சென்னை:"ஜனாதிபதி தேர்தலில், பிரணாப் முகர்ஜிக்கு, கவனமாக ஓட்டு அளியுங்கள்' என, தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவுரை வழங்கினார்.
ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஐ.மு., கூட்டணி சார்பில், பிரணாப் முகர்ஜியும், தே.ஜ., கூட்டணி சார்பில், சங்மாவும் போட்டியிடுகின்றனர். பிரணாப் முகர்ஜிக்கு, தி.மு.க., ஏற்கனவே ஆதரவு அளித்து விட்டது. இந்நிலையில், தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நேற்று காலை, 10.30 மணிக்கு நடந்தது.தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொதுச்செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், துரைமுருகன், சற்குணப்பாண்டியன், வி.பி.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எப்படி ஓட்டு அளிப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆதரவு பெருகுது: கூட்டத்தில் கருணாநிதி, "ஜனாதிபதி தேர்தல்களில், இந்த தேர்தல், மிக முக்கியமானது. பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என முடிவெடுத்துள்ளோம். ஐ.மு., கூட்டணியில், தி.மு.க., நம்பகத் தகுந்த கூட்டணி கட்சியாக விளங்கி வருகிறது. இதற்கு, கடந்த கால வரலாறு உண்டு. எக்காரணத்தை கொண்டும் சந்தேகத்திற்கு இடம் அளிக்காமல், மிகக் கவனமாக ஓட்டு அளிக்க வேண்டும். பிரணாப் முகர்ஜியின் வெற்றி உறுதியாகி விட்டது. அவருக்கு, தமிழக அரசியல் கட்சிகளிடம் ஆதரவு பெருகி வருகிறது' என, அவர் பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேட்டி: கூட்டம் 11 மணிக்கு முடிந்ததும், "இந்தக் கூட்டத்தில் எப்படிப்பட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன' என்ற கேள்வியை கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு கருணாநிதி, "ஏற்கனவே கட்சி சார்பாக, ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு ஆதரவு தருவதென்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அந்த முடிவை, நல்ல முறையில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான வழி முறைகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் சொல்லப்பட்டது' என்றார்.
டில்லியில் ஓட்டளிக்க கனிமொழி முடிவு:தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டத்தில், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, டி.ஆர்.பாலு, ரித்தீஷ் ஆகியோர் மட்டும் கலந்துக் கொள்ளவில்லை. சமீப காலமாக, கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்த முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.டில்லியில் ஓட்டு அளிக்க, கனிமொழி முடிவெடுத்துள்ளார். டில்லியில் ஓட்டு அளிப்பதற்கு, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், நேற்று, கனிமொழி தரப்பில், அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் அன்று, கோர்ட்டில் கனிமொழி ஆஜராகி விட்டு, அவர் ஓட்டு அளிக்கச் செல்லலாம் என கோர்ட் தெரிவித்துள்ளது. இதனால், அவர், நேற்று அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. டி.ஆர்.பாலு, நேற்று, கட்சிப் பணியின் காரணமாக, அவசரமாக டில்லி சென்றதால், அவர் பங்கேற்கவில்லை என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சார் இந்த பீஸ் போன பல்பு ரொம்ப தொல்லை சார், ஒன்னும் சறுக்கு இல்ல ....அட்லீஸ்ட் எதாவது செய்றதுக்கு தெம்புமும் இல்ல, அட்லீஸ்ட் கட்சிய விட்டு போனா பசங்க அடிசிகுவங்க ,,,,ஐயோ ஐயோ என்ன தான் செய்வேன் ......அண்ணா காப்பாத்துங்க.... சரி தமிழன் சொல்லி எதாவது செய்யலாமுன்ன அதுக்கும் ஒன்னும் வேலைக்கு ஆகல .....ஐயோ ஐயோ.....இறைவ அப்பிடின்னு சொல்லவும் முடியல அப்ரும் நாத்திகன இருக்க முடியாது... என்ன தான் செய்வாரு பாவம் சார்.....
மரியா மேடம்/சார் யாருன்னு தெரியாது .... இருந்தாலும் அவருக்காக ரொம்ப பாடுபடுரீங்க ......என்ன அவரு கை ரொம்ப சுத்தம்....ஒரு பைசா கூட ஊழல் பண்ணவே இல்ல ?
எல்லோரும் நல்லா கேட்டுகோங்கப்பா.. குறிப்பா சந்தோஷ் கொழுப்பு சாரி சாரி சந்தோஷ் கோபால் கேட்டுக்க, ஸ்ரீரங்கம் MLA வ தெரியுமா அந்த கேடி கூட சாரி சாரி அந்த லேடி கூட தன் கட்சி கூட்டத்த கூட்டியிருக்கு ஏன் தெரியுமா தோற்குறதுன்னு முடிவு ஆயிருச்சு இருந்தாலும் ஒட்டு எண்ணிக்கைய சங்கு க்கு கூட்டி காட்டனும் அப்பதான் தனக்கு டில்லியில கொஞ்சம் பிடிப்பு கிடைக்கும் ஏன்னா இந்த பெங்களூரு கேசு என்ன ரொம்ப படுத்துது. அதுல இருந்து தப்பிக்க கொஞ்சம் அரசியல் பண்ண வேண்டி இருக்கு, அது மட்டும் இல்ல சசி எதிர்காலமும் இதுல இருக்கு பார்த்து செய்ங்க, அப்புறம் முன்னாடி நாடாளுமன்றத்தில ஒரு தடவ மத்திய அரசுக்கு எதிரா நாம வக்களிச்சப்ப செங்கோட்டையன் தூங்கின மாதிரி யாரும் தூங்கிற கூடாது, என் தலை எழுத்து பேசவே தெரியாத ராமராஜன MP ஆக்கி நான் பட்ட அவமானம் இருக்கே அப்பாப்பா,அந்த ஆளு பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி நு பாடின மாதிரி நீங்க அங்க போய் ஆச்சி ஆச்சி நீ அருமையுள்ள ஆச்சி நு பாடி தொலைசிராதிங்க,புரியுதா இதுகுத்தானம் அந்த கூட்டம் ஆமா சசி எங்க உட்காருவாங்க மேடையிலா,அப்ப சங்கு....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.