Qualify teachers will get by tough exam: TRB | கடினமான தேர்வால் தகுதியான ஆசிரியர் கிடைப்பது நிச்சயம்: டி.ஆர்.பி., கருத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடினமான தேர்வால் தகுதியான ஆசிரியர் கிடைப்பது நிச்சயம்: டி.ஆர்.பி., கருத்து

Updated : ஜூலை 13, 2012 | Added : ஜூலை 13, 2012 | கருத்துகள் (24)
Advertisement
கடினமான தேர்வால் தகுதியான ஆசிரியர் கிடைப்பது நிச்சயம்: டி.ஆர்.பி., கருத்து,Qualify teachers will get by tough exam: TRB

டி.இ.டி., தேர்வு எழுதியவர்களில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என எதிர்பார்ப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. 6.56 லட்சம் பேர், இத்தேர்வை எழுதினர். இரு தாள் தேர்வுகளுமே கடினமாக இருந்ததாகவும், நேரமின்மை பெரிய பிரச்னையாக இருந்தது எனவும், தேர்வர் புகாராகத்தெரிவித்தனர்.டி.இ.டி., தேர்வு கேள்வித்தாள், தமிழகம் மட்டுமல்லாமல், ஏற்கனவே தேர்வு நடந்த கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், கடினமாகவே அமைந்துள்ளது.சி.பி.எஸ்.இ., தேசிய அளவில் நடத்திய தகுதித் தேர்வில், தேர்ச்சி சராசரி வெறும் 6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டி.ஆர்.பி., நடத்திய தேர்வு, பெரும் சலசலப்பை
ஏற்படுத்தியது.


"திறமையானவர் கிடைப்பார்':இதுகுறித்து, டி.ஆர்.பி.,வட்டாரம் கூறியதாவது: கேள்வித்தாள் அமைக்கும் பணியில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த பாட வல்லுனர்களும் இடம் பெற்றனர். என்.சி.டி.இ., கூறியுள்ள விதிமுறை மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் தான், கேள்வித்தாள் தயாரிக்கப் பட்டன.டி.இ.டி., தேர்வில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றாலே, அது பெரிய விஷயம். இந்த 10 சதவீதம் பேரும், நல்ல திறமை உள்ளவர்களாக இருப்பர் என்பதுமட்டும் உறுதி.

"கீ-ஆன்சர்' எப்போது?மாவட்டங்களில் இருந்து, விடைத்தாள்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை, "ஸ்கேன்' செய்து, அதன்பின் மதிப்பீட்டு பணிகளை செய்ய வேண்டும். இரு வாரங்களில், இணையதளத்தில், "கீ-ஆன்சர்' வெளியிடப் படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பத்து சதவீத தேர்ச்சி எனில், 65,600 பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பிடிப்பர். டி.ஆர்.பி., இப்படி தெரிவித்தாலும், 5 சதவீதம் வரை தான் தேர்ச்சி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வராதவர்கள் எண்ணிக்கை :முதல் தாள் தேர்வு எழுதியவர்களில், 7 சதவீதம் பேரும், இரண்டாம் தாள் எழுதியவர்களில், 8 சதவீதம் பேரும்,"ஆப்சென்ட்' ஆனதாக,
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அதன்படி, முதல் தாள் தேர்வில், 17,287 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 28,054 பேரும், "ஆப்சென்ட்' ஆகி உள்ளனர்.


- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaga Desan - tirupur,இந்தியா
14-ஜூலை-201222:19:52 IST Report Abuse
Jaga Desan பாட திட்டம் இது தான் வரும்னு சொல்லிருந்தா கூட பரவால்ல. . . . ஆசிரியர் தொழிலுக்கு அர்ப்பணிப்பு அவசியம்.. பிரைவேட் காலேஜ் எல்லாம் இழுத்து மூடிட்டு பழைய படி அரசு கல்லூரிகள மட்டும் பி.எட் கொண்டு வந்தா இத்தனை சர்ச்சைகளே இருக்காது . . .
Rate this:
Share this comment
Cancel
Rajandran - Doha,கத்தார்
14-ஜூலை-201220:34:04 IST Report Abuse
Rajandran திறமை உடையவர்கள் என்று சொல்லுவதைவிட அதிர்ஷ்டம் உள்ளவகளுக்கு தான் வேலை கிடைக்கும் கண்ணை மூடிக்கொண்டு எல்லோரும் டிக் பண்ணி இருக்கிறார்கள் இதுதான் உண்மை. இல்லை என்றால் திரை மறைவில் பண பேரம் இருக்கும் அம்மா ஒன்னும் நேர்மையவர்கள் கிடையாது என்பது இப்போதாவது புரிந்து கொள்ளுகள் மக்களே
Rate this:
Share this comment
Cancel
ravi - madurai,இந்தியா
14-ஜூலை-201220:09:08 IST Report Abuse
ravi In Second grade teacher training exam. All the student have already passed , Exam conducted by Government only. I dont under stand why they are conducting eligibility test again. 2 years exam are condcuted by government only. What is the meaning of Government exam? What Government is doing in 2 years . For making money only they are conducting class and exams.. Stundents are getting job minimum after 10 to 15 years. How can they remember all the subject. This Exam should be conducted for current year student only. The Exam should not conduct previously completed students. You want the good teachers. after completion of +2 , you have to conduct entrance exam , like medical and engineering etc.. This is not the good way , what the government is doing. If Government has to take good decision in this. Getting teachers job is.....? - Badly offected students, Madurai
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Murugesan - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
14-ஜூலை-201219:31:52 IST Report Abuse
Sivakumar Murugesan I like this standardization on education in government schools but my family members also affected by this TET. otherthen tamilnadu government school students speak good english and hindi so they can get job quckly and settled in life easily. so surely we will improve our education and knowledge.
Rate this:
Share this comment
Cancel
Yoga Anand - Madurai,இந்தியா
14-ஜூலை-201219:29:57 IST Report Abuse
Yoga Anand திறமையான ஆசிரியர்களை தேர்வு செய்யும் TRB க்கு நன்றி ..... இந்த தேர்வுக்கு 1 .30 மணி நேரம் அதிகமாக தெரிகிறது 45 நிமிடம் கொடுத்திருக்கலாம் .... DTEd மற்றும் BEd முடித்த அப்பாவி மாணவனின் குமுறல் ...
Rate this:
Share this comment
Cancel
Kendric Prem Daniel - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-201217:36:16 IST Report Abuse
Kendric Prem Daniel those who have commented here, let me ask you one question, have you not come across one good teacher who inspired your life throughout your school days?.. I can say there are many who made my life meaningful. exceptions are there everywhere and in every field.you all people don&39t understand with how much pressure teachers are working everyday. children have the right not to study, not to obey and obviously corrupted by the media. but teachers have no right to correct them, just think of your school days,... are our children like us? do they ever obey you?.teachers are dealing with humans and not machines, each child has to be dealt differently. without knowing or experiencing any such situation why people are ready to put the whole blame on teachers???.please just think a moment before writing your comment about anything.
Rate this:
Share this comment
Cancel
Jestin Xavier - Bangalore,இந்தியா
14-ஜூலை-201215:35:11 IST Report Abuse
Jestin Xavier TRB representatives that they want to hire quality teachers In my opinion they are looking forward to hire memory-machines and not quality teachers. The purpose of these tests have been defeated by the way it is designed and implemented. done my graduation in Psychology, English & Sociology I felt the test is all about memorizing and remembering rating than rational understanding or cognitive learning. Now talking about the question paper I request all these learned people to revisit the English question and check if all of them were correct and if also if all the questions were prepared in a manner of finding out the proficiency of candidates&39 language ss. I request the learned people to go through the question paper once again in talk to your own conscience to find out if you are looking for quality teachers or memory-machines?????
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
14-ஜூலை-201212:17:32 IST Report Abuse
ANBE VAA J.P. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும்தான் தகுதியான ஆட்களா ? குழந்தைகளை எப்படி நடத்த வேண்டும் என்று கற்றல் வழிகளில் புலமை பெற்றவர்கள் , தகுதியானவர்கள் இல்லையா ? ,தேர்வு முறையே தவறு என்பதற்காக தானே சமச்சீர் கல்வியே கொண்டுவரப்பட்டது ? அது சரி இந்த தகுதி தேர்வு என்கிற முறை ஒரு கல்வி திட்டத்தை கொண்டு வரும்போதே(dted ., ஆரம்பிக்கும் போதே ) அல்லவா கொண்டுவர வேண்டும் ? , இடையில் ,அந்த அந்த மாறும் ஆட்சிகளுக்கு ஏற்ப இவ்வாறு அவர்கள் நோக்கம்போல் மாற்றிக்கொண்டால்,பாதிக்கபடுவது அப்பாவி சாமானிய கிராம புறங்களில் இருந்து dted முடித்தபதவி மூப்பில் வேலைகிடைக்கும் என்று காத்து கிடந்த மாணவர்களே இந்த விசயங்களில் அரசு அப்துல் கலாம் போன்ற அறிஞர்களின் அறிவுரையை நாடினால் நன்று
Rate this:
Share this comment
Cancel
Sembiyan Thamizhvel - THIRUVALLUR,இந்தியா
14-ஜூலை-201211:15:06 IST Report Abuse
Sembiyan Thamizhvel முதலில் இந்த வாத்திகள் சொந்த தொழில் செய்வது தடுக்கப்படவேண்டும். அரசுப்பணியிலும் சம்பளம். சொந்த தொழிலிலும் வருமானம் என்றால் இவர்களுக்கு அரசு சம்பளம் பாக்கெட் மனி ஆகத்தான் இருக்கும். எல்.ஐ,சி,ஏஜெண்டு, ரியல் எஸ்டேட் வியாபாரத்தை விட்டுவிடவேண்டும். இல்லை என்றால் ஆசிரிய தொழிலை விட்டுவிட்டு சொந்த தொழிலை கவனிக்க வேண்டும். இரண்டாவதாக, தமிழகம் முழுவதும் தமிழனுக்கு சொந்த மண்தானே. பிறகு எதற்கு சொந்த ஊரில் போஸ்டிங் வேண்டும் என்று லஞ்சம் கொடுக்க தயாராக பணமூட்டையை வைத்துக்கொண்டு திரிய வேண்டும்?? அமெரிக்காவில் கூட வேலை பார்க்கமுடியுமாம். ஆனால், அருப்புக்கொட்டைகாரன் அரக்கோணத்தில் வேலைபார்க்கமாட்டானாம். இவங்களுக்கு ரிட்டைஎர்மேன்ட்டுக்கு மூன்று வருடம் இருக்கும் பொது மட்டும் சொந்த ஊர் மாறுதல் கொடுத்தால் போதும்.....
Rate this:
Share this comment
Cancel
amirtha rani - chennai,இந்தியா
14-ஜூலை-201210:05:00 IST Report Abuse
amirtha rani அதிக லஞ்சம் வாங்குறதுக்கு தான் நாங்க கஷ்டமா கேள்வி கேட்டோம்
Rate this:
Share this comment
N.KALIRAJ - VANIYAMBADI,இந்தியா
14-ஜூலை-201214:00:50 IST Report Abuse
N.KALIRAJஆமாம்....இவர்கள் செய்வதைப் பார்த்தல் இதுதான் உண்மை....தேர்வுஆனவர்களின் ஆன்சர் ஷீட்டை யார் பார்க்கப் போகின்றார்கள்....ஆண்டவனுக்கே வெளிச்சம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை