மதுரை: அரசு மருத்துவமனை, மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கப்படும், மது, போதை நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு, மறுவாழ்வுக்கு அழைத்துச் செல்வதற்கான சிறப்பு மையம் அரசு மருத்துவ மனைகளில் செயல்படுகிறது. இங்கு சமீபகாலமாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் சராசரியாக ஒருநாளைக்கு 10 முதல் 20 நோயாளிகள் வருகின்றனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிப்பது, மனநல ஆலோசனை வழங்குவதென, டாக்டர்கள் குழுவாக செயல்படுகின்றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் மனைவிகள், அவர்களது குழந்தைகள் என... ஒட்டுமொத்த குடும்பமே, மருத்துவமனையில் தஞ்சமடைகின்றனர்.
குறிப்பாக, கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். முன்பெல்லாம், பத்து கிராமங்களுக்கு ஒரு டாஸ்மாக் கடை இருந்தது. தற்போது, கிராமங்கள் தோறும் டாஸ்மாக் கடைகள் பெருகியதால், குடிப்பவர்களின் எண்ணிக்கையும், இருமடங்காக உயர்ந்துள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது, குடிப்பவர்களின் மனைவியும், குழந்தைகளும் தான். மற்ற நோய்களைப் பொறுத்தவரை, நோயாளிகள் டாக்டரிடம் மிகுந்த அனுசரணையுடன் நடந்து கொள்வர். குணமாக வேண்டும் என்பது தான், நோயாளிகளின் குறிக்கோளாக இருக்கும். போதைக்கு அடிமையானவர்களுக்கு ஊசி போட்டு, மருந்து கொடுப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். மதுப் பழக்கத்திலிருந்து மீளவேண்டும் என பெரும்பாலானோர் நினைப்பதில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது, முரட்டுத்தனமாக நடந்து கொள்வர். இவர்களை கையாள்வது, டாக்டர், நர்ஸ்களுக்கு சவாலான விஷயம்.
கல்வி கற்பிக்கும் பள்ளி நேரத்தை விட அதிகம்: இதற்கான தீர்வு குறித்து, டாக்டர்கள் கூறியதாவது: மதுக் கடைகளை அதிகம் திறந்தால், அரசுக்கு வருமானம் கிடைக்கலாம் தான். ஆனால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் என்பதையும் உணரவேண்டும். கல்வி கற்பிக்கும் பள்ளிகளே காலை 9 முதல் மாலை 4 மணி வரை தான் செயல்படுகின்றன. குடிமக்களை கெடுக்கும் மதுக் கடைகள் இரவு 10 மணி திறந்திருக்கின்றன. இந்த விற்பனை நேரத்தை குறைக்கலாம். பள்ளி, கல்லூரி, நெருக்கமான குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை, "பொது நலன் கருதி' மூடச் சொல்லலாம். மதுவின் விலையை உயர்த்தலாம், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அண்மையில் நான் பார்த்த படத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்கள், அதுவும் ஒரு மிக சிறப்பான கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தண்ணீர் தொட்டியின் மேல் வைத்து குடிப்பது போல் கதை அமைத்து இருந்தார்கள். கதையின் மைய கருத்து மாணவர்கள் விரும்பிய துறையில் படிக்க வேண்டும், பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை திணிக்க கூடாது என்பது.
ஆனால் என்னை பாதித்தது, மாணவர்கள் குடிப்பதை மிக சகஜமாக காட்டி அதை ஒரு அன்றாட சம்பவம் போல் காட்டி இருப்பது, அதை பற்றி யாருமே கேள்வி எழுப்பாதது?.
மேலை நாடுகளில் குடிப்பதை பற்றி தன் குழந்தைகளுக்கு அழகாக எடுத்து சொல்லும் பெற்றோர்கள் மாதிரி நம் மக்கள் இருக்கிறர்களா? என்ன செய்ய வேண்டும் நாம்?.
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். இதனால் கள்ள சாராயம் பெருகும். ஆனால் கட்சி போர்வையில் கள்ள சாராயம் காய்ச்ச முற்படுபவர்களை ஜாமீனில் வெளி வர முடியாத படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். அதற்காக அவசர சட்டம் கொண்டு வந்தாலும் பரவாயில்லை .போதையின் பாதையில் தமிழகம் நீண்ட நாள் சென்றால் வருங்கால சந்ததியினரே அழிந்து விடும் அபாயம் இருக்கிறது .குஜராத்தை பின்பற்றுமா தமிழகம் ?
அத்தியாவசிய பொருள்கள் கூட இப்படி கிடை வழிவகை செய்வர்கள ஆனால் தமிழனை எப்போது தங்களை போல் எந்நேரமும் போதை வைத்தால்தான் தங்களும் தங்கள் குடும்பமும் நலமாக இருக்க முடியும் என்று முன்னால் முதல்வரும் எல்லாம் திட்டங்களை முடக்கினாலும் இதனை ஆதரிக்கும் இந்நாள் முதல்வர் இருக்கும்வரை எல்லா தமிழனும் சாகவேண்டியதுதான். தமிழனை திரைப்படம் சாராத தமிழன் ஆளவேண்டும். நாட்டில் கல்வி கொள்கையை நெறிபடுத்த வேண்டும். அரசாங்கம் கல்வி கொடுக்க வேண்டும். மதுவை உடனே நிறுத்தவேண்டாம். கொஞ்சம் கொஞ்சமா நிறுத்தினால் போதும். இந்த மதுவினால் கல்வி, குற்றம், பொருளாதாரம் மிகவும் பின்னடைவு அடைய போகிறது .....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.