தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை: ராமதாஸ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை:""தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை. போதை மருந்து, மதுபானத்தால் பாலியல் வன்முறைகள் பெருகியுள்ளன; குடும்ப வன்முறைகள் அதிகரிக்கின்றன'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

கோவை, காந்திபுரத்தில் பா.ம.க., சார்பில், நேற்று மது ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. கண்காட்சியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் துவக்கி வைத்தார்.

முன்னதாக, நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ராமதாஸ் கூறியதாவது:

அக்கறை இல்லை:
தமிழகம் மதுவால் தள்ளாடிக் கொண்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, குடிக்கும் வயது 25 ஆக இருந்தது. தற்போது 13 வயதிலேயே, பள்ளிச் சிறுவர்கள் கூட, குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர். 2003ம் ஆண்டு, "டாஸ்மாக்' துவங்கியபோது, 2,800 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கிடைத்தது. தற்போது, 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. திராவிட கட்சிகளுக்கு, மக்கள் நலனில் அக்கறை இல்லை. ஆனால், 22 ஆண்டுகளாக, பா.ம.க., மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.மதுக்கடைகளை, அரசே நடத்தும் கொடுமை, தமிழகத்தில் மட்டுமே உள்ளது.

ஆறு மாதம் கெடு:தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட, அரசுக்கு, நாங்கள் ஆறு மாதம் "கெடு' விதிக்கிறோம். அதற்குள் படிப்படியாக, அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்; பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். மதுக்கடைகளை அரசு மூடாவிட்டால், நாங்களே பூட்டு போட்டு, கடைகளை மூடி, போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை. போதை மருந்து, மதுபானத்தால் பாலியல் வன்முறைகள் பெருகியுள்ளன. தினமும் 100 ரூபாய்க்கு மது குடிப்பதால், தனி மனிதன் ஒருவரிடம் இருந்து, ஐந்தாண்டுகளுக்கு அரசுக்கு, ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், குடிப்பழக்கம் மனிதனை மிருகமாக்குகிறது.போதையில் வரும் கணவன், மனைவியை தாக்கி, துன்புறுத்துகிறான்; மகளிடம் கூட தவறாக நடக்கிறான். மதுவை ஒழிப்பதால், இது போன்ற வன்முறைகள் நடக்காமல் இருக்கும்.இவ்வாறு, ராமதாஸ் தெரிவித்தார்.

"இனி, தனியாக நிற்கப் போகிறோம்!'"சட்டசபை தேர்தலில் கூட்டணி வைக்கும்போது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்ற நிபந்தனையை, நீங்கள் முன் வைத்திருக்கலாமே...' என, ராமதாசிடம் கேட்டபோது, ""இனி தான், நாங்க, தனியாக நிற்கப்போகிறோமே... திராவிடக் கட்சிகளை ஒழிப்பதற்கு காலம் எங்களுக்கு இட்டிருக்கிற கட்டளை இது. தமிழகத்தில், ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளை அப்புறப்படுத்த யார் முன்வருவார்கள் என்ற எண்ணம், மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில், மது ஒழிப்பு கொள்கையை மட்டும் முன்வைத்து, நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம். நாங்கள் ஆட்சியமைத்தால், முதல் கையெழுத்தே, தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தும் உத்தரவு தான்,'' என்றார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (50)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
itashokkumar - Trichy,இந்தியா
23-ஜூலை-201218:07:00 IST Report Abuse
itashokkumar காமராஜர் கக்கன் போன்றோரின் சொத்து கணக்கு என்ன. ஆட்சிக்கே வராத பா ம க வின் சொத்து கணக்கு என்ன.
Rate this:
Share this comment
Cancel
Lightning View - Fahaheel,குவைத்
23-ஜூலை-201211:38:06 IST Report Abuse
Lightning View ""இனி தான், நாங்க, தனியாக நிற்கப்போகிறோமே". உண்மைதான் யாரும் கூட்டணியில் சேர்பதாக இல்லை. ஜாதி, மத அரசியில் மக்கள் மத்தியில் செல்லாது.
Rate this:
Share this comment
Cancel
Shyamala R - Chennai,இந்தியா
21-ஜூலை-201223:40:46 IST Report Abuse
Shyamala R "இனி, தனியாக நிற்கப் போகிறோம்" இது நல்ல காமெடி. நல்லா கை தட்டி சிரிங்க...
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
21-ஜூலை-201223:02:37 IST Report Abuse
jagan சட்டம் ஒழுங்காக இருந்தால்.... உனக்கும் உன் பிள்ளைக்கும் புழல்ல தாண்டி உப்புமா......ரொம்ப கேக்காதே....நடந்துடும்
Rate this:
Share this comment
Cancel
senthil kumar - lagos,இந்தியா
21-ஜூலை-201219:08:45 IST Report Abuse
senthil kumar தலைவரோட மது ஒழிப்பு மாநாடு நடந்த ஊரில் எல்லாம் டாஸ்மாக் விற்பனை அன்று மட்டுமே அதிகமாக இருந்ததாக ஒரு கருத்து கணிப்பு சொல்கிறது. முதலில் உங்க கட்சியின் முன்னணி மற்றும் அடிமட்ட தலைவர்கள் குடிப்பதே இல்லை என்ற உறுதிமொழியை உங்களால் தரமுடியுமா திரு ராமதாஸ் அவர்களே
Rate this:
Share this comment
Cancel
sriram - chennai ,இந்தியா
21-ஜூலை-201218:47:10 IST Report Abuse
sriram பூரண மது ஒழிப்பு நல்ல கொள்கையே.. ஆனால் தங்கள் கட்ச்சியில் 234 சீட்களுக்கும் ஆட்கள் இருக்கின்றார்களா
Rate this:
Share this comment
Cancel
sriram - chennai ,இந்தியா
21-ஜூலை-201218:17:32 IST Report Abuse
sriram தமிழ்நாட்டில் ப.ம.க என்னும் கட்சி உள்ளது,தலைவர்கள் இருக்கிறார்கள் ,தொண்டர்கள்தான் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Kurukkumuttan, Chennai - Beirut,லெபனான்
21-ஜூலை-201217:04:18 IST Report Abuse
Kurukkumuttan, Chennai தகுதியே இல்லேனாலும் ஒரு கருத்தை அரசியல்வாதி சொன்னால் தான் பத்திரிகையிலும் வரும், மக்களிடமும் சென்று சேரும்.
Rate this:
Share this comment
Cancel
srinivasancm - gobi,இந்தியா
21-ஜூலை-201216:45:52 IST Report Abuse
srinivasancm ஆமா இவரு engg காலேஜ் படிக்கரவங்க ப்ரீயா seat கொடுக்கறாரு
Rate this:
Share this comment
Cancel
Vaithi Esvaran - Chennai,இந்தியா
21-ஜூலை-201216:19:42 IST Report Abuse
Vaithi Esvaran அன்புமணியின் மருத்துவ கல்லூரி அனுமதி முறை கேடுகள் எந்த சட்டம் ஒழுங்கில் வருகிறது. சட்டம் ஒழுங்கு பற்றி உங்களிடம்தான் தெரிந்து கொள்ள வேண்டும். &39&39எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் ........&39&39 என்று உம்மை இந்த மது எதிர்க்கும் விஷயத்தில் பாராட்ட முடியாத காரணம் நாளை பெட்டி வந்தததும் அல்லது குடிகாரர் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வந்ததும் நீர் என்ன செய்வீர் என்பதால். வைத்தி சென்னை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்