மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்ட "இன்ஸ்பயர் விருது'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்ட "இன்ஸ்பயர் விருது'

Added : ஜூலை 31, 2010 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை:பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக, "இன்ஸ்பயர் விருது' வழங்கப்பட உள்ளது.இந்த இன்ஸ்பயர் விருது குறித்து மாநில அளவில் மதுரையில் நேற்று நடந்த முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை அறிவியல் மைய இயக்குனர் அய்யம்பெருமாள் இதுபற்றி விளக்கினார். பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம், ஏன், எதற்கு என்ற விஞ்ஞான பார்வையை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் இவ்விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக ஆகஸ்ட் மாதம் முழுவதும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும். இதற்கான நடுவர் குழுவில் அந்தந்த வட்டார அறிவியலாளர்கள், தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மைய அலுவலர்கள் இடம்பெறுவர். பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் உண்டு. இருபது சதவீத மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.


ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், ஐந்து சதவீத மாணவர்களை தேர்வு செய்து சென்னையில் நடக்கும் மாநில போட்டிக்கு அழைத்துச் செல்வர்.இவ்வாறு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்படுவோருக்கு மாநில போட்டி ஆகஸ்டிலேயே நடத்தப்படும். இதில் 600 மாணவர்கள் பங்கேற்பர். 20 சதவீத பங்கேற்பாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். இதில் ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு, டில்லியில் நடக்கும் தேசிய போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். இதில் பங்கேற்க மாணவர்கள் பெயரை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.inspire.tnstc.nic.in அல்லது www.inspire.tnstc.gov.inஎன்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம். அதற்கான படிவத்தை www.inspire.indiacollegefinder.orgஎன்ற முகவரியில் பெறலாம்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜோசப் அருமை ராஜ் - sathyamangalam,இந்தியா
21-அக்-201010:57:49 IST Report Abuse
ஜோசப் அருமை ராஜ் register our school students
Rate this:
Share this comment
Cancel
பரத் ஸ்கூல் - tirunelveli,இந்தியா
20-ஆக-201011:58:37 IST Report Abuse
பரத் ஸ்கூல் BHARATH MONTESSORI MATRIC. HR. SEC. SCHOOL, ( An ISO Certified Institution ) Courtallam Five Falls By- Pass, Ilanji – 627 805. mail id. bmmhss@yahoo.co.in 04633 – 223101 & 223203 Date : 20.08.2010 To Inspire tndiacollege.finder.org Respected Sir, Greetings from Bharath! This is to inform you that the below mentioned students are selected to attend the INSPIRE-2010-’11 as per the requirement. S.No Name of the Student Class 1. A.Ruhee Afrin VI 2. Rithika Karthigesan VII 3. A.Akhil Manickam VIII 4. S.Aparajitha Lokasukumari IX 5. M.K.Radha Poornimaa X Thanking you, Educationally Yours, Mrs.M.Kanthimathi Principal B.M.M.H.S.S Ilanji
Rate this:
Share this comment
Cancel
க.சூர்யா - karur,இந்தியா
16-ஆக-201018:13:55 IST Report Abuse
க.சூர்யா வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel
க.சூரியா - karur,இந்தியா
16-ஆக-201018:09:14 IST Report Abuse
க.சூரியா 6 ஆம் வகுப்பில் படிகின்ற்றான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை