ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விலை: அமைச்சரவைக்கு அதிகாரக்குழு பரிந்துரை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:""ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணயம் குறித்து, மத்திய அமைச்சரவை தான், இறுதி முடிவு எடுக்கும்,'' என, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களையும் ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு புதிதாக விலை நிர்ணயம் செய்து, மறு ஏலம் விடும்படியும் தெரிவித்தது.

வலியுறுத்தல்:இதையடுத்து, ஸ்பெக்ட்ரத்துக்கான விலையை நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்த, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), ஒரு யூனிட் (மெகா ஹெட்ஜ்) ஸ்பெக்ட்ரத்துக்கான அடிப்படை விலையாக, 3,622 ரூபாய் என, நிர்ணயம் செய்யும்படி, பரிந்துரை செய்தது. இந்த தொகை அதிகமாக உள்ளதாகவும், இவ்வளவு அதிகமான தொகை நிர்ணயித்தால், மொபைல் போன் சேவை கட்டணத்தை, 100 சதவீதம் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும், தொலைத் தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

பரிந்துரைகள்:இந்நிலையில், சிதம்பரம் தலைமையிலான அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழு, இதுகுறித்து ஏற்கனவே ஒருமுறை ஆலோசித்தது. இதை தொடர்ந்து, ஸ்பெக்ட்ரத்துக்கான விலை, தொகையை செலுத்துவதற்கான விதிமுறைகள் ஆகியவை பற்றிய முடிவு செய்வதற்காக, இந்த அமைச்சரவை குழுவின் இரண்டாவது கூட்டம், நேற்று நடந்தது.

இரண்டரை மணி நேரம் நடந்த கூட்டத்துக்கு பின், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் கூறுகையில்,""ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்படி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு, சில பரிந்துரைகளை அளித்துள்ளோம். இதை பரிசீலித்து, ஸ்பெக்ட்ரம் விலை குறித்து, மத்திய அமைச்சரவை தான் இறுதி முடிவு எடுக்கும்,'' என்றார்.

இதற்கிடையே, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச கேட்பு விலையைவிட, குறைவான விலையை நிர்ணயிக்கும்படி, மத்திய அமைச்சரவைக்கு, அதிகாரம் பெற்ற அமைச்சரவைக் குழுபரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kunjumani - Chennai.,இந்தியா
21-ஜூலை-201222:11:40 IST Report Abuse
Kunjumani சவுண்டை அளவிடுவது டெசிபல் என்ற அளவுகோலில், மனிதனின் முட்டாள்தனத்தை அளவிடுவது மத்திய அமைச்சர் சிபில் என்ற அளவுகோலில் என்றால் அவரைவிட ஒரு முட்டாள் இந்த உலகில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
21-ஜூலை-201207:55:54 IST Report Abuse
rajan சீமானே உடாதே விட்டு விளையாடு உன் சித்து விளையாட்ட. கனி ராசா மாதிரி இன்னும் எதனை ராசாக்கள் வரபோகிரார்களோ ஆண்டவரே காப்பாத்து இந்த மான்குட்டிகளை
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
21-ஜூலை-201205:29:18 IST Report Abuse
Pannadai Pandian ஊழலில் சரத் பவாரையும், ஓட்டை வாயில் மனிஷ் திவாரி, திக் விஜய் சிங்கையும், தில்லு முள்ளு பேச்சில் கருணாநிதியையும், வியாக்யானம், சுயநலத்தில் ப.சிதம்பரத்தையும், ஆடம்பரத்தில் சசி தரூரையும் மிஞ்சக்கூடியவர் இவர். இவரிடம் இந்திய மக்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
21-ஜூலை-201200:27:00 IST Report Abuse
Thangairaja இது தானே முன்பும் நடந்தது. இப்போதைய விலை நிர்ணயமும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இழப்பை சந்தித்ததாக புரளியை கிளப்புவார்களோ என்னவோ.....டிராய் நிர்ணயித்த விலை அதிகமாயிருப்பதால் நுகர்வோரிடமிருந்து நூறுக்கு இருநூறு சதவீதமாக வாங்குவார்கள். ஆக மொத்தம் இழப்பு என்னவோ மக்களுக்கு தான்.......புரியாத மக்கள், புரிந்தும் புரியாத சி பி ஐ, மற்றும் நீதிமன்றங்கள். புரிந்தும் பூசணிக்காயை வெறும் சோற்றுக்குள் மறைக்கும் மீடியாக்கள்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
21-ஜூலை-201205:36:33 IST Report Abuse
Pannadai Pandianஇதுதான் முன்பும் நடந்தது என்று உனக்கு தெரியுமா ? ஓட்ட, வாங்காத கமிஷனுக்கு ஏன் இப்படி டோலக் வாசிக்கறே ? இதுதான் நடந்தது, 2G யை வைத்து பெருங்கொள்ளை அடித்து பொதுத்தேர்தலிலே 5000 ரூபாய் ஒரு ஒட்டு என்று வியாபாரம் செய்தார்களே அப்பவே புரியலையா ??? அதவிடு, ரியல் எஸ்டேட் தொழில் எப்படி கட்டுக்கடங்காமல் விண்ணில் பறந்தது, அப்போதும் புரியலையா இந்த 2G கொள்ளை நடந்ததை பற்றி ??? செய்யும் தொழிலே தெய்வம் என்று சிவனேன்னு கிடக்க கூடாது. சுத்தும் முத்தும் பாக்கணும் என்ன நடக்குதுன்னு. சரி சரி.....காப்பிக்கு பால் வேணும், ஒட்டகத்த சீக்கிரம் கர....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்