2G case: A.raja constantly misled PM on the issue, says CBI | பிரதமருக்கு தொடர்ந்து தவறான தகவல் தெரிவித்தார் ராஜா: சி.பி.ஐ.,| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமருக்கு தொடர்ந்து தவறான தகவல் தெரிவித்தார் ராஜா: சி.பி.ஐ.,

Updated : ஜூலை 26, 2012 | Added : ஜூலை 24, 2012 | கருத்துகள் (94)
Advertisement
 பிரதமருக்கு தொடர்ந்து தவறான தகவல் தெரிவித்தார் ராஜா: சி.பி.ஐ.,,2G case: A.raja constantly misled PM on the issue, says CBI

புதுடில்லி:"2ஜி' லைசென்ஸ் விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, மத்திய அமைச்சராக இருந்த ராஜா, தொடர்ந்து தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்த விவகாரத்தில், உள்துறை அமைச்சர் சிதம்பரம், எந்த விதமான குற்றமும் புரிந்ததாக, நாங்கள் கண்டறியவில்லை' என, பார்லிமென்ட் குழு முன், சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரித்து வருகிறது. இந்தக் குழுவின் முன், நேற்று ஆஜரான, சி.பி.ஐ., தலைவர் ஏ.பி.சிங் தலைமையிலான குழுவினர் கூறியதாவது:

தொடர்பில்லை:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, இந்த விவகாரத்தில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, தொடர்ந்து தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார் என்பது தெரிகிறது. அதே நேரத்தில், "2ஜி' லைசென்ஸ் விவகாரத்தில், அப்போதைய நிதி அமைச்சரான, தற்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம், எந்த விதமான குற்றமும் புரிந்ததாக, நாங்கள் கண்டறியவில்லை. ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்திலும், அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

தொலைத் தொடர்பு நிறுவனங்களில், அன்னியப் பங்கு முதலீட்டை அனுமதித்த விஷயத்தில், "2ஜி' விவகாரத்தில் தொடர்புடைய கம்பெனிகள் எதுவும், பணத்தை அபகரித்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அதே நேரத்தில், ஒரே கட்டமாக கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு, நிறுவனங்கள் பல எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அந்தத் திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தால், அதை எதிர்க்கப் போவதாகவும் கூறியுள்ளன.இவ்வாறு, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தள்ளிவைப்பு: இதற்கிடையில், தொலைத் தொடர்புத் துறை தொடர்பான, அமைச்சர் சிதம்பரம் தலைமையிலான, அமைச்சர்கள் அடங்கிய அதிகாரக் குழுவின் கூட்டம், நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், தற்போதுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை, ஒரே கட்டமாக நிர்ணயிப்பது தொடர்பாக முடிவெடுப்பது, தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, ஜனாதிபதி மூலமாக கருத்துக் கேட்கும் மத்திய அரசின் மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த விவகாரத்தில் முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lightning View - Fahaheel,குவைத்
26-ஜூலை-201210:54:56 IST Report Abuse
Lightning View பழி மற்றும் பலி ஆடாக ஆக்கப்பட்டிருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
25-ஜூலை-201216:18:19 IST Report Abuse
Nallavan Nallavan பிரதமருக்கு இவர் எழுதிய கடிதம் ஒன்றில் மரியாதைக் குறைவான வாசகங்கள் (அவை என்னென்ன என்பது ரகசியமாக வைக்கப்பட்டது), காணப்பட்டதாகத் தகவல் உண்டு """"தவறு நடந்துள்ளதா"" என்று ராசாவிடம் கேட்டதற்கு """"எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருக்கு""""-ன்னு ராசாவே சொல்லிட்டார் என்றார் பிரதமர் இப்படி ஒரு சொப்ளாங்கிக்கு எவன் சரியான தகவல் கொடுப்பான்? எவன் மதிப்பான்? சிங்குக்கு ஊட்டுல என்ன மரியாதையோ
Rate this:
Share this comment
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
25-ஜூலை-201215:54:49 IST Report Abuse
V Gopalan First of all, name of CBI can be recheristened as Congress Bureau of Investigation. It is known fact that 2G issue is going to follow the footprint of Bofors, in such case, why at all public money is being spent for the post mortem case. Already Rs.1.76 lakh cr swallowed again adding fuel for this loss is nothing but making public fools as Politicians need electorates only once in five years, thereafter they will go on play foul game electorates would be mute spectators. So long as, congress remain in the country, it will be a sin for the common man to bear the brunt of taxes etc. It is also a pity that there is no constructive opposition party became handy for this corrupted congress. There are two questions before Dinamalar, when CBI says Raja gave wrong information to Mounaguruswamy and what for Mounaguruswamy praised Raja and pat him, secondly what happened to Finance Ministry. without their approval telecom ministry cannot act and besides the issue of cable drawn from boat house to TV channel what happened and how this minister is let off. in the First place, PM should be enquired into, second the then FM and KD brothers. Any way, nothing is going to happen except to drain public money on dead body postmortem. 2014 is not fast approaching to save public money or otherwise a Tsunami should engulf Akbar road shop to save country from heavy corruption base.
Rate this:
Share this comment
Cancel
VEERU - cherai,இந்தியா
25-ஜூலை-201215:47:17 IST Report Abuse
VEERU ப்ளீஸ் சிபிஐ கலைக்க வேண்டும். ஜாமீனுக்கு ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டு இப்போ கமெண்ட்ஸ்
Rate this:
Share this comment
Cancel
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூலை-201215:41:33 IST Report Abuse
Venkat யங்க பா இருக்க ராசா.. காலைல ஜாக்கிங் போற பழக்கம் இருக்கா..
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
25-ஜூலை-201214:48:56 IST Report Abuse
villupuram jeevithan ரொம்ப அப்பாவியாக இருக்கலாமா நம் பிரதமர்? சொல்லுவதை எல்லாம் நம்புகிறாரே?
Rate this:
Share this comment
Cancel
NS நாயுடு - சீர் கெட்ட சென்னை,இந்தியா
25-ஜூலை-201214:00:39 IST Report Abuse
NS நாயுடு கூட்டு களவானிங்க... காட்டிக்கொடுக்க மாட்டானுங்க..
Rate this:
Share this comment
Cancel
Sankaran Ganapathy - Kanchipuram,இந்தியா
25-ஜூலை-201213:34:19 IST Report Abuse
Sankaran Ganapathy ஆடும் வரை ஆடுங்க. இன்னும் ரெண்டே வர்ஷம். உங்களுக்கு ஆப்பு வைக்க மோடி வருவார்.
Rate this:
Share this comment
Cancel
kap - singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-201213:32:32 IST Report Abuse
kap "மன்மோகன் சிங்கிற்கு, மத்திய அமைச்சராக இருந்த ராஜா, தொடர்ந்து தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார் " நல்ல கண்டுபிடிப்பு வாழ்க சிபிஐ, வாழ்க அவர்களது பணி.
Rate this:
Share this comment
Cancel
azhageswaran - coimbatore,இந்தியா
25-ஜூலை-201213:23:59 IST Report Abuse
azhageswaran இவர்களை பார்க்கும் போது நானே அந்நியனாக மாற ஆசை படுகிறேன் யாரவது என் குடும்பத்தை பார்த்க்குகோங்க இப்படிக்கு உணர்ச்சிமிகு தமிழன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை