புதுடில்லி: 29ம் தேதி, தானும் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாக சமூக ஆர்வலரும் மற்றும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
ஊழல் கறைபடிந்த அமைச்சர்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழுக்கள், ஊழல் எம்.பி.க்களுக்கு அதிவிரைவு கோர்ட் மூலம் தண்டனை, வலுவான லோக்பால் மசோதா உள்ளிட்டவைகளை வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள போராட்டம் டில்லி ஜந்தர் மந்தரில் துவங்கியது.
போராட்டம் துவக்கம் : ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்க இந்த இரண்டாம் கட்ட போராட்டம் உதவும், நாட்டைக் காப்போம் என்று கூறியபடியே, அன்னா குழு உறுப்பினர் அர்விந்த் கெஜ்ரிவால் போராட்டத்தை துவக்கினார்.
ஹசாரே பேச்சு : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, வலுவான லோக்பால் மசோதாவை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும், ஊழல் கறைபடிந்த அமைச்சர்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழுக்கள், ஊழல் எம்.பி.க்களுக்கு அதிவிரைவு கோர்ட் மூலம் தண்டனை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டம் மாபெரும் வெற்றி பெறும் என்றும், இப்போராட்டத்தில் 29ம் தேதி முதல் தான் பங்குபெற உள்ளதாக அவர் கூறினார்.
போராட்டத்தால் பரபரப்பு : அன்னா குழு, ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், அதற்கு மிக அருகில் இந்திய தேசிய மாணவர் இயக்கம் , இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பதில்:அன்னா ஹசாரேயின் இந்த அறிவிப்பை அடுத்து, கடந்த ஒரு ஆண்டில், ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த, அனுமதி அளிப்பதற்கு காலக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் விருப்ப அதிகாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக புகார் கொடுப்பவர்களை பாதுகாக்க, லோக்சபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது' உள்ளிட்ட விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு நல்ல நோக்கத்திற்காக தப்பு செய்பவர்களை தண்டிக்க வகை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க ஆளும் கட்சியை நிர்பந்திக்கும் விதமாக அற வழியில் அவர்களது சக்திக்கு ஏற்றவாறு அமைதி போராட்டம் செய்பவர்களை கேலி செய்தும், அவதூறு பரப்பியும், கொச்சை படுத்தியும் கருத்து சொல்கிறவர்களை நினைத்தால், இந்த அரசியல் இவர்களை எந்த அளவுக்கு மூளை சலவை செய்துள்ளது என்பது புரியும். அரசியல்வாதிகளை கூட திருத்தி விடலாம் ஆனால் இந்த அடி வருடிகளை மாற்றுவது தான் மிகவும் சிரமம்.
சாதாரணமான அன்னா ஹசாரே தன்னுடைய கிராமத்தை இந்தியாவிலேயே ஒரு முன் மாதிரி கிராமமாக மாற்றி உள்ளார்.ஆயிரக்கணக்கான கோடிகள் வைத்திருக்கும் அரசியல்வா(வியா)திகள் யாரேனும் செய்வார்களா.ஊரை கொள்ளையடிக்கவே நேரம் பத்திலை, யாரது ஒருவர் இந்தியாவில் குரல் கொடுத்தால் அவர்களை கிண்டல் செய்யும் டீ கடை கும்பல் தான் அதிகம்...கதிரா
கதர் சட்டை போட்டவர் எல்லாம் காந்தி அனைத்து சாமானியரும் ஊழலை எதிர்க்க நினைக்கிறார்கள், சிலர் அதை அரசியல் ஆதாயம் ஆக்குகிறார்கள். ஹசாரே or ராம்தேவ் குழுவினர் உருப்படியாக சாதித்தது ஒன்றும் இல்லை.
சீமான் சொல்லுவது போல நான் மட்டும் தான் இந்தியன் இந்தியன் என்று சொல்லிகிறேன், சப்பாத்தி திங்கிறவன் எல்லாம் மதராசி or south-Indians முத்திரை குத்தி ஒதுக்கி வச்சுரனுங்க, ஆதாயம் வேணும் என்றல் மட்டும் நாங்கள் வேண்டும் என்ன கொடுமை சார் இது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.