E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அவிநாசி அருகே ஆறு திடீர் மாயம்: "விழுங்கியது' ரியல் எஸ்டேட் பூதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2012
23:42

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே நல்லாறு ஆக்கிரமிக்கப்பட்டு, வீட்டுமனை வியாபாரம் கனஜோராக நடக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்தும் வருவாய்த்துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர்.

மேட்டுப்பாளையம் அருகே, அன்னூரில் இருந்து நொய்யல் ஆற்றின் கிளை நதியான "நல்லாறு' துவங்கி, ராமநாதபுரம், கருவலூர், நம்பியாம்பாளையம், செம்பியநல்லூர் ஆகிய ஊராட்சி வழியே சென்று அவிநாசி, பூண்டியில் நொய்யலில் கலக்கிறது. நல்லாற்றின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. ராமநாதபுரம் ஊராட்சி, நரியம்பள்ளியில் சிலர், நல்லாற்றை மண் போட்டு மூடி, "சைட்' அமைத்து விற்கின்றனர். அப்பகுதியில் ஒரு கி.மீ., நீளம், 40 முதல் 60 அடி அகலத்துக்கு ஆறு ஆக்கிரமிக்கப்பட்டு மூடப்பட்டுவிட்டது. இவ்விஷயம் வருவாய்த்துறைக்கு தெரிந்தும் கூட, எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதே பகுதியில் குட்டை, கல்லுக்குழி, பள்ளவாரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு "சைட்' போட்டுள்ளனர். இதுகுறித்த பிரச்னை இன்னும் தீராத நிலையில், அதே பகுதியில் ஆறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் மோகனசுந்தரம் கூறுகையில், ""கடந்த சில ஆண்டாகவே நல்லாற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறைக்கு உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவித்து வருகிறேன். சிலர் "சைட்' அமைத்து ஆற்றையே மூடி விட்டனர். மேற்கே தெரியும் நல்லாறு, கிழக்கே தெரியாது. மழைக்காலங்களில் மழை நீர் நல்லாற்றின் வழியே பாய்ந்தோடும். வழியிலுள்ள குட்டைகளை நிரப்பி விட்டு, நொய்யலில் கலக்கிறது. தற்போது ஆற்றையே காணவில்லை,'' என்றார்.

அவிநாசி தாசில்தார் பூங்காவனிடம் கேட்ட போது, ""நரியம்பள்ளியில் நல்லாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது பற்றி புகார் வந்ததும், ஆய்வு நடத்தினேன். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆறு என்பதால், விரிவாக சர்வே செய்து, அறிக்கை அனுப்பப்படும். ஆறு ஆண்டுகளுக்கு முன்பே, "சைட்' அமைத்து விட்டனர். விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, உடனே சர்வே செய்து ஆறு ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தால் உடனே மீட்கப்படும்,'' என்றார்.

விவசாயிகள் கூறுகையில், "45 ஆண்டுக்குபின், அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. அத்திட்டத்தின் கீழ் அமையும் கால்வாய் நல்லாறு வழியே செல்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், நரியம்பள்ளியில் ஆறு இருந்த இடத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்கின்றனர். இது தொடர்ந்தால் பல இடங்களிலும் ஆறு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். இவ்விஷயத்தில் தமிழக முதல்வரின் நேரடி நடவடிக்கை அவசியமாகிறது,' என்றனர்.

சென்னை அருகே சமீபத்தில் ஏரி ஒன்றை கூறு போட்டு வீட்டு மனைகளாக விற்பனை செய்ய துணிகர முறைகேடு அரங்கேறியது. அதற்கு அடுத்ததாக, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் ஆற்றையே கூறு போட்டு விற்பனை செய்யும் மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது. தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, "ரியல் எஸ்டேட் மாபியா'க்களிடம் இருந்து நீர் நிலைகளை பாதுகாக்க முடியும் என்ற கருத்து எழுந்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
21-ஜூலை-201216:55:08 IST Report Abuse
rajan ஐயா ரியல் எஸ்ட்டுகளே இந்த கடல் பக்கம் திரும்பி பாருங்களேன். அங்கேயும் கொஞ்சம் சைட் போட்டு கொடுங்களேன்.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Mullai Periyaar - Thekkadi,இந்தியா
21-ஜூலை-201214:01:26 IST Report Abuse
Mullai Periyaar உங்கள் நாட்டிலே உள்ள நீர் அதாரத்தினைக் காக்க தெம்பில்லை. மற்ற மாநில ஆறுகளைக் கபளீகரம் செய்ய ஆசைப் படும் தமிழன்கள் எல்லோரும் மனிதர்களா?
Rate this:
0 members
0 members
0 members
Mohanadas Murugaiyan - Ras al Khaima,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜூலை-201220:39:54 IST Report Abuse
Mohanadas Murugaiyanஐயா, பேரை தெரிவிக்க தைரியம் இல்லாமல் முல்லை பெரியார் பெயரில் கருத்து தெரிவிக்கும் அதிபுத்திசாலியே... முல்லை பெரியார் அணையின் வரலாறு தெரியுமா உங்களுக்கு ....???யாரோ ஒரு பிரிட்டிஷ் காரன் இந்தியன் பட்டினியால் சாவது பொறுக்கமுடியாமல் அரசு பணத்தைக்கூட எதிர்பார்க்காமல் தன் சொத்துக்களை விற்று அணை கட்டினான். ஆனால்,அதில் விளையும் அரிசியும் காய்கறிகளையும் சாப்பிடும் நீங்கள் அதை உடைக்க வேண்டும் என்கிறீர்கள்.உங்களுக்கு தேசிய ஒருமைப்பாடும் தெரியவில்லை, அணையை உடைத்தால் அரிசியும் காய்கறியும் கிடைக்காது என்பதும் தெரியவில்லை. மொழிவாரி மாநிலங்கள் அமைத்தபோது இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் தான் அதிகம். மத்திய காங்கிரஸ் அரசு செய்த சூழ்ச்சியால் அதை கேரளாவோடு இணைக்கப்பட்டது. அதனால்தான் நீங்கள் ஆட்டம் போடுகிறீர்கள். ஏற்க்கனவே, தமிழ்நாட்டில் விவசாய நிலங்கள் மனைக்கட்டுகள் ஆக கர்னாடக அரசுகள் வழி செய்தது. மிச்ச நிலங்களையும் தரிசாக்கினால் பாதிப்பு தமிழனுக்கு மட்டுமல்ல. மலையாளிகளுக்குதான் அதிக பாதிப்பு. அணை பலவீனமாக இருக்கிறது என்று சொல்லும் உங்கள் அரசு, சோதனை செய்ய போடப்பட்ட ஓட்டைகளை அடைக்கக் கூட தடை செய்கிறது ..மக்கள் மேல் அக்கறை உள்ள அரசு அவர்களாகவே அதை அடைக்க வலியுறுத்த வேண்டாமா....???? இதுதான் பலவீனமாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லும் அணை மீது நீங்கள் காட்டும் அக்கறையா...???சுப்ரீம் கோர்ட் பலமுறை சொன்னபின்பும் சொன்ன பொய்யையே மீண்டும் மீண்டும் நீங்கள் சொல்வதன் காரணம் என்ன....??? தன் மகன் செத்தாலும் பரவாயில்லை .மருமகள் விதவையாக ஆக வேண்டும் என்பதைப்போல் இருக்கிறது உங்கள் அரசியல்வாதிகள் சொல்வது .... .புரிந்துகொள்ளுங்கள் சகோதரர்களே........
Rate this:
0 members
0 members
0 members
Cancel
ChinnaGounder Gounder - Malmo,சுவீடன்
21-ஜூலை-201213:44:35 IST Report Abuse
ChinnaGounder Gounder அப்போ நம்ம வடிவேலு கிணத்த காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணுனது உண்மை தான் போல..டேய் ..உங்க பணத்தாசைக்கு ஒரு அளவே இல்லையாடா..
Rate this:
0 members
0 members
0 members
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
21-ஜூலை-201212:52:01 IST Report Abuse
maran கட்சி பேதம் பார்க்காமல் தண்டனை குடுக்க அம்மாவால் மட்டுமே முடியும் ...ஆனா அம்மாதான் கொடநாட்டில் உள்ளார்களே .....அது இருக்கட்டும் இந்த மாதிரி விசயத்திற்கு அரசு வருவாய்துறை அதிகாரிகள் துணை போறாங்களே. அவர்கள் சம்பளத்தை நிறுத்தி வைத்து விளக்கம் அளித்த பின் பெற்றுக்கொள்ளலாம் என அம்மா சட்டம் கொண்டு வருவார்களா ?....வருவாய் துறையே புது m L a ( பெண் ) வீட்டில் கலி ஆட்டம் ஆடி பதவி பறி போய் இருக்கிறார் .....இனிமே புது அமைச்சர் வந்து ....கிழிஞ்சது போ ...
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Jancy Rani - Berlin,ஜெர்மனி
21-ஜூலை-201209:51:32 IST Report Abuse
Jancy Rani ஐயோ ஆத்த கண்டுபுடிச்சி குடுங்கய்யா கடலையும் பத்திரமா பாத்துகிடுங்கய்யா ஐயோ என் கிணத்த காணோம் அய்யா அவசரத்துல உங்களுக்கு தர்ற பணத்த எடுக்க மறந்துட்டேன்யா
Rate this:
0 members
0 members
0 members
Cancel
saraathi - singapore,சிங்கப்பூர்
21-ஜூலை-201206:58:00 IST Report Abuse
saraathi சுயநலம் தவறில்லை,ஆனால் இதுபோன்ற முட்டாள்தனமான சுயநல செயல்கள் தனக்கும் அடுத்து வரும் தலைமுறைக்கும் பேராபத்தை தரும். வீட்டு மனைக்கு அனுமதிதரும் பல அதிகாரிகளும் நல்ல விவசாய நிலங்களை "குறிப்பிடப்பட்டுள்ள நிலம் மேற்ப்படி விசாரணையில் விவசாயத்திற்கு லாயக்கற்றது என தெரியவருகிறது "எனும் குறிப்போடு வீட்டு மனைகளாக்க அனுமதித்திருப்பதை இருதயத்தில் இரத்தம் கசிய மிகுந்த வலியுடன் பார்த்திருக்கிறேன். என்ன அளவில் அத்தகைய வீட்டு மனைகளை வாங்குவதை தவிர்த்துவருவதுடன் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் வாங்கவிடாது அறிவுருதிக்கொண்டு (அவர்கள் பாசையில் நட்சரிதுக்கொண்டுதான்) இருக்கிறேன்.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
21-ஜூலை-201202:29:04 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை ஆத்த புடிச்சது ரியல் எஸ்டேட் காரங்க இல்ல அ.தி.மு.க காரங்க , அதி.மு.க ஆட்சி வந்தாவே இந்த மாதிரி நடக்குறது வழக்கம்தானே
Rate this:
0 members
0 members
0 members
NavaMayam - New Delhi,இந்தியா
21-ஜூலை-201215:09:43 IST Report Abuse
NavaMayamஇதையும்தாங்க சொந்த ஆத்தா மாத்திகிட்டாங்க ..ஆத்த ஆத்தா தானே மாத்திகிட்டாங்க ......
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
21-ஜூலை-201200:59:57 IST Report Abuse
Thangairaja என்னமோ கடந்த ஆட்சியில் தான் நிலங்கலைஎல்லாம் அபகரித்து ஆட்டைய போட்டதா அத்தனை முன்னாள்கள் மேலயும் குண்டர் சட்டங்களை பாய்ச்சினார்கள். இப்போது மட்டும் என்ன வாழுதாம் சாதாரண பிசாசு பூதமாகி கொழுத்துப் போய் அலைகிறது ஆறு கடல்னு பார்க்காமல். உண்மையை சொல்லனும்னா கடந்த ஆட்சியிலும் இதே ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள் தான் கபலீகரம் செய்தது, அதை கவனிக்காமல் விட்டது அந்த ஆட்சியின் குறைபாடு எனலாம். இப்போது தான் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து விட்டதே ஏன் இன்னும் கூஜாவுக்குள் பிடித்து அடைக்காமல் அதற்கு காவு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Devil - Chennai,இந்தியா
21-ஜூலை-201205:36:39 IST Report Abuse
Devilஹலோ தங்கை, செய்தியை ஒழுங்காக படிக்கவும் //ஆறு ஆண்டுகளுக்கு முன்பே, "சைட்" அமைத்து விட்டனர். விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, உடனே சர்வே செய்து ஆறு ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தால் உடனே மீட்கப்படும்//. வீட்டுமனை வியாபாரம் மட்டும்தான் இப்போ நடக்குது. இந்த மாதிரி காமென்ட் போட்டு மக்களை எப்பவுமே அடிமுட்டாளா வெச்சுக்கணும்னு உங்க தலைவர் கத்துகுடுத்த பாடமா? நீ மொதல்ல முழிச்சிக்க கண்ணு....
Rate this:
0 members
0 members
0 members
Pannadai Pandian - wuxi,சீனா
21-ஜூலை-201209:00:01 IST Report Abuse
Pannadai Pandianஒழுங்கா படி....சொம்படிக்க உண்மையை திரிக்காதே....
Rate this:
0 members
0 members
0 members
K.Sugavanam - salem,இந்தியா
21-ஜூலை-201209:15:21 IST Report Abuse
K.Sugavanamஅது அதிமுகவோ,திமுகவோ இல்லைதேமுதிகவோ.எல்லோர் மேலையும் லபக்கினதாக கேசுகள் உள்ளன.மக்கள் தான் கொதித்தெழ வேண்டும்....
Rate this:
0 members
0 members
0 members
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
21-ஜூலை-201212:15:55 IST Report Abuse
வைகை செல்வன்எல்லாம் அரை வேக்காடுகள் என்பதை ஒவ்வொரு கருத்திலும் நிரூபிக்கிறார்கள்.. முழுசா படிக்காம கருத்து எழுதுவதில்......
Rate this:
0 members
0 members
0 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.