india news | ராம்தேவ் ஆதரவாளர் பாலகிருஷ்ணா கைது: சி.பி.ஐ., அதிரடி| Dinamalar

ராம்தேவ் ஆதரவாளர் பாலகிருஷ்ணா கைது: சி.பி.ஐ., அதிரடி

Added : ஜூலை 21, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ராம்தேவ் ஆதரவாளர் பாலகிருஷ்ணா கைது: சி.பி.ஐ., அதிரடி

டேராடூன்:போலி கல்விச் சான்றிதழ்கள் கொடுத்து, பாஸ்போர்ட் பெற முயன்ற வழக்கில், நேரில் ஆஜராகாததை அடுத்து, ராம்தேவ் ஆதரவாளர் பாலகிருஷ்ணாவை, ஜாமினில் வெளிவர முடியாத, "வாரன்ட்'டில் கைது செய்ய, சி.பி.ஐ., உத்தரவிட்டதை அடுத்து, நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

ஊழலுக்கு எதிரான இயக்கத்தை நடத்தி வருபவரான, பாபா ராம்தேவின் ஆதரவாளர்களில் ஒருவர், பாலகிருஷ்ணா. இவர் பாஸ்போர்ட் பெறுவதற்காக, உத்தர பிரதேச மாநிலம் குர்ஜா பகுதியில் உள்ள சமஸ்கிருத மகா வித்யாலயாவில் இருந்து, பள்ளிக் கல்வி மற்றும் பட்டப் படிப்பு தொடர்பாக, போலிச் சான்றிதழ்களை பெற்றார். அவருக்கு உதவியாக, இக்கல்வி நிலையத்தின் முதல்வர் செயல்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களை பயன்படுத்தி, உ.பி., மாநிலம், பரேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில், பாஸ்போர்ட் பெற முயன்றுள்ளார். அவருடைய ஆவணங்கள் போலி என்பதை, பாஸ்போர்ட் அதிகாரிகள் கண்டறிந்தனர்.இந்திய பாஸ்போர்ட் நடைமுறைச் சட்டங்களை மீறியது, போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், கடந்தாண்டு ஜூலை 12ம் தேதி இவர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக அவர், சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதை அடுத்து அவரை ஜாமினில் வெளி வர முடியாத, "வாரன்ட்'டில் கைது செய்ய, நேற்று சி.பி.ஐ., நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamilan-indian - madurai,இந்தியா
21-ஜூலை-201220:17:48 IST Report Abuse
Thamilan-indian யாரோ ஒருவர் வெளிநாடு செல்ல யாரோ ஒருவரிடம் போய் பாஸ் போட்டிற்காக கெஞ்ச வேண்டும் என்கிறது அரசு. அதை வைத்துகொண்டு அரசு அதிகாரிகளும் நடவடிக்கை என்ற பெயரில் நாடகமாடுகின்றனன்ர். அவர் பாஸ்போர்ட்டு வைத்திருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?. பிரச்சினை இல்லாமல் ஊர் திரும்பி வந்தது அரசுக்கு பிடிக்கவில்லையா?. இங்கு அரசுக்கு இவர்கள் சிக்கல் ஏற்படுத்துவதால் பாஸ்போர்ட் நம்பரை வைத்து தங்கள் ஏஜெண்டுகள் மூலம் இவர்களை அந் நாடுகளிலேயே தீர்த்துகட்ட அரசியல் ஏஜெண்டுகள் நடத்தும் நாடகமிது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை