புதுடில்லி: தேசிய கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் ஊதியம் தாமதம் செய்யப்படாமல் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் சம்பந்தபட்ட துறையை கேட்டுக்கொண்டார்.
தேசிய ஊரகத்துறை சார்பில் டில்லியில் இன்று மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மன்மோகன்சிங்; நாட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மகத்தானது. ஆனால் இது சரியாக செயல்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் பெரும் பலனை மக்கள் அடைய முடியாது. இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் ஊதியம் காலதாமதம் செய்யப்படக்கூடாது. இதனை திட்டக்கமிஷன் ( அலுவாலியா ) முழுக்கவனத்துடன் எடுத்து செயல்பட வேண்டும்.
இந்த துறையில் ஒருங்கிணைப்பு போதாது என்று அமைச்சர் கூறுவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த துறை தளர்வு இல்லாமல் செயல்பட வேண்டும். இன்னும் கூடுதல் திட்டங்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார். இந்நேரத்தில் அமைச்சரும், அலுவாலியாவும் மேடையில் இருந்தனர். பிரதமரின் இந்த பேச்சு அவர்களுக்கு தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.