நெல்லை, திருச்சி, சென்னையைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகிய மூவரும், ஒரே மேடையில் பங்கேற்கும் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், வரும் 28ம் தேதி மதுரையில் நடக்கிறது. வரும் 15ம் தேதி, மெரீனா கடற்கரையில், "கிங் மேக்கர் காமராஜ்' படத்தை திரையிட, போலீசிடம் அனுமதி கேட்டு தமிழக காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழக காங்கிரஸ் நடத்தும் பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சி விழா, நிகழ்ச்சிகளில் அனைத்து கோஷ்டித் தலைவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பங்கேற்க வைக்கப்படுகின்றனர். கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான பொதுக்கூட்டம் திருநெல்வேலியிலும், சோனியா பிறந்த நாள் விழா தொடர்பான பொதுக்கூட்டம் திருச்சியிலும், அம்பேத்கர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் சென்னையிலும் நடத்தப்பட்டது.
மதுரையில் கூட்டம்:
இந்த கூட்டங்களில் கோஷ்டி பாகுபாடு காட்டாமல் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக, காமராஜர் பிறந்த நாளை ஒட்டி, வரும் 29ம் தேதி, மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டத்தில் மதுரை மாநகர், புறநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள் பங்கேற்கவுள்ளனர்.ஏற்கனவே மூன்று கூட்டங்களில், "ஒற்றுமை'யைக் காட்டியது போல, இந்த கூட்டத்திலும் அனைத்து கோஷ்டித் தலைவர்களும் ஒற்றுமையோடு பங்கேற்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் சினிமா :வரும் 15ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. சென்னை மெரீனா கடற்கரையில் காற்று வாங்க வரும் பொதுமக்களுக்கு, "கிங் மேக்கர் காமராஜ்' என்ற திரைப்படத்தை திரையிட, ஞானதேசிகன் திட்டமிட்டுள்ளார். இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மெரீனா கடற்கரையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அங்கு கூட்டங்கள் நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதால், அங்கு திரைப்படம் நடத்த அனுமதி கிடைக்குமா? என்பது குறித்த சந்தேகமும் காங்கிரசார் மத்தியில் எழுந்துள்ளது. மெரீனாவில் படம் திரையிட அனுமதி கிடைக்கவில்லை என்றால், சத்தியமூர்த்தி பவன் வெளியே உள்ள திறந்தவெளி வளாகத்தில் திரையிடவும் திட்டமிட்டுள்ளனர்.
-நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இன்று கருத்து கூறும் ஜாதிய துவேஷ பிறவிகள் காமரஜரை பற்றி பேச அருகதை இல்லை .தீரர் சத்திமூர்த்தியால் கவரப்பட்டு எல்லா ஜாதியினரும் மதித்து பின்பற்றபட்டவர் கர்மவீரர் காமராஜர் .ராஜாஜியின் பேச்சைக்கேட்க அவர்கள் முட்டாள்கள் இல்லை .மனசாட்சி இல்லாத கீழ்தர மான பிரச்சாரம் மற்றும் பொய் வாக்குறுதி போற்றவைகளால் மக்கள் திசை திரும்பினார்கள் .பலன் இன்றும் அனுபவிக்கின்றனர் .
மகா,ஆஸ்திரேலியா
காமராஜின் பெயரை சொல்ல எந்த காங்கிரஸ் காரனுக்கும் அருகதை கிடையாது, காங்கிரஸ் எபோதோ குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது , வரும் தேர்தலில் பெரிய சங்கு ஊதி புதைக்க வேண்டியதுதான், நான் ஒரு பழைய காங்கிரஸ்காரன், திமுக அல்லது அதிமுக இவர்களின் முதுகில் சவாரி செய்து பலகிவிட்டார்கள், அந்த கட்சிகளுக்கும் மானமும் இல்லை , ரோஷமும் இல்லை , பொறுத்திருந்து பார்ப்போம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.