அப்பவும் இதே மாதிரி கொடநாடுதானே??? இப்ப மட்டும் எங்கிருந்து வந்தது திடீர் பாசம்????
Rate this:
Share this comment
Cancel
Mani Ramasamy - Jurong East,சிங்கப்பூர்
14-ஜூலை-201212:54:14 IST Report Abuse
Mani Ramasamy இந்தியா கண்டிப்பாக புலி இல்லை. சுண்டெலியாக, மன்புழுவாக, சொறி நாய் போல இருக்கும். இது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை. கலாம் காணும் வல்லரசு கனவு தூக்கத்தை கெடுக்கும். - மணி சிங்கை
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
14-ஜூலை-201212:31:15 IST Report Abuse
T.C.MAHENDRAN மத்திய அரசு புலியுமல்ல,சுண்டெலியுமல்ல, தமிழர்களின் ரத்தத்தை மட்டும் உறிஞ்சும் அட்டை என்பதுதான் சரி .
Rate this:
Share this comment
Cancel
ram prasad - Sri rangam,இந்தியா
14-ஜூலை-201211:04:02 IST Report Abuse
ram prasad இதை கொட நாட்டிலே படுத்துகிட்டே சொன்னீங்களா ? நீங்க பால் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு , மின் கட்டண உயர்வு ன்னு மக்கள் மேல் புலி போல் பாய்ந்தது போல பாயணும் ஒரு பய பிழைக்க கூடாது
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
14-ஜூலை-201210:21:59 IST Report Abuse
JAY JAY நம் அரசியல்வாதிகளில் யாரும் புலி கிடையாது......அனைவருமே புளி தான்...அதுவும் இடிச்ச புளி.....அதானால் தான் இந்தியர்களின் சுதந்திரத்துக்கு பின்னுள்ள வாழ்கை புலிவாலை பிடித்தது போலவும், இந்தியர்களின் வயிறு புளியை கரைத்தது போலவும் உள்ளது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை