Rs. 34 crore allotted for fire safety materials | தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.34 கோடியில் உடைகள்| Dinamalar

தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.34 கோடியில் உடைகள்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.34 கோடியில் உடைகள்

சென்னை: தீயணைப்புத் துறைக்கு, புதிய வாகனங்கள், வீரர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வாங்க, 33.97 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டார்.


இதுகுறித்து, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளை, தீயணைப்புத் துறையினர் திறம்பட மேற்கொள்ளும் வகையில், சென்னை நகரின் பயன்பாட்டிற்காக, 54 மீட்டர் உயர, வான் நோக்கி உயரும் நீட்டிப்பு ஏணி கொண்ட வாகனம் ஒன்று, 5.97 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்படும். இது, சென்னை அசோக்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு வழங்கப்படும். தீ விபத்து சமயங்களில் நிலைமையை கையாளும் வீரர்களுக்கு, கையுறைகளுடன் கூடிய, மூன்றடுக்கு கொண்ட தீ பாதுகாப்பு உடைகள், தீத்தடுப்பு மூடு காலணிகள், தீ பாதிக்காத தலைக்கவசம் மற்றும் சுவாசத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்களுடன் கூடிய மூச்சுக் கருவிகளை உள்ளடக்கிய தற்காப்பு உடைகள், 28 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும். இவை, மாநிலத்தில் உள்ள, 302 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு, நிலையத்திற்கு ஆறு உடைகள் என்ற வீதத்தில், மொத்தம் 1,812 உடைகள்; ஒகேனக்கல் மற்றும் கோத்தகிரியில் இயங்கி வரும் மீட்புப் பணி நிலையங்களுக்கு, நிலையம் ஒன்றிற்கு நான்கு என்ற வகையில், எட்டு உடைகள்; கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் நிலைய அலுவலர்களுக்கு 160 உடைகள் என, மொத்தம் 1,980 நபர்களுக்கு இவை வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Komarapalayam.,இந்தியா
01-ஆக-201214:12:01 IST Report Abuse
raja மிக்க நன்றி..... மொத்த தொகையில் குறைந்தபட்சம் 50௦% ஆவது சரியாக செலவழிக்கப்பட்டால் நல்லது...
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
01-ஆக-201205:07:25 IST Report Abuse
Samy Chinnathambi மிகவும் நல்ல விழயம்தான். நல்லது. அப்படியே இந்த இலவசம் இலவசம்னு வீணடிக்கிற ஆயிரக்கணக்கான கோடிகளை வைச்சு எல்லா ஊருலயும் கழிப்பிடங்கள் கட்டுறதுக்கு செலவழிசீங்கன்னா புண்ணியமா போகும். ஏன்ன நீங்க எந்த நகரத்துக்கு பிரயாணம் பண்ணினாலும் மெயின் பேருந்து நிலையத்தை தவிர மற்ற இடங்களில் இறங்கினால் அவன் தெருவிலயும் நோட்டம் விட்டுட்டு எந்த தெருவிலயும் கழிப்பறை இல்லாததால நாய் மாதிரி அடிச்சுட்டு போயிடறான். அதே மாதிரி எல்லா கடைகளிலும், உணவகங்களிலும் கட்டயாமாக குப்பைதொட்டி இருக்க செய்யவும், அனைத்து தெருக்களிலும் அம்பது அடிக்கு ஒரு குப்பை தொட்டியை வைக்கவும் மாநகராட்சியை முடிக்கி விடவும். அதனை தினசரி சேகரிக்கவும் சொல்லுங்கள்.தேவையான நிதியையும் ஒதுக்குங்கள். புண்ணியமா போகும்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-ஆக-201204:53:38 IST Report Abuse
Kasimani Baskaran மக்கள் தொகை, கட்டிடங்களின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது - இது சிறிய தொகைதான். கமிசன் அடிக்காமல் இருந்தால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
01-ஆக-201201:26:57 IST Report Abuse
NavaMayam துப்புரவு பணியாளருக்கு இத்தனை கோடி ரூபாயில் துடைப்பம் கொடுக்க பட்டது என்பது கூட சாதனை மாதிரி அறிக்கை வருமோ... ஒன்றுமே செய்யாமல் இந்த மாதிரியான சாதனை செய்திகள் வரும்போது மக்கள் வேதனை பெருகத்தானே செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
01-ஆக-201201:23:30 IST Report Abuse
NavaMayam ஏழைகளுக்கும் இந்த மாதிரி உடைகொடுத்தால் நல்லா இருக்கும் .. வயித்தெரிச்சல் அதிகமாகி விட்டது...
Rate this:
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
01-ஆக-201200:41:16 IST Report Abuse
BLACK CAT மம்மி..... முதல்ல மின்சாரம் ஒழுங்க தாங்க.... பஸ் டிக்கெட் விலை உயர்வு.... பால் விலை உயர்வு....., மின்சார கட்டணம் உயர்வு..... பெட்ரோல் விலை உயர்வு ..... பத்திர பதிப்பு விலை உயர்வு ...... காஸ் விலை உயர்வு ..... ரசயன உரம் விலை உயர்வு ..... விவசாயம் செய்ய நிலம் இல்லை.... தண்ணி இல்லை ...... தரமான சாலை இல்லை ..... இன்னும் பல பல இதில் ஒரு குறையை யாவது போக்க வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.