Agriculture affected due to Land canal sold illegaly | ஏரியில் வீட்டு மனை விற்பனை அமோகம் : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் வீட்டு மனை விற்பனை அமோகம் : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு

Updated : ஜூலை 18, 2012 | Added : ஜூலை 17, 2012 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஏரியில் வீட்டு மனை விற்பனை அமோகம் : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு,Agriculture affected due to Land canal sold illegaly

மறைமலை நகர்:காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள முக்கிய ஏரிகளில், ஆக்கிரமிப்பாளர்கள் வீட்டு மனை போட்டு விற்பதால், விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருகின்றன.

பொதுப்பணி துறை மற்றும் ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், 63 ஏரிகள் உள்ளன. இவற்றின் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பெரும்பாலான ஏரிகளில் ஆழ்துளை கிணறு அமைக்கப் பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப் படுகிறது. முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரிகளை, முறையாக பராமரிக்காததால், ஆக்கிரமிப்பு தொழில் கொடிகட்டி பறக்கிறது.

ஏரி நிலம் விற்பனை:
ஆரம்ப காலங்களில், ஏரியின் கரை பகுதிகளை ஆக்கிரமித்து குடிசைகள் அமைக்கப் பட்டன. தற்போது, ஏரி நீர்பிடிப்பு பகுதி வரை ஆக்கிரமிப்புகள் வளர்ந்துள்ளன. பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில், 30 முதல் 50 ஏக்கர் வரை வீட்டு மனைகளாக விற்பனை வந்துள்ளன.மழை காலங்களில் ஆக்கிரமிப்பு பகுதியில் தண்ணீர் தேங்குவதை தடுக்க, ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியை உடைத்து விடுகின்றனர். இதனால் தண்ணீர் வீணாவதுடன், பயிர்கள் சேதமடைகின்றன. இதே நிலை நீடித்தால், அடுத்த சில ஆண்டுகளில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைவதுடன், ஏரிகள் அனைத்தும் மாயமாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

நடவடிக்கை தேவை:
இது குறித்து பொத்தேரியை சேர்ந்த, சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ""ஏரிகளை ஆக்கிரமித்து, பிளாட் போட்டு விற்பனை செய்யும் கும்பலுக்கு, உள்ளூர் அரசியல்வாதிகள் துணை நிற்பதால், அதிகாரிகள் அவர்களை கண்டுகொள்வதே இல்லை,'' என்றார்.

இந்த வகை வீட்டு மனை ஒன்று, ஒன்றரை லட்சம் ரூபாயில் இருந்து, மூன்று லட்சம் வரை விற்பனை செய்யப் படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதால், அதிகாரிகளை சரி செய்து விடுகின்றனர். மேலும், இவர்கள் எப்போதும் அடியாட்களுடன் வலம் வருவதால், பொதுமக்களாலும் தடுக்க முடியவில்லை.ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிகளை பாதுகாக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்த பகுதி விவŒõயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கால அவகாசம் தேவை:
பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் அனைத்திலும், ஆக்கிரமிப்புகள் உள்ளன. பெரும்பாலான ஏரிகளில், மின்சார இணைப்பு, குடிநீர் மற்றும் சாலை வசதிகளுடன் வீடுகள் கட்டப் பட்டு உள்ளதால், அவற்றை அகற்ற கால அவகாசம் தேவைப்படுகிறது,'' என்றார்.மேலும், ""தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றம் சட்டம் (2007) அடிப்படையில், படிப்படியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். முதல்கட்டமாக, ஊரப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகள் அனைத்தும் வருவாய் அதிகாரிகளுடன் இணைந்து, விரைவில் அகற்றப்படும்,'' என, வழக்கமான பாணியில், பட்டும் படாமல் கூறினார்.

இது வரை, தமிழகத்தில், எத்தனை ஆக்கிரமிப்புகளுக்கும், விதிமீறல்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி பலன் கிடைத்துள்ளது என்பது, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். கடைசியில், ஒரு சில லட்Œங்களுக்காக, நம் எதிர்காலம் விற்கத்தான்படும் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

எண்ணிக்கை தெரியவில்லை!
ஒன்றியத்தில் உள்ள, 63 ஏரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக, பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஒன்றிய அலுவலக ஊழியர்கள் மறுத்தனர். இரு தரப்பினருக்கும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் குறித்த விவரம் தெரியவில்லை.

வி.ஏ.ஓ.,க்கள் பாராமுகம்:
ஏரிகளை யாரேனும் ஆக்கிரமித்தால், கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஏரிகள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு, விற்பனை செய்யப்படுவது தெரிந்தும், பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டுகொள்ளாமலேயே உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - NY,யூ.எஸ்.ஏ
19-ஜூலை-201201:25:19 IST Report Abuse
Bala குஞ்சு, இந்த நக்கல் தானே வேண்டாங்கிறது......வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு தெரியுமா இந்த இடத்தில் குளம், குட்டை இருந்தது என்று? இந்தியாவில் உள்ள பணத்தாசை பிடித்த சில பேய்களின் வேலை தானே குளத்திலும் குட்டையிலும் மண்ணை நிரப்பி NRI களை ஏமாற்றி விற்கிறீர்கள்.... அவர்களின் சட்டையைப் பிடித்து இந்த கேள்வியைக் கேளுங்கள் உங்களை பாராட்டுவேன்.
Rate this:
Share this comment
Cancel
Athmanathan Saravanan - Male,மாலத்தீவு
18-ஜூலை-201218:49:21 IST Report Abuse
Athmanathan Saravanan ஏரிகளை ஆக்கிரமித்து, பிளாட் போட்டு விற்பனை செய்யும் கும்பலுக்கு, உள்ளூர் அரசியல்வாதிகள் துணை நிற்பதால், அதிகாரிகள் அவர்களை கண்டுகொள்வதே இல்லை,மேலும், இவர்கள் எப்போதும் அடியாட்களுடன் வலம் வருவதால், பொதுமக்களாலும் தடுக்க முடியவில்லை.... என்ன கதை சொல்லுகிரீர்கள் தினமலரே? எதிர் கட்சியினர் மீது பொய் சொல்ல மட்டும்தான் தெரியும் உனக்கு.... உள்ளூர் அரசியல்வாதி யார் என்று தெரியாதா....பெயர் சொல்ல கூடாதா.....
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
18-ஜூலை-201217:42:00 IST Report Abuse
ganapathy அந்த நிலத்தை எப்படி பதிவு செய்வார்கள். ஏரி புறம்போக்கு நிலம் என்று இருக்கும். அதை பதிவு செய்த சார் பதிவாளரை உள்ள தூக்கி வைச்சா எல்லாம் சரியா போயடும்.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Manama,பஹ்ரைன்
18-ஜூலை-201216:34:21 IST Report Abuse
Rajan இவர்களெல்லாம் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் இல்லாமல் சாகும் நாள் வெகுதொலைவில் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
18-ஜூலை-201215:54:19 IST Report Abuse
ராம.ராசு பொதுமக்கள் மழை நீர் சேகரிப்பு அமைப்பு வைத்துக்கொள்ள வேண்டும், சூரிய சக்தி அமைப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் அரசும், அரசு அதிகாரிகளும் இது போன்ற செயல்களை தடுப்பதற்கு முயற்சி செய்வதில்லை. அதோடு கூட, விலை நிலங்கள் விளை நிலங்களாக, கட்டிடங்கள் கட்டும் நிலங்களாக மாறிவரும் சூழலில் ஏரிகள் எதற்காக என்று அவர்களாகவே கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஏரி, குளம் போன்றவைகள் விவசாய உபயோகத்திற்கு மட்டுமல்ல நீர் ஆதாரத்தை, நிலத்தடி நீரை சேமித்து வைக்கவும் பயன்படும் என்பதை சம்பத்தப்பட்டவர்கள் உணர்ந்தால் இது போன்ற ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
m.s.kumar - chennai,இந்தியா
18-ஜூலை-201214:43:44 IST Report Abuse
m.s.kumar நில அபகரிப்பும் இதபோல் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பும் நம் நாட்டில் மட்டும் தான் நடைபெறும் சம்பவம். அரசு அதிகாரிகள் அரசியல் வியாதிகள் இவர்களின் கூட்டு கொள்ளையை தடுக்காவிட்டால் நாம இருக்க வீடும் இருக்காது, ரோடும் இருக்காது
Rate this:
Share this comment
Cancel
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
18-ஜூலை-201213:46:36 IST Report Abuse
s.r.ramkrushna sastri இதுபோன்ற விளம்பரங்களால் வசீகரிக்கப்பட்டு ஆவடி, அம்பத்தூர், போன்ற இடங்களில் பிளாட் வாங்கி, வீடு கட்டிகிட்டினவங்க எல்லாம் மழைகாலத்தில் தீவுக்கு நடுவில் மாட்டிக்கிட்டு "ஒ"நு கத்தறது. எங்களுக்கு அரசாங்கம் ஒண்ணும் செய்யலே. பாருங்க இந்த அவலத்தை" னு ஒப்பாரி வெச்சா எந்த அரசும் எந்த ....றும் புடுங்க முடியாது. ஏரியிலே எந்த மடையனாவது வீடு கட்டுவானா? எத்தனை வற்றினாலும் அடி மண் மிருதுவா தண்ணியை உறிஞ்சற தன்மையோட இருக்காதா? அதுலே அஸ்திவாரம் போட்டா என்ன ஆகும்? யோசிக்கணும். அப்பிடி பிடிவாதமா கட்டினவனுக்கு பிற்காலத்தில் அனுதாபப்பட தேவை இல்லை
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
18-ஜூலை-201212:45:09 IST Report Abuse
christ விவசாய நிலத்தில் கைய வைத்தால் சோத்துக்கு பதில் என்னத்தை திண்பிர்கள் ? சிந்தியுங்கள் மனிதர்களா ?
Rate this:
Share this comment
Cancel
Subramani muthuraja - trichy,இந்தியா
18-ஜூலை-201212:01:49 IST Report Abuse
Subramani muthuraja Some NGOs must take up the matter to the Supreme Court to Restore all water bodies as it was in 1947, that is before indepence.
Rate this:
Share this comment
Cancel
Jayaprakash Subramaniam - Chennai,இந்தியா
18-ஜூலை-201211:34:00 IST Report Abuse
Jayaprakash Subramaniam விளை நிலங்களை பாதுகாக்க அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நிலங்கள் அனைத்தும் பணமாக பார்க்கபடுகின்றன. 2007 ல் acre வெறும் முப்பதாயிரம் மதிப்புகொண்ட நிலம் இன்று 12 லட்சம் என்கிறார்கள். அதுவும் சுற்றிலும் விவசாயம் மட்டுமே நடக்கின்ற ஊரில். இவர்கள் என்ன வாங்கி விவசாயமா செய்ய போகிறார்கள்? இதை கட்டுபடுத்த , ஒரு வருடத்துக்கு மேல் விவசாயம் செய்யாமல் இருக்கும் நிலங்களை, புறம்போக்காக அறிவித்து, அதை விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு ஐந்து வருட குத்தகைக்கு குறைந்த விலைக்கு விட்டு விட வேண்டும். அது 1200 சதுர அடியாக இருந்தாலும் சரி, 1200 ஏக்கராக இருந்தாலும் சரி. குத்தகைக்கு எடுத்தவர் ஐந்து வருடம் சிறப்பாக விவசாயம் செய்திருந்தால், guideline மதிப்புக்கு அவரிடமே விற்றுவிடவேண்டும். அவருக்கு வாங்க வசதி இல்லை என்றால், கடன் வசதி செய்து கொடுக்க வேண்டும். அவர் சிறப்பாக செய்தாரா இல்லையா என்பதை ஞாயமான முறையில் அளவிட வைக்கவேண்டும். இதை செய்யும் தைரியம் இன்றைய முதலமைச்சர்க்கு உண்டு. கடுமையான நடவடிக்கை இல்லையென்றால், விவசாயம் நம் மக்களுக்கு மறந்துவிடும். இதனால் நிறயபேருக்கு பேரிழப்பு ஏற்படும்(என்னையும் சேர்த்துதான்). ஆனால், உணவுக்கு பதிலாக மனிதன் மண்ணையோ, பணத்தையோ சாப்பிட முடியாது. அரசு TASMAC க்கு target கொடுப்பதிற்கு பதிலாக, உணவுப்பொருள் உற்பத்திக்கு கொடுப்பது தவறில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை