E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மெட்ரோ ரயிலுக்கு அண்ணா சாலையில் பள்ளம் தோண்ட தடை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2012
23:41

சென்னை:மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணியால் எல்.ஐ.சி., கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து, மெட்ரோ ரயிலுக்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி., கட்டட விரிசல் குறித்து ஆய்வு நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி., நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலை எல்.ஐ.சி., கட்டடம் அருகே சுரங்கப் பாதையில் ரயில் நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்காக சுரங்கம் அமைக்கும் பணி துவங்கியது. இந்த பணியால் எல்.ஐ.சி., கட்டடத்தில் 12 மற்றும் 13வது மாடிகளில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் பரவியது. எல்.ஐ.சி., அதிகாரிகள் இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர்.இதனையொட்டி மெட்ரோ ரயில் அதிகாரிகள் மற்றும் எல்.ஐ.சி., பொறியாளர் பிரிவு செயல் இயக்குனர் அமீத்யாதவ் மற்றும் குழுவினர் நேற்று முன்தினம் எல்.ஐ.சி., கட்டடத்தில் ஆய்வு செய்தனர். மாடிகளில் ஏற்பட்டுள்ள விரிசல் எப்போது ஏற்பட்டது என்ற சந்தேகத்துக்கு தீர்வு காண முடியவில்லை. எனவே, இது குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐ.ஐ.டி., நிபுணர் குழுவை கேட்டுக் கொள்வது என தீர்மானித்தனர்.மெட்ரோ ரயில் நிலையம் எல்.ஐ.சி., அருகே கட்டப்படுவதற்கு, பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைப்பதற்கு ராட்ஷச டிரில்லர் மிஷின் மூலம் 23 மீட்டர் ஆழத்தில் பள்ளம் தோண்டும் போது, பாறை குறுக்கிட்டதால், இப்பணி நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற பணிகள் வழக்கம் போல நடந்து கொண்டிருக்கிறது.


எல்.ஐ.சி., கட்டடத்தில் ஐ.ஐ.டி., நிபுணர் குழுவினர் எப்போது ஆய்வு நடத்த உள்ளனர் என்று மெட்ரோ ரயில் திட்ட தலைமை பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது;
எல்.ஐ.சி., 14 மாடி கட்டடம், 1959ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டத்தில் 1975ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. பழைமையான கட்டடம் என்பதாலும், இடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாலும், முன்பே ஏதும் விரிசல் ஏற்பட்டு சரி செய்யப்பட்டுள்ளதா என்றும் தகவல் கேட்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி., கட்டடத்தின் பொறியாளர் பிரிவு தலைமை செயல் இயக்குனருடன், மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகளும் எல்.ஐ.சி., கட்டடத்தை நேற்று முன்தினம் பார்வையிட்டுள்ளனர். கட்டட விரிசல் குறித்தும் பேசப்பட்டது.

மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணி துவங்கப்படும் முன்பே இப்பாதையில் உள்ள பெரிய கட்டடங்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு, கட்டட நிலைகள் குறித்தும் படங்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் கடந்தாண்டு எடுக்கப்பட்டுள்ள எல்.ஐ.சி., கட்டடத்தின் படங்களும் உள்ளன. இப்படங்களும் ஆய்வு செய்யப்படும்.எல்.ஐ.சி., கட்ட விரிசல் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஐ.ஐ.டி., நிபுணர் குழு ஒரு வாரத்திற்குள் ஆய்வு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். அதன் பின் கட்டடத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக ரயில் நிலையம் அமைப்பது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஐ.ஐ.டி., நிபுணர் குழு அறிக்கை வரும் வரை உறுதியான எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை.இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு பாறையால் புதிய இடர்பாடு: எல்.ஐ.சி., அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் இடத்தின் கீழ் பகுதியில் பாறை உள்ளது தெரிய வந்துள்ளது. பாறையின் தொடர்ச்சி எல்.ஐ.சி.,யின் அடித்தளப் பகுதியிலும் உள்ளதா, இப்பாறையில் துளைபோடும் போது, அதன் அதிர்வுகளால் எல்.ஐ.சி., கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட உள்ளது. பாறையை ராட்ஷச டிரில்லர் மூலம் உடைத்து எடுக்கப்படும் போது, தொடர்சியான பாறை அதிர்வால் எல்.ஐ.சி.,க்கு பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டால், இந்நிலையம் வேறு இடத்தில் அமைப்பது குறித்தும் முடிவெடுக்கப்பட வேண்டிய நிர்பந்தம் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Ramki - turaif,சவுதி அரேபியா
21-ஜூலை-201222:16:18 IST Report Abuse
R.Ramki ஒரு வேளை கலைஞரின் எல்.ஐ .சி ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தால் விரிசல் ஏற்பட்டிருக்கலாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Mohamed Kayal - Jiangmen,சீனா
21-ஜூலை-201215:09:48 IST Report Abuse
Mohamed Kayal இன்னும் எத்தனை நாளைக்குதான் இந்த கட்டிடத்தை கட்டி காப்பீர்கள், 1990 முன் சீன நாடு நம்மளை விட பின் தங்கிதான் இருந்தார்கள் 2000 த்தில் நம்ம அளவுக்கு வளர்ந்து விட்டார்கள் 2000 அப்புறம் அவர்கள் மிக வேகமாக முன்நேரிடார்கள் இப்போ இவங்களுக்கு 14 மாடி கட்டிடம் என்றால் கூலம் குப்பைகளை போடுகிறதுக்கு பயன்படுத்துகிறார்கள். மக்கள் வசிக்க கூடிய கட்டிட மேல் தளத்தி (மொட்டை மாடி) லிருந்து வானத்தில் பறக்கின்ற விமானத்தை பார்த்தல் அதில் உள்ள எழுத்துக்களை நாம் படித்து விடலாம் வெளியில் உள்ள எழுத்தை நாம் படித்து விடலாம் அந்த அளவுக்கு சீனர்கள் வளர்ந்து விட்டார்கள். இன்னும் எத்தனை நாளைக்குதான் நாமோ ஒட்டு போட்ட இந்த கட்டிடத்தை வைத்து கொண்டாடி கொண்டு இருப்போம் ???????
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Krish - India,சிங்கப்பூர்
21-ஜூலை-201206:54:00 IST Report Abuse
Krish LIC யை இடிக்கும் சரியான தருணம் இது. ஒரு பீத்த 14 Floor கட்டிடம், அதையே இன்னும் எத்தனை வருடம் சென்னை லோகோ போல காட்டமுடியும்? 60 வருடங்கள் தாண்டிவந்தோம் 1947 பிறகு, ஒரு Sky Scrapper கூட சென்னையில் இல்லை. கேட்டால் சப்பை காரணங்கள், மண் தாங்காது என்று. Funny Reasons. வெறும் 40 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்ற நாடுகள் பல, 60 வருடங்கள் கடந்தும் ஆமை வேகத்தில் நம் நாடு. சிங்கபூர் ஸர்கில் லைன் முழுவதும் பூமிக்குள் தான். அந்த டன்னல் பாதையில் சில 80+ Floors கொண்ட கட்டிடங்கள், பல 50+ Floors கட்டிடங்கள் உள்ளன. அதை எல்லாம் மனதில் கொண்டு சிர்ப்பிகள் செதுக்கி மேலும் சிங்காரமாக மாற்றிவிட்டார்கள். யோசிக்காமல், இதுவே சிறந்த காரணமாக எடுத்துகொண்டு, புதிய தலைமை செயலகத்தை, LIC க்கு குறைந்த வாடகைக்கு விடலாம், அரசு அலுவலகங்களை வைத்து நிரப்பலாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
21-ஜூலை-201206:38:15 IST Report Abuse
ஆரூர் ரங வீக்கான LICபோன்ற பழைய கட்டிடங்களை அங்கிருந்து அகற்ற ஒரு நல்வாய்ப்பு. அதன் அருகிலுள்ள ஒரு பழங்கால பாரத் இன்சூரன்ஸ் கட்டிடத்தின் மோசமான நிலைமை இதற்கும் வரவேண்டாம். LICக்கு இழப்பீடு கொடுத்து ஊருக்கு வெளியில் வேறெங்காவது அந்த அலுவலகத்தை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையுமே. காலியாகும் இடத்தை ,,மெட்ரோ ரயில் நிலையத்துக்கான பல மாடி வாகன நிறுத்தமாக்கலாம்ஒரு சிறிய பஸ் ஸ்டாண்டே அமைக்கலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
vidhuran - Hastinapur,இந்தியா
21-ஜூலை-201202:26:31 IST Report Abuse
vidhuran LIC ஆபீசை வேறு இடத்திற்கு மாற்றி சென்னையின் போக்குவரத்து நெரிசல்களை சமாளிக்க இப்பொழுது இருக்கும் அரசு ஒத்துழைக்குமா, அல்லது கலைஞர் ஆரம்பித்த திட்டமென்று முட்டுக்கட்டை போடுமா?, போன தடவை அம்மா பதவிக்கு வந்த பொழுதும் இந்த திட்டத்தை ரத்து செய்து விட்டிருந்தார். அதன் பின்னர் மறுபடியும் கலைஞர் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்து விட்டு போய்விட்டார். சென்னையின் அத்துனை வளர்ச்சித் திட்டத்தையும், ஜேஜே அம்மா அவர்கள் தொடர்ந்து குரங்கு கையில் கிடைத்த பூமாலை மாதிரி பிய்த்து, நாசப்படுத்தாமல் இந்தத் திட்டத்தையாவது நிறைவேற முயர்ச்சிப்பார் என்று நம்புவோம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
21-ஜூலை-201202:25:38 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை வாஸ்துப்படி பூமிக்கடில இரும்பாலான பாம்பு மாதிரியான வாகனங்கள் போகக்கூடாது , வாஸ்து பாத்து இந்த திட்டத்த ஆரம்பிச்சு இருக்கணும் , பூமிக்கடில தோண்டியவரைக்கும் போதும். அத்தனையும் ஆஸ்பத்திரியா மாத்திருங்க , மக்களுக்கு வர்ர நோய்கள பாக்கும் போது பூமிக்கடியலையும் ஆஸ்பத்திரி தேவைப்படுது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Krish - India,சிங்கப்பூர்
21-ஜூலை-201207:45:04 IST Report Abuse
Krishவாஸ்துபடி குஞ்சுமணி சென்னை - chennai ,இந்தியா என்று இருக்க கூடாது, தமிழ் நாடு என்ற மாநிலமே மறைக்கபடுகிறது.. இல்லேனா, தமிழ் நாட்டையே சென்னைன்னு பெயர் மாற்றலாம். ஹூ ஹூ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
21-ஜூலை-201209:11:19 IST Report Abuse
K.Sugavanamகேளம்பிட்டருய்யா கெளம்பிட்டார்.இனி இந்த குஞ்சுமணிய யாராலையும் தடுத்து நிறுத்த முடியாது.நடத்துங்க.நல்லா யோசிக்கிறீங்க....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.