உ.பி.,யில் மகன் அகிலேஷ் ஆட்சி சுகப்படவில்லை என்கிறார் முலாயம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

லக்னோ: ""அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு, கடந்த ஐந்து மாதங்களில் சரியாகச் செயல்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை'' என, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் விமர்சித்துள்ளார். தன் மகன் தலைமையிலான அரசை, முலாயம் சிங், வெளிப்படையாக விமர்சித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உ.பி.,யில், முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. டில்லி அரசியலில் முக்கிய பங்காற்ற வேண்டியிருப்பதால், தன் மகன் அகிலேஷை, முதல்வர் பதவியில் அமர்த்தினார், முலாயம்.


அதிருப்தி: இந்நிலையில், கடந்த ஐந்து மாத கால, சமாஜ்வாதி ஆட்சி குறித்து, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன், முலாயம் சிங் யாதவ், நேற்று லக்னோவில் ஆலோசனை நடத்தினார். அப்போது, அமைச்சர்கள் சரியாகச் செயல்படவில்லை என, அதிருப்தி தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் கூறியுள்ளதாவது: சமாஜ்வாதி அரசின் கடந்த ஐந்து மாத கால செயல்பாடுகள், சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, மக்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தோமோ, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இந்த விஷயத்தில், உறுதியுடன் செயல்பட வேண்டும். மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.


கெட்ட பெயர் வரும்: இந்த விஷயத்தில், அமைச்சர்களும், தீவிரமாக பணியாற்ற வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகளில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதை, நாம் மனதில் கொண்டு செயலாற்ற வேண்டும். மக்களுக்கு முடிந்த அளவு, பணியாற்ற வேண்டும். அமைச்சர்கள் சிலர், தங்களுக்குள் வெளிப்படையாக விமர்சித்து வருவது, கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். இவ்வாறு முலாயம் சிங் யாதவ் கூறினார். முலாயமின், இந்த வெளிப்படையான விமர்சனம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து, அகிலேஷ் யாதவ் கூறுகையில்,"முலாயம் சிங் யாதவ், எங்கள் கட்சியின் தலைவர். அவரின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறோம். அவரின் ஆலோசனைகளை பின்பற்றுவோம்' என்றார்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
d.punitha - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-201214:41:26 IST Report Abuse
d.punitha முலாயம் சார் முதலில் நீங்கள் வோட்டு போடுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
02-ஆக-201213:53:25 IST Report Abuse
Bhagat Singh Dasan நானும் நல்லவன் / நடுநிலையானவன் என்று ஊருக்கு தெரியபடுத்த இப்படி பட்ட உளறல்கள். நான் அடிக்குறா மாதிரி அடிப்பேன் நீ அழறா மாதிரி நடி, இந்த புண்ணாக்கு பசங்க நம்பிடுவானுங்க. யோவ் முலாயம் நாங்க தமிழ்நாட்டுக்கரனுங்கயா, இந்த மாதிரி எவ்வளவு நாடகத்த பாத்திருகோம் தெரியுமா. ஒருமணி நேர உண்ணாவிரதம், மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா கடிதம் அதுவும் எங்கள் கட்சி தலைவரிடம் கொடுப்போம், இன்னும் பல. நம்ம இளைய தளபதி பாணியில் சொல்ல வேண்டும் என்றால் "நம்ம தேடர்ல உன் படத்த ஓட்டுன, ஸ்க்ரீன் கீஞ்சுடும்".
Rate this:
Share this comment
Cancel
Shankar - Hawally,குவைத்
02-ஆக-201211:59:46 IST Report Abuse
Shankar அது ஒன்னும் இல்லீங்க. வீட்டுல மாமியார் மருமகள் சண்டை வந்திருக்கும். அதன் பிரதிபலிப்பு தான் இது.
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
02-ஆக-201211:04:32 IST Report Abuse
G.Prabakaran UP தான் அதிக அளவு வடக்கு கிரிட் லிருந்து மின்சாரத்தை உபயோகித்ததால் வட இந்தியா முழுவதும் மின் வெட்டு ஏற்ப்பட்டது அதனை திசை திருப்பும் விதமாக தன் மகன் ஆட்சி சரியாகச் செயல்படவில்லை என முலாயம் கூறுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Anand - Madurai,இந்தியா
02-ஆக-201211:03:05 IST Report Abuse
Anand முலாயம் உங்களை பார்த்து சிரிக்கிறேன்... ஹஹஹஹஹஹா
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
02-ஆக-201209:19:45 IST Report Abuse
Indiya Tamilan ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து தூக்கத்தில் உளறி இருப்பார் இதை ஏன் பெரிது படுத்தவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
02-ஆக-201207:48:00 IST Report Abuse
villupuram jeevithan இப்போ தெரிகிறதா ஏன் கருணா அதிகாரத்தை தன் கையிலே வைத்திருக்கிறார் என்று?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Krishnaveni skv - Bangalore,இந்தியா
02-ஆக-201205:36:58 IST Report Abuse
Srinivasan Krishnaveni     skv கத்துக்குட்டியோ கண்ணுகுட்டியோ எக்ஸ்பீரிஎந்ஸ இல்லே (லஞ்சம் வாங்கிபாக்கட் நிரப்ப )என்று அப்பா ஏங்ககுராக போல ஊ பி லே .பிஹார்லே மக்கள் வெறும் mannaandhikuuttam எவனாலும் ஒரு இழவும் செய்யமுடியாது
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
02-ஆக-201203:53:37 IST Report Abuse
மதுரை விருமாண்டி குடும்பச் சண்டை ஆரம்பமாயிடுத்து... மருமகள் வீட்டு ஆட்கள் தர்பார் நடத்துகிறார்களா ??
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
02-ஆக-201207:46:03 IST Report Abuse
villupuram jeevithanசரியாக சொல்லிவிட்டீர்....
Rate this:
Share this comment
Cancel
G.Mani - Chennai,இந்தியா
02-ஆக-201202:09:10 IST Report Abuse
G.Mani இவ்வளவு முக்கியமான, பெரிய மாநிலத்தில், திரு. முலாயம் சிங் யாதவ் அவர் மகனை - கற்றுக்குட்டி என்று தெரிந்தே - இப்படி செய்திருப்பது கண்டிப்பாக யாருக்கும் திருப்தி ஏற்படாதது தான். இதை, மேலும், நம்பி ஆட்சி பொறுப்பைக்கொடுப்பது நிச்சயமாக புத்திசாலிகள் செய்யும் காரியம் இல்லை. இப்போது ஏற்பட்ட விளைவுகள் ரிபீட் ஆகும். உ. பி. மக்கள் புத்திசாலிகள் என்பது என் எதிர்பார்ப்பு. ஆவன செய்வார்களா? ஜி. மணி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்