பிரதிபா பாட்டில், 2007 ஜூலை 25ம் தேதி நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையோடு பதவியேற்றார். ஐந்தாண்டு காலம் ஜனாதிபதியாக இருந்த இவர், நேற்று அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். பதவிக் காலத்தில் அடிக்கடி வெளிநாட்டு பயணம், கருணை மனுக்கள் மீது பரிசீலனை, ஓய்வுக்கு பின் பங்களா போன்ற விஷயங்களில் சர்ச்சைக்கு உள்ளாகினார்.
இதோ சில சர்ச்சைகள்:
* ஐந்தாண்டுகளில் 12 முறை, 22 நாடுகளுக்கு (4 கண்டங்கள்) சென்றார். 79 நாட்கள் வெளி நாடுகளில் தங்கி இருந்தார். இதற்காக 206 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும், இந்திய ஜனாதிபதிகளிலேயே இவர் தான் அதிகம் செலவு செய்ததாக புகார் எழுந்தது. சில பயணங்களில் ஏகப்பட்ட உறவினர்களை அழைத்து சென்றார்.
(முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பதவிக் காலத்தில் 7 முறை மட்டுமே வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்).
* 2011 மார்ச் 31ன் படி இவரது சொத்து மதிப்பு 3 கோடியே 33 லட்சத்து 71 ஆயிரத்து 668 ரூபாய்.
* பிரதிபா பாட்டில், பதவிக் காலத்தில், 39 கருணை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தார். இதில், 21 கருணை மனுக்கள் 2009 நவ., முதல் 2012 ஜூன் ஆகிய காலத்தில் எடுக்கப்பட்டவை. இதுவரை பதவி வகித்த ஜனாதிபதிகளில் இவர் தான் அதிக கருணை மனுக்களை பரிசீலித்தார். 2001ல் பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதி அப்சல் குரு உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் நிலுவையிலேயே உள்ளன. ஒரு கருணை மனுதாரர் இறந்து 4 ஆண்டுகள் கழித்து, மனு மீது முடிவு எடுத்தார் பிரதிபா. மனுதாரரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து, நகைப்புக்கு உள்ளானார்.
* ஓய்வு பெற்ற பின், புனேவில் கட்டப்பட்டு வரும் பங்களாவுக்கு பிரதிபா குடியெற உள்ளார். இந்த இடம், இந்திய ராணுவத்துக்கு சொந்தமானது என்றும், விதிமுறையை விட, ஆறு மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டது உள்ளது எனவும் குற்றம் சாட்டப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
The country has four pillars - Political, Judicial,utive and media and now all the four are engulfed in corruption. Gone are the days, PM like Morarji, LB Shastri, Persons like S/Shri K Kamaraj, Kakkan, Civil Service officers were regard in Society, Justic though it was delayed still had a faith but now all is not well and the prime importance by all the four are the more you get benefit the less will be accoun or pass on the buck on general public who are accustomed with slavery and bear the brunt of heavy taxes.
ஐயா வணக்கம். திரு:அப்துல்கலாம் தவிர வேறு யாரும் அதற்கு தகுதி இல்லை, இன்று இருக்கும் அரசியல் பெருச்சாளிகளில் யார் தான் மக்கள் நலன்ல விருப்பம் உள்ளவர்கள். இந்த பாட்டிமா இப்படின்ன பிரணாப் இவரு என்னத்த கிழிக்க போறாரு. பாக்கத்தான போறோம். பதவி ஏற்கும் முன்பே கார் விலை ஆறு கோடி. ஏன் அவுங்க உபயோகித்ததை உபயோகிக்க மாட்டாங்களா

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.