எய்ட்ஸ் வராமல் தடுக்க, அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட "த்ருவதா' என்ற புதிய மருந்து, சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.எய்ட்ஸ் நோய் தாக்கிய பிறகு, அதை முற்றிலும் சரி செய்ய இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பாதிப்பை குறைக்க ஏற்கனவே மருந்துகள் இருக்கின்றன. தற்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து, எச்.ஐ.வி., பரவாமல் 73 சதவீதம் தடுக்கும் என நம்பப்படுகிறது. இம்மருந்துக்கு எதிர்ப்பு குரலும் வலுக்கிறது. மருந்தையா எடர்க்கின்றனர் என நீங்கள் நினைக்கக் கூடும். அதற்கு வேறு காரணம் இருக்கிறது.
தகாத உடலுறவு மூலம் எச்.ஐ.வி., பரவி இருந்தாலும் இந்த மருந்தை, எய்ட்ஸ் நோயை தடுக்கும் என்பது தான் சர்ச்சைக்கு காரணம். இம்மருந்தால், அச்சம் நீங்கி, தவறான பழக்க வழக்கங்கள் அதிகரித்து, சமூக ஒழுக்கம் பாதிக்கப்படும் என்பது தான் காரணம். எய்ட்சால் பாதிக்கப்படாத நபர் தொடர்ச்சியாக, "த்ருவதா' மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கணவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மனைவி இந்த மருந்தை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.
2010ல் நடந்த ஆய்வில், "த்ருவதா' மருந்து 44 சதவீதம் எச்.ஐ.வி., பரவுவதை தடுத்தது. தொடர் ஆராய்ச்சியால், தற்போது 73 சதவீதம் தடுக்கிறது. இந்த மருந்தை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் மட்டுமே நோய் பரவாது என்கின்றனர்.பிரிட்டனில் "த்ருவதா' மருந்து எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எய்ட்ஸ் வராமல் தடுக்க பயன்படுத்துவதில்லை.சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க, இம்மருந்து மீதான ஆராய்ச்சி இன்னமும் தொடர்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
HIV க்கு மட்டும் இவ்வளுவு முக்கியம் தருகிறாக்கள் என்று தெரியல ?
பால்வினை நோய்களான HSV(Herpes Simplex Virus) , HPV (Papilona Virus) , Sipilus , Kaneria போன்ற நோய்களுக்கு மருந்துகள் இல்லை ., குனபடுத்த முடியாது ., எனக்கு தெரிந்த நபர் HSV(HERPES SIMPLES VIRUS) ஆல் குடும்பத்துடன் பாதிக்க பட்டு , ஆறு வருடமாக போராடிக்கிட்டு இருக்கிறார் ., இதற்கு அலோபதி இல் மருந்துகள் இல்லை ., தெரிந்தவர்கள் PLS. MAIL ME TO ak_as2k@yahoo.com

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.