PM asks Assam CM to bring law and order under control | அசாம் முதல்வர் தருண் கோகாய்க்கு பிரதமர் கண்டிப்பு: தொடர்கிறது கலவரம்| Dinamalar

அசாம் முதல்வர் தருண் கோகாய்க்கு பிரதமர் கண்டிப்பு: தொடர்கிறது கலவரம்

Updated : ஜூலை 25, 2012 | Added : ஜூலை 24, 2012 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கட்டுப்படுத்துங்க: அசாம் முதல்வர் தருண் கோகாய்க்கு பிரதமர் கண்டிப்பு,PM asks Assam CM to bring law and order under control

கவுகாத்தி:அசாமில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம், நேற்றும் தொடர்ந்தது. ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மீது, கலவர கும்பல், கல் வீசி தாக்குதலை நடத்தியதால், அங்கு ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க, போதிய நடவடிக்கை எடுக்கும்படி, முதல்வர் தருண் கோகாயிடம், பிரதமர் மன்மோகன் சிங் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

அசாம், கோக்ராஜ்கர் மாவட்டத்தில், சிறுபான்மையினருக்கும், போடோ பழங்குடியினருக்கும் இடையே, சமீபத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில், சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த இரு மாணவர்கள், துப்பாக்கியால் சுடப்பட்டனர். பழிவாங்கும் நடவடிக்கையாக, போடோ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களால், கோக்ராஜ்கர் மாவட்டத்தில், பெரும் கலவரம் வெடித்தது. இதில், 32 பேர் உயிரிழந்தனர். கலவரக் கும்பல் மற்றும் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து, 30 ஆயிரம் பேர், தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். கலவரம், மேலும் பரவாமல் இருப்பதற்காக, கலவரக்காரர்களை கண்டதும் சுட, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரப் பகுதிகளில் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரயில் மீது தாக்குதல்:கலவரப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவும், பேச்சு நடத்துவதற்காகவும், அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பா.ஜ., சார்பில், உண்மை கண்டறியும் குழுவும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோக்ராஜ்கர், சிராங், துப்ரி ஆகிய மாவட்டங்களில், நேற்றும் கலவரம் ஏற்பட்டது. பல இடங்களில் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. கவுகாத்தி நோக்கி சென்ற ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மீது, கோஸ்சைகோன் என்ற இடத்தில், சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அந்த ரயிலின் நான்கு பெட்டிகள் சேதம் அடைந்தன.இதையடுத்து, அந்த ரயில், பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. 31 ரயில்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கூடுதல் போலீசார், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டாலும், கலவரப் பகுதிகளில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அத்துடன் கலவரப் பகுதிகளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேற்றும் நான்கு பேர் பலியாகினர். இதனால், கலவர பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

பிரதமர் உத்தரவு:இதற்கிடையே, அசாம் முதல்வர் தருண் கோகாயை, நேற்று தொடர்பு கொண்ட, பிரதமர் மன்மோகன் சிங், கலவரத்தை கட்டுப்படுத்தி, அமைதியான சூழலை ஏற்படுத்தும்படியும், சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க, போதிய நடவடிக்கை எடுக்கும்படியும், கண்டிப்புடன் கூறியுள்ளார். டில்லியில் உள்ள பிரதமர் அலுவலக வட்டாரங்கள் இந்தத் தகவலை தெரிவித்தன.

முகுல்ராய்ரயில்வே அமைச்சர்: அசாமில் வன்முறை பாதித்த பகுதிகளில், ரயில்கள் சுமுகமாக செல்லவும், பயணிகள் அச்சமின்றி பயணிக்கவும், பாதுகாப்புப் படையினரை கூடுதலாக பணியில் ஈடுபடுத்த வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமும், மாநில முதல்வர் தருண் கோகாயும் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Packyaraj Nadar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூலை-201223:50:32 IST Report Abuse
Packyaraj Nadar கலவரத்தில் ஈடுபடுவோர் சட்டவிரோதமாக அனுமதியின்றி பங்களாதேஷிலிருந்து வந்தவர்கள். இவர்களுக்கு திருட்டு ரேஷன் கார்ட், வாக்காளர் அட்டை , பாஸ்போர்ட் எல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் வாங்கிக் கொடுத்துள்ளனர். இவர்களை உடனே வெளியேறாவிட்டால் அசாமும் நம்மைவிட்டுப் பறிபோய்விடும்.
Rate this:
Share this comment
Cancel
vandu - bangalore,இந்தியா
25-ஜூலை-201211:08:02 IST Report Abuse
vandu இதுவே குஜராத் மாநிலத்தில் நடந்து இருந்தால் , மரண வியாபாரி , காட்டுமிராண்டி என்று மீடியாக்கள் கூவி கூவி விற்று இருப்பார்கள் இந்த செய்தியை....கருமம்...
Rate this:
Share this comment
Cancel
arun - madras,இந்தியா
25-ஜூலை-201210:38:29 IST Report Abuse
arun அப்போ இலங்கைளிருந்து அகதிகளாக வந்தவர்கள் எல்லாம் விடுதலை புலிகள் என்று ஒப்புக்கொண்டீர்கள், அப்போ இலங்கை அகதிகளும் தீவிரவாதிகள் என்பதையும் ஒப்புக்கொண்டதற்கு நன்றி.(தமிழ் நாட்டில் மட்டும் என்ன எல்லோரும் நல்ல வேளையில் சேர்ந்து வசதியகவா உள்ளார்கள்?) எதற்க்கெடுத்தாலும் ஏன் சிறுபான்மை இனத்தவரையே தீவிரவாதிகள் என்று சொல்கிண்டீர்கள் ஏன் காவி தீவிரவாதிகள் இல்லையா ? இன்று இந்த காவி தீவிரவாதிகளால் தானே இவ்வளவு பிரச்சனைகள் நமது நாட்டில். முதலில் இந்த காவி தீவிரவாதிகளை சுட்டுகொன்றல் தான் இந்த நாடு நல்ல இருக்கும். (ஒரு வேலை சங்கமா ஜனாதிபதி தேர்தலில் தோற்று விட்டதால் இந்த காவிகள் இது போன்று செய்கிண்டார்களோ?).
Rate this:
Share this comment
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
25-ஜூலை-201211:37:12 IST Report Abuse
Ajaykumarகாவிகளுக்கு ஒரே நாடு இந்திய, நி போ வெளியே...
Rate this:
Share this comment
25-ஜூலை-201211:46:53 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் அப்பா. என்ன ஒரு கருத்து??. இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவுகள் சொந்த மண்ணிலேயே உரிமையற்றவர்களாக , நாடற்றவர்களாக , வன்முறைக் குள்ளாக்கப்படதால் இங்கு தஞ்சம் தேடி வந்தவர்கள். அவர்கள் இந்தியாவுக்கெதிரான வன்முறையில் இறங்க திட்டமிட்டு வரவில்லை. இந்திய வளங்களை, வேலை வாய்ப்புகளை சுரண்டவரவில்லை. அவர்களுக்கு தற்காலிக நிவாரணம் தந்தது ஐ நா அகதிகள் மறுவாழ்வுத் திட்டத்தின்படி.அவர்கள் தங்களை இந்தியர்கள் எனப் பொய் சொல்லி இங்கு இருக்கவில்லை. ஆனால் பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்களோ ,அங்கு முழு உரிமையுடன் மெஜாரிட்டிகளாக வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள். வங்கதேச அரசால் விரட்டப்பட்டவர்களல்ல.அப்படியே வந்திருந்தாலும் அவங்க இனத்தவரான மேற்கு வங்கத்ததிற்குத்தானே போயிருக்கவேண்டும், வங்காள முஸ்லிம்கள் தேசப் பிரிவினையின்போது (நம்மை நம்பாமல்) பாகிஸ்தானில் விருப்பப்பட்டு இணைந்தவர்கள். இவர்களுக்கு தனி நாடாக வங்கதேசத்தை உருவாக்கிக்கொடுததே இந்தியா அதுபோதாதேன்று இப்போது ஒரு கோடி பேர் இங்கு சட்டவிரோதமாக நுழைந்து (காங்கிரஸ் உதவியுடன்தான்) , inthiyar எனப் பொய் சொல்லி ரேஷன் கரடு வாங்கி , இங்குள்ளவர்களின் நிலம் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பறித்து விட்டு, போதாததற்கு முஜாஹிதீன் போன்ற இந்திய எதிர்ப்பு பயங்கரவாதத்திலும் ஈடுபடுவது காங்கிரஸ் அரசே ஒப்புக்கொண்ட ஒன்று. இது எப்படிப்பட்ட கைம்மாறு? அடிமைத்தளையிலிருந்து காப்பாற்றி பாகிஸ்தானியரிடமிருந்து சுதந்திரம் வாங்கித் தந்ததற்கு கைம்மாறா? இவர்களை அச்சாமியரே விரட்டியடிப்பதுதான் நடக்கக் கூடிய நியாயம். அரசு சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றாததால் அசாமியர்களே அவர்களை விரட்டியடிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.இன்னும் கூட காங்கிரஸ் அரசு ஊடுருவல் வங்கதேசிகளையே ஆதரிக்கிறது.ஊடுருவல் காரர்கள் ஜாலியா வெளியில் உள்ளூர் இந்தியர்கள் அகதி முகாம்களில் அதாவது பச்சை தேசத்துரோகம். கலவரம் பரவும் ஆபத்து மிக அதிகம் இனிமேலும் யாரும் எல்லை தாண்டுவதில்லை எனும் பொய்யான அறிக்கை விடுவதற்கு பதில் பிரதமர் ஷேக் ஹசினா ,எல்லைப் புறத்தில் உறுதியான வேலியும், பாதுகாப்பும் உருவாக ஒத்துழைக்கவேண்டும்.(நன்றி மறத்தல் நன்றன்று). இப்படிப்பட்ட முஜாஹிதீன்களை ஊடுருவ அசாம் காங்கிரஸ் அரசே இங்கு மறைமுகமாக ஒத்துழைப்பது நிதர்சனம்.மக்களை ஆயுதம் எடுக்க,வந்தேறிகளை விரட்ட கலவரம் ஏற்படுத்த காங்கிரசின் துரோக செயல்களே காரணம் கற்பனையாக காவித் தீவீரவாதமேன்றேல்லாம் எழுத வேண்டாம். ஊடுருவல்காரர்களை ஆதரிப்பது தேசத்துரோகம இல்லையா?...
Rate this:
Share this comment
Cancel
rejish babu FR - trivandrum,இந்தியா
25-ஜூலை-201209:01:29 IST Report Abuse
rejish babu FR அந்த வீடு இழந்த பெண்ணின் முகத்தில் உள்ள சோகத்தை எந்த ஒரு மீடியா வும் கண்டுகொள்ளவில்லை போல... அது எப்படி முடியும் அதுதான் அவர் நெற்றியில் குங்குமம் உள்ளதே...இதுவே பர்தா எனில் இந்திய டுடே இன் அட்டைப்படத்தை அலங்கரிதிருப்பர்....அரசியல் வியாதிகள் தருண் கோயை மரண வியாபாரி என்பர்... தமிழன் இளிச்சவாயன் என்பதால் காங்கிரஸ் அரசு தமிழனை கொல்ல ஆயுதம் கொடுத்தான்....ஆனால் பரதேசி பங்களதேசிகளை ஓட்டுக்காக அரவணைக்கிறான்...
Rate this:
Share this comment
Cancel
25-ஜூலை-201207:07:03 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் அரசு சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றாததால் அசாமியர்களே அவர்களை விரட்டியடிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.இன்னும் கூட காங்கிரஸ் அரசு வங்கதேசிகலையே ஆதரிக்கிறது. அதாவது பச்சை தேசத்துரோகம். கலவரம் பரவும் ஆபத்து மிக அதிகம் இனிமேலும் யாரும் எல்லை தாண்டுவதில்லை எனும் பொய்யான அறிக்கை விடுவதற்கு பதில் பிரதமர் ஷேக் ஹசினா ,எல்லைப் புறத்தில் உறுதியான வேலியும், பாதுகாப்பும் உருவாக ஒத்துழைக்கவேண்டும்.(நன்றி மறத்தல் நன்றன்று). இப்படிப்பட்ட முஜாஹிடீங்காலி ஊடுருவ அசாம் காங்கிரஸ் அரசே இங்கு மறைமுகமாக ஒத்துழைப்பது நிதர்சனம்.மக்களை ஆயுதம் எடுக்க,வந்தேறிகளை விரட்ட கலவரம் ஏற்படுத்த காங்கிரசின் துரோக செயல்களே காரணம்
Rate this:
Share this comment
Cancel
25-ஜூலை-201206:59:10 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் இதுதான் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது. சுயநல அரசியல் லாபத்துக்காக , இலவச வாக்கு வங்கியைப் பெற வங்கதேசத்திலிருந்து ஒரு கோடி அகதிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது காங்கிரஸ். இவர்களுக்கு வேலை வாய்ப்பளித்து தங்க இடம் கொடுத்தது அசாம் முஸ்லிம் கட்சிகள். அஸ்ஸாமில் ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்ட்டம் இருக்கும்போது இத்தகைய துரோகம் நடந்தது. அப்போதைய பிரதமர் இந்திராவிடம் இதைப் பற்றி ஆதாரத்துடன் புகார் தெரிவித்தவர்களை இந்து வெறியர்கள் என விராட்டப்பட்டனர். ராஜிவும் இந்த வந்தேறிகள் சார்பாகவே செயல்பட்டார். சுப்ரீம் கோர்ட் இவர்களை வெளியேற்றி , எல்லையில் முள்வேலி அமைக்க உத்தரவிட்டதையும் காங்கிரஸ் சரியாக செயல்படுத்தவில்லை. அகதிகளோடு முஜாஹிதீன் போன்ற பயங்கரவாதிகளும் ஊடுருவி இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகிவிட்டனர். இந்த நிலையிலும் வந்தேறிகள் நடத்தும் சட்டவிரோதக் கட்சியுடன் கைகோர்த்து அக்கிரமங்களை அஸ்ஸாம் காங்கிரஸ் அரசு தொடர்கிறது. இப்படி வந்த வந்தேறிகளுக்கு பாஸ்போர்ட், ரேஷன் கார்டு எல்லாம் கூட கொடுத்துதவியுள்ளது.சில வந்தேறிகள் MLA வாகக்கூட உதவி செய்திருக்கிறது .காங்கிரசுக்கு வாக்களிப்பவன் தேசத்துரோகிகளை வளர்ப்பவனே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை