"யாரைக்கேட்டு என் தொகுதிக்குள் வந்தீங்க...?' அமைச்சரை மிரட்டிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை :கோவையில், பொதுமக்கள் முன்னிலையில், தமிழக உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை "மிரட்டிய' அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சியின் சிறப்பு தூய்மைக்குழு துவக்க விழா நேற்று காலை நடந்தது. உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் முனுசாமி, மேயர் வேலுசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட மருதம் நகரில் சமநிலைத் தொட்டி கட்டுமான பணியை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அப்போது, அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த, கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, "யாரைக்கேட்டு என் தொகுதிக்குள் வந்தீங்க...?' எனக்கேட்டு அமைச்சருடன் வாக்குவாதம் செய்தார்.

அருகிலிருந்த கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., துரைசாமி, ஆறுக்குட்டியை சமாதானம் செய்ய முயன்றார். எனினும், அவர் தொடர்ந்து சத்தம் போட்டபடியே இருந்தார். நிலைமை மோசமாவதை கண்டு சுதாகரித்து கொண்ட அமைச்சர் முனுசாமி, ஆறுகுட்டியை சமாதானப்படுத்த முயன்றார். அதற்கு அவர், "யாரைக் கேட்டு என் தொகுதிக்குள் வந்தீங்க...? சும்மா வந்துபோற இடம்முனு என் தொகுதியை நினைச்சீங்களா? குரும்பபாளையம் பக்கம் வந்து பாருங்க, எங்காளுக உங்கள போக விடமாட்டாங்க...' என்றார்.அதற்கு அமைச்சர் முனுசாமி, " ஆறுக்குட்டி, ப்ளீஸ் ஒத்துழைங்க, இனிமேல் தவறு நடக்காம பார்த்துக்குவோம்' என்றார்.

அவ்வாறிருந்தும், ஆறுக்குட்டி சிறிதும் சமாதானம் அடையாமல் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார். "இந்த விஷயம் "அம்மா' காதுக்கு போகட்டும்; என் தொகுதியில நடக்கற விழா பத்தி என்கிட்ட ஏன் சொல்லலைன்னு கேக்குறது என் உரிமை,' என, ஆவேசம் குறையாமல் பேசிக்கொண்டே இருந்தார். அவரை எம்.எல்.ஏ., க்கள் துரைசாமி, வேலுமணி ஆகியோர் குறுக்கிட்டு சமாதானம் செய்தனர். அதன்பின், கையெடுத்துக் கும்பிட்டவாறு காரில் ஏறி கிளம்பினார் அமைச்சர் முனுசாமி.

ஆறுக்குட்டியின் ஆவேசத்தால் "அப்செட்' ஆன பிற பிரமுகர்கள், அதிகாரிகள், நிகழ்ச்சியை ரத்துசெய்து கிளம்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி கூறுகையில், ""அமைச்சர் வருகை குறித்து எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை. என் ஊர் இது. நான் பாடுபடும் மண். என்னிடம் சொல்லாமல் யாராவது உள்ளே வரலாமா,'' என்றார். எம்.எல்.ஏ.,வின் புகார் குறித்து மாநகராட்சி தரப்பில் விசாரித்தபோது, "மாநகராட்சி கமிஷனர் மற்றும் மண்டல உதவி ஆணையர் மூலமாக, அமைச்சர் வருகை குறித்து, ஆறுக்குட்டிக்கு முறையாக தகவல் தெரிவித்து விட்டோம்' என்றனர்.

கட்சியினர் "அப்செட்':அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சரை, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருவரே மிரட்டும் தோரணையில் பேசியதை கண்டு, உடனிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கட்சி பிரமுகர் ஒருவர் கூறுகையில், "தனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என, அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் பேசி, ஆதங்கத்தை எம்.எல்.ஏ., தெரிவித்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, பொதுஇடத்தில் இப்படி நடந்துகொண்டிருக்க தேவையில்லை. அமைச்சரை தன் தொகுதிக்கு அழைத்துச் சென்று கோரிக்கைகள் குறித்து விளக்கியிருக்கலாம்; அதுவே சரியான அணுகுமுறை' என்றார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (68)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
johndina - RiodeGenero,பிரேசில்
18-ஜூலை-201216:43:03 IST Report Abuse
johndina ஆறு குட்டி கம்மனாட்டி அம்மாவின் தயவாலத்தான் நீ MLA ஆனா. உனக்கு எந்த செல்வாக்கும் கிடையாது. அத மறந்துகிட்டு என்தொகுதி என்மக்கள் என் ஊர் என்று பிதற்றுகிராயே. நீ இல்ல அங்க யார அம்மா நிறுத்தி இருந்தாலும் ஜெயிச்சு இருந்திருப்பான். ஆடதடா ஆடதடா ஆறு குட்டி ஆட்டம் போட்ட அப்புறம் வீட்டுக்கு போய்டுவ
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
15-ஜூலை-201201:59:57 IST Report Abuse
arabuthamilan அம்மா வழியில் பிள்ளைகள். தாயைப்போல சேய்கள். நூலைப்போல சேலை.ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
15-ஜூலை-201201:52:54 IST Report Abuse
arabuthamilan கொஞ்ச நாள் அல்லது மாதங்கள் சென்ற பின்பு எம் எல் ஏ ஒருவர் கார் விபத்தில் அல்லது வாக்கிங் போகும் போது வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம். இப்போவெல்லாம் இது பேஷனாகிவிட்டது. இந்த மாதிர் சம்பவங்கள் நடப்பது. அடி பட்ட பாம்பு காலைக் கடிக்காமல் விடாது என்று பழமொழி. என்ன ஆகப் போகுதோ?
Rate this:
Share this comment
Cancel
SivakumarGG - Chennai,இந்தியா
14-ஜூலை-201221:49:56 IST Report Abuse
SivakumarGG இரண்டு பக்கமும் நாகரீகம் இல்லை .....ஆனாலும் ஆறு பண்ணது கொஞ்சம் ஓவர் சார்
Rate this:
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
14-ஜூலை-201220:24:48 IST Report Abuse
Mustafa இப்படி ஏதாவது ஏடாகூடம் செய்தால்தானய்யா ஆட்டுக்குட்டி , கன்னுகுட்டி ,என்றெல்லாம் தமிழ்நாட்டில் எம் எல் ஏக்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிய வரும் நல்லதோ கெட்டதோ பேப்பர்ல பேரு வரணும்னா எதாவது கேனத்தனமா செய்தே ஆக வேண்டும் ( கருணாநிதிக்கு ஒரு டெசோ போல )
Rate this:
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
14-ஜூலை-201218:41:49 IST Report Abuse
Srinath அம்மையார் உண்மையிலேயே மக்கள் நலன் கருதினால், மேற்படி சட்டமன்ற உறுப்பினரை அழைத்து ரிவிட் அடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
SHivA - cheNNAi,இந்தியா
14-ஜூலை-201216:37:33 IST Report Abuse
SHivA இவர்களெல்லாம் என்ன ஜமீன் பரம்பரையா?? என் ஊரு என்பதற்கு..
Rate this:
Share this comment
Cancel
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-201215:28:11 IST Report Abuse
S. ரெகுநாதன் தமிழக அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்களில் கொஞ்சம் முதிர்ச்சியுடன் சரளமாக சட்ட சபையில் பேசுபவர், நல்ல முறையில் உள்ளாட்சி துறை அமைச்சகத்தை நிர்வகித்து வருபவர் என்ற பாராட்டை முதல்வர் வாயால் அமைச்சர் முனிசாமி பெற்றுஇருக்கிறார்.. அறுகுட்டி என்ற பெயரை இந்த ஒருவருடத்தில் ஒரு நாலும் கேட்டதில்லை.. மக்களாலும் முதல்வரின் செல்வாக்கினாலும் வெற்றிபெற்ற அவர் துள்ளி குதிப்பதை அம்மா கூப்பிட்டு செல்லமாக தட்டி வைப்பார்...
Rate this:
Share this comment
aymaa midas=vison2023 - kodanaatu, koththadimai kuppam, vilaiyilaa kaiyuttu ,நிய்யூ
14-ஜூலை-201218:37:35 IST Report Abuse
aymaa midas=vison2023 ஏய் டுபுக்கு...
Rate this:
Share this comment
Cancel
karuppanan balasubramanian - Mersin,துருக்கி
14-ஜூலை-201214:49:17 IST Report Abuse
karuppanan balasubramanian ஐயா எம் எல் எ , உமக்கு தொகுதியின் மேல் உள்ள அக்கறை நல்லது. அதற்காக உம மேலாளரை உமது தொகுதியில் வந்ததுக்கு குறை கூறுவது அநாகரிகம். முதலமைச்சர் முதல்வர் என்றால் அடுத்த நிலையில் உள்ளவர்கள் அமைச்சர்கள். அதன் பின் தான் எம். எல். எ . இந்த நாகரிகம் அறியாத உம்மை தெரிவு செய்த கட்சி அவமானப்படுகிறது. அது தான் உண்மை.
Rate this:
Share this comment
Cancel
Venkataramanan Tirupathi Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-201214:22:07 IST Report Abuse
Venkataramanan Tirupathi Srinivasan ஆருக்குட்டி அண்ணா. தொகுதி உங்களுதுதான். எத்தன முறை kavandampaalayam mtp ரோடு முதல் வடவள்ளி வரை எவ்வளவு தண்ணி கஷ்டம் தெரியுமா. எவ்வளவு ட்ராபிக் தெரியுமா. நீங்களும் அதே ரோட்டில் தானே போறீங்க. துடியலூர் முதல் kavandampalayam வரை எத்தனை accident நடக்குது தெரியும்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்