திருச்சி அருகே லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய, டி.எஸ்.பி., செல்வமணி, அரசியல்வாதிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆசியோடு, "ஜெகஜால' கில்லாடியாக வலம் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி லஞ்ச ஒழிப்பு, டி.எஸ்.பி.,யாக இருந்த செல்வமணி, நேற்று முன்தினம், அறக்கட்டளைக்கு தடையில்லா சான்று வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக பிடிபட்டார். அவர் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.டி.எஸ்.பி., செல்வமணி மீது, லஞ்ச புகாரோடு, பாலியல் புகார்களும், மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு வந்துள்ளது. இதையடுத்து, டி.எஸ்.பி.,யிடம் விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தயாரான போது, முன்னாள், டி.ஜி.பி.,யாக இருந்து ஓய்வு
பெற்ற ஒருவர், டி.எஸ்.பி., செல்வமணிக்காக உயர் அதிகாரிகளிடம் பேசி, துறை ரீதியான நடவடிக்கையை தடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை ராயபுரத்தில், உதவி கமிஷனராக செல்வமணி பணியாற்றிய போது, ஓய்வு
பெற்ற, டி.ஜி.பி.,க்கு மிகவும் வேண்டியவராக இருந்துள்ளார். அதோடு,
தி.மு.க.,வின் முக்கிய பிரமுகருக்கு வேண்டப்பட்டவராகவும் இருந்ததால், கடந்த ஆட்சியின் போது, ராயபுரம் இன்ஸ்பெக்டராக இருந்து, அங்கேயே உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்று பணியாற்றியுள்ளார்.ராயபுரத்திலிருந்து, திருச்சி மாநகர குற்ற ஆவண காப்பகப் பிரிவு உதவி கமிஷனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். ஆறு மாதத்துக்கு முன், லால்குடி, டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்ட அவர், அங்கும் புகார் கொடுக்க வருபவர்கள், புகாரில் சிக்கியவர்களிடம், லஞ்சம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக்
Advertisement
கூறப்படுகிறது. பண விவகாரத்தில் மட்டுமல்லாது, பெண்கள் விஷயத்திலும் செல்வமணியின்
செயல்பாடுகள் மோசமாக இருந்துள்ளது. லால்குடி பெண் போலீஸ் ஒருவர்,
கல்லக்குடி பெண் போலீஸ் ஒருவரை, தன் வலையில் வீழ்த்திய, டி.எஸ்.பி., செல்வமணி, ஒரு பெண் எஸ்.ஐ.,யிடம் வாலாட்டிய போது, அந்த பெண்மணியின் கண்டிப்புக்கு உள்ளாகியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில், டி.எஸ்.பி., செல்வமணி, தனக்கு, தி.மு.க.,வில் இருந்த செல்வாக்கு மற்றும் போலீஸ் உயரதிகாரிகளிடம் இருந்த செல்வாக்கு மூலம், "ஜெகஜால' கில்லாடியாக வலம் வந்ததற்கு, தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக, திருச்சி போலீசார் கூறுகின்றனர்.
- நமது நிருபர் -