சென்னை: "கூட்டணிக் கட்சிகள் ஏற்படுத்தும் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசுக்கு, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த நேரம் இல்லை' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சாதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் 47.5 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில், 40 சதவீதம் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெற்பயிர் ஜூன், ஜூலையில் 3.20 லட்சம் ஏக்கரில், சம்பா பயிர் ஆகஸ்ட், செப்டம்பரில் 11.5 லட்சம் ஏக்கரில், தாளடிப் பயிர், செப்டம்பர், அக்டோபரில் மூன்று லட்சம் ஏக்கரிலும் பயிரிடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அடிப்படையில் தான் குறுவை சாகுபடியின் பரப்பும் அமையும்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு:
மேட்டூர் அணையில் நீர் வரும் போது தான் குறுவை பயிர் காலம் முழுவதும் நீர் வழங்க முடியும். இதை கருத்தில் கொண்டு தான், காவிரி நடுவர் மன்றம், தனது 1991ம் ஆண்டு இடைக்கால உத்தரவில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை 137 டி.எம்.சி., அடி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்றும், 2007ம் ஆண்டு இறுதி உத்தரவில், காவிரி படுகையில் கிடைக்கும் 740 டி.எம்.சி., தண்ணீரில்,429 டி.எம்.சி., அடி தமிழகத்திற்கு உரியதென்றும், இதில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 134 டி.எம்.சி., அடி தண்ணீரை, கர்நாடகம், தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவின் படி, கர்நாடகம் தன் அணைகளில் உள்ள தண்ணீரை, கோடைக்கால பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது. இவ்வாறு நீரைப் பயன்படுத்துவதால், தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்காததை கருத்தில் கொண்டு, கடந்த மார்ச் மாதம், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு இன்னும் நிலுவையில் உள்ளது.
கொள்கை முடக்கத்தில் மத்திய அரசு:
காவிரி ஆணைய கூட்டத்தை கூட்டும்படி, கடந்த மே மாதம் பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தேன்; இதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூட்டணிக் கட்சிகள் ஏற்படுத்தும் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசுக்கு, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த நேரம் இல்லை. எனவேதான் எவ்வித கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாமல், கொள்கை முடக்கத்தில் சிக்கியுள்ள மத்திய அரசுக்கு, தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையான காவிரி நதிநீர் பிரச்னையை பார்க்க இயலவில்லை.
12 மணிநேரம் மின்சாரம்:
இந்த நேரத்தில், ஜூன் மாதத்தில் இருந்து கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொய்த்ததால், இடர்பாடு நேரங்களில், தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய அளவுக்கு கூட, கர்நாடகம் நீரை விடுவிக்காததால், குறுவை சாகுபடியை ஓரளவுக்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைவாக இருந்ததால், காவிரி டெல்டாவில் உள்ள 80 ஆயிரம் பம்பு செட்டுகளுக்கு, கடந்த மாதம் 17ம் தேதி முதல் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் விவசாய பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்காக 125 கோடி ரூபாய் மின்சாரம் வழங்கவும் ஒதுக்கப்பட்டது.
37 ஆயிரம் ஏக்கர் கூடுதல்:
இதனால், ஜூலை 19ம் தேதி வரை, 87 ஆயிரம் ஏக்கர் பரப்பிலும், அடுத்த பத்து நாட்களில் கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் என 1.37 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் பம்பு செட் மூலம், ஒரு லட்சம் ஏக்கரில் நடந்த குறுவை சாகுபடி, 12 மணி நேர மின்சாரத்தால், கூடுதலாக 37 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு வழி ஏற்பட்டுள்ளது. வேளாண்மை துறையும், விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு, தேவையான இடுபொருள், தொழில்நுட்பம் மற்றும் தகவல்களை உடனுக்குடன் வழங்கி வருகிறது. மேலும், நெல் விதைக்கும் கருவி இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. குறுகிய கால பயறு வகைகள் பயிரிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தண்ணீர் அவசியம்:
தண்ணீர் பற்றாக்குறை உள்ள இக்காலகட்டத்தில் இதுவரை 3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாத இறுதியில் 1.52 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படும். இந்தாண்டு குறியீடான 6.5 லட்சம் ஏக்கரில், இதுவரை 4.52 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடுவிக்கப்பட வேண்டியது அவசியம்.
பங்கு கிடைக்க நடவடிக்கை:
எனவே, இடர்பாடு காலங்களில், விகிதாசார அடிப்படையில், கர்நாடகம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் உடனடியாக கூட்டப்பட வேண்டும்; இடர்பாடு காலங்களில் நீர்ப் பங்கீடு கணக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் கடந்த 21ம் தேதி செய்யப்பட்டுள்ளது. எனவே, காவிரி நீரில் நமக்குரிய பங்கினை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முனைப்புடன் அரசு எடுக்கும்; வேளாண் உற்பத்தியை பெருக்க அனைத்து உத்திகளையும் கடைப்பிடிக்கும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
we have to blame the central govt.and also the state govt. for this why are they doing like this No the centre will have to wait for the DMK to say ok and the state govt.will have to wait for BJP to say ok till then let us wait i pity the plight of the people of India let us see if our new President dose some thing for this Tamilnadu Cm should also write the first letter to the newly elected President about this issue and so the the cauvery delta people should s telegrams to the Newly Elected President on the first day of office
பேருந்து,மின், பத்திர பதிவு கட்டணங்கள் இந்த ஆட்சியில்தான் பல மடங்கு உயர்த்த பட்டுள்ளது. அதிமுக, தி மு க ஆகிய இரண்டு கட்சிகளுமே இலவசங்களை வழங்குவது தவறு. இலவசங்கள் மக்களை சீரழிக்கிறது .இது நாட்டிற்கு நல்லது அல்ல. இன்னொரு முக்கியமான் விஷயம் மத்திய அரசின் ஊரக வேலை வாய்ப்பு திட்டமும் தேவை இல்லாத ஒன்று .இதனால் விவசாயம் பதிப்புக்கு உள்ளாகிறது.இதில் வேலை செய்பவர்கள் சரியாக வேலை செய்வது இல்லை.
""""ஏழைங்க கஷ்டம் அறிஞ்சவ நான்""""-ன்னு ஒரே போடாப் போட்டீங்க """"அதனால ஒரு ரூபாய்தான் சம்பளம் வாங்கப்போறேன்""""-ன்னிட்டு டான்சி நிலத்தை லவட்டிட்டு, ""திரும்பக் கொடுத்துடுறேன்,,,, உட்டுடுங்க"" என்று பல்டி அடிச்சு..... மறக்க முடியுமா அதெல்லாம்???? இப்ப கூட ஒரு ஏழை பதினேழு வருஷமா சொத்துக்குவிப்பு வழக்கில் இழுத்தடிக்க முடியும்-ன்னு நிரூபிச்சு சனநாயகத்தோட பெருமையைக் காப்பாத்திக்கிட்டே இருக்கீங்க உங்களைப்போல வருமா????
நண்பர்களே , நாம் ஏன் ஒரு கட்சி தொடங்க கூடாது? மக்கள் கட்சி. ஊழல் இல்லாத மக்களுக்கான ஒரு கட்சி , இளைஞர் கூட்டம் மட்டும் உள்ள கட்சி, போராடினால் நாம் வெல்லலாம், இந்த நாடு முனேற நாம் பேசினால் போதாது, எழுதினால் போதாது, போராட வேண்டும், ஆயுதம் கொண்டு அல்ல , அறிவை கொண்டு. சத்தியமாய் சொல்கிறேன், என்னால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தமிழ் நாட்டை வளமாக மாற்ற முடியும் .
நானும் ரெடி தான், உண்மையாக உழைக்க, இருப்பதையும் இழக்க, என் வருங்கால இந்தியன் மானத்தோடு வாழ. ஒரு வருத்தம். உங்களை போல் நல்லவர்கள் எல்லாம் வேறு நாட்டில் பொய் இருந்து கொண்டால் எப்படி வாருங்கள் சபையை கூடுங்கள் , முதலாவது ஆளாய் வர நான் காத்திருக்கிறேன் . படித்தவரெல்லாம் வெளிநாடு போனதால் கூட நாடு இப்படி ஆகி இருக்க கூடும் . வட்டத்துக்கு ஒருவர் தேர்ந்து எடுத்து நிறுத்துங்கள் , நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதால் தானே நாடுவிட்டு நாடு தாண்டி போனது வாருங்கள் தாயகம். நம் நாடு நலமாக உங்கள் நல்மனதுடன் உழைக்க முற்பட்டால் வாலிபர்கள் பட்டாளம் நிச்சயம் உதவிகரம் நீட்டும் . உங்களுடய திட்டத்தினை தெளிவு படுத்துங்கள் . என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ?...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.