UP not easiest place to run a hospital: Rahul | "உ.பி.,யில் மருத்துவமனை நடத்துவது கடினம்': ராகுல்| Dinamalar

"உ.பி.,யில் மருத்துவமனை நடத்துவது கடினம்': ராகுல்

Updated : ஆக 02, 2012 | Added : ஆக 01, 2012 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

அலகாபாத்: "உ.பி., மாநிலத்தில் மருத்துவமனையை நடத்துவதும், நிர்வகிப்பதும் மிகவும் கடினம்' என, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் தெரிவித்துள்ளார்.

அலகாபாத்தில் உள்ள கமலா நேரு நினைவு மருத்துவமனை, கடந்த 1941ல் துவங்கப்பட்டது. மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் போன்றவற்றால் இம்மருத்துவமனை மிகவும் பிரசித்திப் பெற்றது. குழந்தைகளுக்கான புற்று நோய்க்கும் இம்மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பெயரில் நேற்று இம்மருத்துவமனையில் துவங்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு புற்றுநோய் மருத்துவப் பிரிவை, காங்., பொதுச் செயலர் ராகுல் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், உ.பி.,யில் மருத்துவமனையை நடத்துவதும், நிர்வகிப்பதும் அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆனால், பல்வேறு இடர்ப்பாடுகளைக் கடந்து, இந்த கமலா நேரு மருத்துவமனை தற்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளது குறித்து நான் பெருமைப்படுகிறேன். புற்றுநோயைப் பொறுத்தவரையில் மிகவும் மோசமான நோய். ஏழைகளுக்கு இந்த நோய் வந்தால், அது தான் அவர்களுக்கு மரண தண்டனை. ஆனால், புற்றுநோயை முற்றிலுமாகக் குணப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில், ஏழை எளிய மக்களுக்கு கட்டணமின்றி துவங்கப்பட்ட இந்த அறக்கட்டளை மருத்துவமனையின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pullatpandi - uae,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஆக-201211:07:20 IST Report Abuse
pullatpandi ivaru என்ன ஹோஷ்பிட்டல் நடத்துராருன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க, இவர phaarthaal நோயாளி மாதிரி தான் இருக்கார். pullatpandi , uae
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
02-ஆக-201214:55:37 IST Report Abuse
ஆரூர் ரங மன நோய் ஆஸ்பத்திரி ஆரம்பீங்க . நிச்சயம் கூட்டம் வரும்.உங்க கட்சிக்காரங்க பல பேர் தொடர்ந்த டெப்பாசிட் இழப்பால் மன நிலை பாதிப்போட இருக்காங்க.
Rate this:
Share this comment
Cancel
Ivar Shan - Oslo,நார்வே
02-ஆக-201213:50:15 IST Report Abuse
Ivar Shan "உ.பி.,யில் மருத்துவமனை நடத்துவது கடினம், தமிழ்நாட்டில் நதிநீர்ப்பிரச்சனை (காவேரி ++) தீர்ப்பது கடினம். நமது இந்தியாவில் ஊழலை ஒழிப்பது கடினம் ??? அப்போ ராகுல் ஜி பிரதமராவது சுலபமோ?????....... An optimist Always see the possibilities in the difficulties butt he pessimists will Always see the difficulties in the possibilities
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
02-ஆக-201213:49:25 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ இந்த கமலா நேரு மருத்துவமனை தற்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளது குறித்து நான் பெருமைப்படுகிறேன். //// கவனிக்கவும், சோனியாவின் பெயரோ, ராஜீவின் பெயரோ கூட வைக்கப் படவில்லை காரணம் பழைய (தியாகங்கள் என்று கருதப்பட்ட) விஷயங்களைப் பேசியே ஒட்டு வாங்கும் காங்கிரசின் இனமான குணம் நாம் நேரு, கமலா ஆகிய பெயர்களை மறப்பதை இவர்கள் விரும்பவில்லை மறக்க வேண்டியது நேதாஜி, பகத் சிங் போன்றோரே
Rate this:
Share this comment
Cancel
rsuhin - nagercoil,ஐஸ்லாந்து
02-ஆக-201213:12:56 IST Report Abuse
rsuhin u s a ல இருக்க mr . பிரசாத் உங்களுக்கு இந்தியா ல என்ன வேலை
Rate this:
Share this comment
Cancel
rsuhin - nagercoil,ஐஸ்லாந்து
02-ஆக-201213:08:22 IST Report Abuse
rsuhin தமிழ்நாடு க்கு வந்து காங்கிரஸ் கட்சி ஐ பலபடுதுங்கள் , திராவிட கட்சிகளை விரட்டுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Jolly Raj - Chennai,இந்தியா
02-ஆக-201211:23:03 IST Report Abuse
Jolly Raj உ.பி மாநிலதுலேயே உன்னாலே ஒண்ணும் கிழிக்க முடியல்லன்னா .....நீ இந்தியா நாட்டுலே என்னத்த கிழிக்க போரே...நீயெல்லாம் ஒரு அரசியல்வாதி...இந்தியா தலை எழுத்தை மாத்தவே முடியாது..
Rate this:
Share this comment
Cancel
Anand - Madurai,இந்தியா
02-ஆக-201211:10:12 IST Report Abuse
Anand ராகுல் நீ ஒரு செல்லா காசு
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
02-ஆக-201209:13:28 IST Report Abuse
Indiya Tamilan ராகுல் தம்பி உ.பி.,யில் மருத்துவமனை நடத்துவது கடினம்&39என்பது இருக்கட்டும் அதைவிட கடினம் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் உயிர் வாழ்வது.
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
02-ஆக-201209:04:39 IST Report Abuse
JAY JAY உபி ல நடத்தாம உகாண்டா வுலையா நடத்த முடியும்...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை