Supreme court for derecognising political party involved in violent stirs | வன்முறையில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகுமா? | Dinamalar
Advertisement
வன்முறையில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகுமா?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:"வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும், அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை, ரத்து செய்யலாமா? இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான பிரகாஷ் சிங், உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் கோரும் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "அரசியல் கட்சிகள், போராட்டத்தில் ஈடுபடும் போது, பெரிய அளவில் வன்முறைகள் நிகழ்கின்றன. பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றன. சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் மறியலில் ஈடுபடுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பெரிய அளவில், பொதுச் சொத்துக்களுக்கு, சேதம் விளைவிக்கும் வகையில், நடக்கும் போராட்டங்களை தடுக்க, வழிகாட்டிக் குறிப்புகளை உருவாக்கும்படி, மத்திய அரசுக்கு, உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், "வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும், அரசியல் கட்சிகளை, தற்போதைய சட்ட விதிகளின் கீழ், தடை செய்ய முடியுமா? அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா. இது தொடர்பாக, மத்திய அரசு, ஒரு வாரத்திற்குள், பதில் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hameed - kuwait city,குவைத்
18-ஜூலை-201212:54:26 IST Report Abuse
Hameed அரசியலில் இது எல்லாம் சாதாரணப்ப
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
18-ஜூலை-201212:38:20 IST Report Abuse
christ அப்படி ஒரு சட்டம் போடுங்க ஒரு கட்சியும் இருக்காது மக்கள் நிமதியாக இருப்பார்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
g.muthuvel - dindigul,இந்தியா
18-ஜூலை-201212:24:31 IST Report Abuse
g.muthuvel எது உடனடியாக நடைமுறைக்கு வரவேண்டும் . அபோது தான் அரசியல் கட்சிகள் போரட்டங்களை அமைதியான வலி யில் நடத்த முன்வரும் .நன்றி தினமலர்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
18-ஜூலை-201209:38:40 IST Report Abuse
N.Purushothaman கொண்டு வந்தால் மிகவும் நல்லது......ஆனால் தீர்ப்பை பொறுத்த வரை தீர விசாரித்தே வழங்க வேண்டும்......இல்லையெனில் துஸ்பிரயோகம் அதிகம் நடக்கும்......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
karuthu - bangalore,இந்தியா
18-ஜூலை-201208:05:45 IST Report Abuse
karuthu தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் கட்சி தலைவர்கள் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை பற்றி மிகவும் பகிரங்கமாக உங்களால் என்ன செய்ய முடியும் என்ற பாணியில் இன்னும் கேட்டால் அந்த இயக்க தலைவரின் படத்தை வைத்து பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்போதுதான் ஒரு நாட்டை காலி செய்து விட்டு இங்கு வந்து அமைதி பூங்கா என்று பெயர் எடுத்த தமிழகத்தையும் கெடுத்து இங்கு பிறந்து வளர்ந்த தமிழனைஎல்லாம் விரட்டி அடிப்பது தான் இவர்களுடைய எண்ணம். அதாவது ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக போகிறது. அன்று கஷ்டப்பட போவது வருங்கால நம்முடைய சந்ததியர்கள். சில வருடங்களுக்கு முன்பு இப்படிதான் இந்தி எதிர்ப்பு என்று ஒன்றை ஆரம்பித்து ஒரு தலைமுறையை கெடுத்து இன்று அவன் தமிழ்நாட்டை விட்டு தாண்ட முடியாத நிலைமையில் இருக்கிறான். அதே போன்ற நிலைமைதான் இன்று இங்கிருப்பவர்களை கச்டபடுபவர்களை பற்றி கவலைபடாமல் தொப்புள் கோடி உறவு என்ற புது அகராதியை கண்டுபிடித்து தூக்கி வைத்து கொண்டு ஆடி கொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக கஷ்டப்பட போவது ஒன்றும் அறியாத தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் மக்கள்தான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
18-ஜூலை-201202:11:25 IST Report Abuse
Srinath இது என்ன கருமம்டா. சீனா, வடகொரியா, கியூபா மாதிரி எந்தக் கட்சியுமே இல்லாத சர்வாதிகார ஆட்சி கொண்டுவர்றதுன்னு கோர்ட்டுல தீர்மானம் பண்ணிட்டாங்களா.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-ஜூலை-201211:39:03 IST Report Abuse
Kasimani Baskaranஜனநாயகத்தையும் கருமம் பிடித்த அரசியல் வியாதிகளையும் வைத்துக்கொண்டு 3030 இல் கூட வல்லரசு ஆக முடியாது. ஒன்று மக்கள் திருந்த வேண்டும் - அல்லது அரசியல் வாதிகளை திருத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்தியா இப்படித்தான் இருக்கும்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-ஜூலை-201201:37:29 IST Report Abuse
Nallavan Nallavan சிங்கப்பூர் ராம், குருமாவையும், சாரி...திருமாவையும், உங்க மாமாவையும் எதுக்கும் கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிக்கச் சொல்லுங்க. மாமாகிட்ட பெரிய பூட்டை எல்லாம் தூக்கிக் கஷ்டப்படவேணாம்-ன்னு சொல்லுங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
18-ஜூலை-201200:36:31 IST Report Abuse
Ab Cd இது வரவேற்க்க தக்க ஒன்று. ஆனால் அரசு இதை எதிர்கட்சியை பழி வாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்த கூடாத வகையில் சட்டதிருத்தம் இருக்க வேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்