திருப்பூர் :அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீடு பிரீமியத் தொகை, திடீரென ஆறு மடங்கு அதிகரிக்கப் பட்டு உள்ளது. இது, அரசு ஊழியர்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும், மருத்துவ காப்பீட்டுக்காக, மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, சம்பளத்தில் பிடித்தம் செய்யப் படுகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனம் மூலம், காப்பீடு செய்யப் பட்டு இருந்தது.காப்பீட்டு தொகைஇதற்காக, மாதம்தோறும், சம்பளத்தில் 25 ரூபாய் பிடித்தம் செய்யப் பட்டது. இதன்மூலம், ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. தற்போது, அரசு ஊழியர்களுக்கான மருத்துவ இன்சூரன்ஸ் செய்ய, பல்வேறு நிறுவனங்களில் மாநில அரசு டெண்டர் கோரியது.அதன் அடிப்படையில், "யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனத்துக்கு, அனுமதி வழங்கப் பட்டு உள்ளது. காப்பீட்டுத் தொகை, இரண்டு முதல், நான்கு லட்சம் ரூபாய் என, உயர்த்தப் பட்டு உள் ளது.
கூடுதல் சிகிச்சை:முந்தைய காப்பீட்டு நடைமுறைகளிலிருந்து, கூடுதலாக சிகிச்சை மற்றும் கூடுதலாக புதிய மருத்துவமனைகள், இந்தத் திட்டத்தில் சேர்க்கப் பட்டு உள்ளன. அந்த வகையில், 54 வகையான நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சையும்; ஏழு வகையான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள் ளலாம். இதற்கான மாத பிரீமியம், 150 ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது.ஜூலை 2012 முதல், ஜூன் 2016ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு, பாலிசி அமலில் இருக்கும். இதற்காக, இந்த மாதம் முதல், அரசு ஊழியர் சம்பளத்தில், 150 ரூபாய் கட்டாயம் பிடித்தம் செய்யவும், அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.இதுகுறித்த சுற்றறிக்கை, அனைத்து துறை அலுவலகங்களுக்கும் அனுப்பப் பட்டு உள்ளது. அரசின் இந்த உத்தரவு, அரசு ஊழியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஆறு மடங்கு:அரசு ஊழியர் சங்கத்தினர் கூறியதாவது: காப்பீட்டுத் தொகை, இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கேற்ப பிரீமியத் தொகை, 25ல் இருந்து, 50 அல்லது 75 ரூபாயாக உயர்த்தி இருக்கலாம். ஆனால், அதை ஆறு மடங்கு உயர் த்தி உள்ளனர்.தற்போது பிடித்தம் செய்யும் 150 ரூபாயிலும், குறிப்பிட்ட தொகையை அரசு பிடித்தம் செய்து கொண்டு தான், காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்த உள்ளது. புதிய மருத்துவமனை, கூடுதல் சிகிச்சை என்றெல்லாம் காரணம் தெரிவித்தாலும், அதிகபட்சமாக, 50 சதவீதம் பேர் கூட, பயன் பெறுவதில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஸ்டார் ஹெல்த் இன்சுரன்ஸ் இருந்தபோதே எல்லா அரசு ஊழியரும் பயன் பெற முடியாமல் போனது ,வியாதிக்கு உண்டான மருத்துவ கட்டணத்தை முழுமையாக கொடுக்கவில்லை என்ற குற்ற சாட்டு இன்சுரன்ஸ் நிறுவனத்தின் மீது உண்டு ,அந்த பாதிப்பு எனக்கும் ஏற்பட்டது , கை உடைந்து அறுவை சிகிச்சை செய்த போது முழு தொகையையும் வழங்கவில்லை ,கடன் வாங்கி கொடுத்து விட்டு வீடு திரும்பினேன் ,இப்போது ஆறு மடங்கு பிரிமியம் தொகையை உயர்த்தி உள்ளது அரசு,இது போன்ற செயல் அரசு உழியரின் மனது நோகும் செயல் ஆகும் , அதே நேரத்தில் அனைத்து அறுவை சிகிச்சைகளின் முழு கட்டணத்தையும் [அறை வாடகை ,படுக்கை கட்டணம் உட்பட ]அரசே ஏற்று கொள்ளுமா? அப்படி செய்தால் இந்த புதிய திட்டத்தையும் ,புதிய பிரிமியம் தொகையையும் ஏற்று கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
இது ரொம்ப அதிகம். ஏன் இவ்வளவு உயர்த்தப்பட்டது என்று புரியவில்லை. மருத்துவ படி நாங்கள் பெறுவது வெறும் 100 மட்டும் தான். ஆனால் மருத்துவ காப்பீடு... Rs 150. சமீபத்தில் எனக்கு நடந்த ஆபரேஷன்க்கு 60000 செலவானது. ஆனால் இதை என்னால் கிளைம் செய்ய முடியவில்லை. மாதா மாதம் blood பிரஷர் மற்றும் சுகர் நோயாளிகள் ( அரசு ஊழியர் ) செலவு செய்வதை தர வேண்டாம். மருத்துவ கட்டணத்தை கிளைம் செய்ய எதாவது செய்யுங்கள் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.
சமீபத்தில் திருச்சியில் உள்ள மிகப் பிரபலமான தனியார் மருத்துவ மனையில் நண்பர் ஒருவர் உடல் வலி என்பதாக அனுமதிக்கப்பட்டார். முதல் இரண்டு நாட்களுக்கு பரிசோதனை என்ற பெயரில் சில சோதனைகளை செய்தார்கள். இரண்டு நாட்களும் எந்த சிகிச்சையும் செய்யவில்லை. எடுத்த சோதனைகளில் என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று அடுத்த சோதனைகளை செய்தார்கள். இப்படி அனைத்து சோதனைகளையும் செய்தபிறகு, கடைசியில் எடுத்த சோதனையின் அடிப்படையில் "இதுக்கு முன்பு சாப்பிட்ட ஏதாவது மாத்திரையின் அழற்சியால் வந்த வலி என்றும், இது தானாகவே சரியாகிவிடும்" என்று சொல்லி பத்து நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு போகச் சொல்லி விட்டார்கள். இதற்க்கான மருத்துவக் கட்டணம் ரூபார் 65 ஆயிரங்கள். இது போன்று இந்த ஒரு மருத்துவ மனையில் மட்டுமே நடப்பதல்ல என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். தனியார் மருத்துவமனைக்காக இப்படி வரிந்துகட்டும் முந்தைய, இப்போதைய அரசுகள் தன்னிடம் உள்ள மருத்துவமனைகளை தரமனதாக்கி வசதி படைத்தவர்களும், அரசியல் தலைவர்களும் சிகிச்சை பெறுவதற்கான முறையில் மேம்படுத்தினால் உண்மையிலேயே மக்கள் பயன் பெறுவார்கள். அனால் நம்மை போன்ற சாமானியனால் தினமலரில் எழுதி திருப்திபட்டுகொள்ளமட்டும்தான் முடியும்.
உலகில் தினமும் புதுபுது வியாதிகள் தோன்றுகிற இந்த காலகட்டங்களில் மருத்துவக்காப்பீடு தேவையான ஒன்று. ஆனால் அதில் சில குளறுபடிகள் இருக்கத்தான் செய்கிறது. காப்பீடு இருக்கும் பட்சத்தில் fees தொகையை நிர்வாகம் அதிகரிக்கிறது. அரசு ஊழியர்களின் பொறுத்தவரை இதிலும் சலுகை கட்டணமே. இதே நான்கு லட்ச ரூபாய்க்கு நாம் கட்ட வேண்டிய ப்ரீமியம் நான்காயிரம் ரூபாய்க்கு மேலே வரும். இதிலும் அதிருப்தி என்றால் அவர்களுக்கு காப்பீடு வேண்டாம், அரசு மருத்துவமனைகளுக்கு போகச்சொல்லவும். அதற்க்கு எந்த காப்பீடும் பிடித்தமும் தேவை இருக்காது. ஸ்டார் கம்பெனி மு.க.வின் கமிஷன் மண்டி. எனவே அரசு நிறுவனமான united கம்பெனிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது வழக்கமான் ஒன்றுதான்.
மருத்துவக் காப்பீடு செஞ்சா பலன் உங்களுக்குன்னு நெனைச்சா அதை விட முட்டாத்தனம் ஒலகத்திலே இல்லே... டாக்டர் காசு பாக்க அவன் கிட்டே இருக்கிற எல்லா டெஸ்டையும் எழுதி கொடுத்து, ஒங்க உடம்பிலே இருக்கிற எல்லா பார்ட்ஸ்களையும் கழட்டிப் பாக்கனுமுன்னு சொல்லுவான்... இதில் எந்த வித பொய்யுரையும் இல்லை.. இன்சூரன்ஸ் கம்பெனியோ, எப்படி எல்லாம் உங்க கிளைம்ஸ்களை தராம மறுக்கலாம் என்பதற்கு ஒரு மருத்துவ நிபுணர் குழுவையும், இன்சூரன்ஸ் பிரீமியத்தை எப்படி ஏத்தலாம் என்று இன்னொரு குழுவையும் வச்சி நம்மளை முட்டாப்பயல்களாக்குவது தான் காப்பீடு... உங்கள் பிரீமியம், அவர்களுக்கு காப்பீடு... புரியுதா ?? அமெரிக்காவிலே மருத்துவத்துறை நாசமாப் போனதுக்கு காரணம், தொழிலாளிகளுக்கு பிரீமியம் கட்ட முடியாமல் தொழில் நசுங்க காரணம், எது என்று நினைக்கிறீர்கள் ?? எல்லாம் பிரைவேட் மருத்துவ காப்பீடு போட்ட வேட்டு தான்.. ஹூம்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.