செல்வவளம் தா ஸ்ரீரங்கநாதா! இன்று ஆடிப்பெருக்கு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஆடிப்பெருக்கு நன்னாளான இன்று, காவிரிக்கரையோரம் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரை வணங்கும் விதத்தில் ரங்கநாத ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது.


* காவிரிநதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளே! தாமரை மொட்டுப் போல இருக்கும் விமானத்தின் கீழ் வீற்றிருப்பவரே! ஆதிசேஷன் என்னும் கட்டிலில் யோக நித்திரை செய்பவரே! ஸ்ரீதேவியும், பூதேவியும் வருடும் திருப்பாதங்களைக் கொண்டவரே! ஸ்ரீரங்கநாதரே! உம்மை வணங்குகிறேன்.


* கஸ்தூரி திலகத்தை நெற்றியில் அணிந்தவரே! காதுவரை நீண்டிருக்கும் கண்களைக் கொண்டவரே! முத்துக்களால் இழைத்த பொன் கிரீடத்தில் பிரகாசிப்பவரே! பக்தர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரே! தாமரை போன்ற திருமுகம் பெற்றவரே! ஸ்ரீரங்கநாதரே! உம்மைச் சரணடைகிறேன்.


* மது என்னும் அரக்கனை அழித்தவரே! பாக்கு மரங்கள் நிறைந்ததும், இனிமை மிக்க நீர் நிரம்பியதும், கிளி, குருவி போன்ற பறவைகள் இன்னிசை எழுப்புவதுமான காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் ஸ்ரீரங்கநாத பட்டணத்தை அடையும் பாக்கியம் எனக்கு என்று கிடைக்கும்!


* ரங்கநாதரே! ஹே நாராயண மூர்த்தியே! ஹரே கிருஷ்ணா! ஹரே கோவிந்தா! உமது திருநாமங்களை சொல்லும் எனக்கு பெருகி வரும் காவிரி போல் செல்வவளம் தருவாயாக!


* ரங்கநாதா! அடர்ந்த தோப்புகள் நிறைந்ததும், ரமணீயமானதும், அன்பர்களின் சிரமத்தைப் போக்குவதுமான காவிரிநதிக்கரையோரம் வசிக்கும் பாக்கியத்தை நிரந்தரமாகத் தர வேண்டும். செந்தாமரைக் கண்ணனே! உம்மைச் சேவிக்கும் பாக்கியம் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.


* வேதகோஷம் நிறைந்ததும், மோட்சத்தை தருவதுமான திவ்யதேசமான ஸ்ரீரங்கம் என் கண்களில் எப்போதும் தெரிய வேண்டும். தேவலோக நந்தவனத்தில் அமர்ந்து அமிர்தம் குடிப்பதை காட்டிலும், ஸ்ரீரங்கத்தில் திரியும் நாயாக நான் திரிந்தாலும் போதும். லட்சுமியின் விலாசமான ஸ்ரீரங்கமே எனக்கு எப்போதும் புகலிடமாக அமைய வேண்டும்.


* "பசி எனக்கு அதிகமாக இருக்கிறது. அதனால் உடம்பு நடுங்குகிறது' என்று குழந்தை கூறினால் கருணை கொண்ட தாய் ஓடிவந்து, எப்படி உடனே ஆகாரம் அளித்து அன்பு காட்டுவாளோ, அதுபோல காவிரிக்கரையோரம் கண்வளரும் ரங்கநாதரே! தாமதிக்காமல் விரைந்து வந்து அருள்புரிய வேண்டும்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A R Parthasarathy - Chennai,இந்தியா
02-ஆக-201215:04:11 IST Report Abuse
A R Parthasarathy பாம்பின் மீது பள்ளி கொண்ட பரமனை பாடாத வாயெல்லாம் ஊமையாய் இருப்பதற்கு சமம். மனிதர்களை பாட மாட்டேன் என்று ஆழ்வார்கள் வாழ்ந்த பூமியில் இன்று நரச்ச்துதி தான் அதிகமாகி விட்டது. அதனால் தான் இத்தனை அல்லல்கள். ஆன்மீக பெரியோர்களே, ஆண்டவனை வேண்டுங்கள் நாடு நலம்பெற வேண்டும் என்று. இறைவனின் அருட்கொடையால் வானம் வர்ஷிக்கட்டும். பூமித்தாய் குளிரட்டும். இதுவரையில் காவேரி காணாத வறட்சியை இந்த ஆண்டு கண்டுவிட்டது. இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வழமைளிக்க வருண பகவான் வருகை தருவான். மக்கள் துயரம் தீர ஆள்பவர்கள் திட்டமிட்டால் மட்டும் போதாது. ஆண்டவனும் அருள் மழை பொழிய வேண்டும். மேலே கூறப்பட்ட ரங்கனை வேண்டும் பாடலை மனமுருகி பாடுங்கள். பள்ளி கொண்டிருக்கும் பரமனின் காதுகளில் அவை ஒலிக்கட்டும். நம்மை விட்டால் அவனுக்கும் யாரும் கதி இல்லை. அவனுடைய பிள்ளைகள் நாம். நம்மை வழவைக்கவேண்டியது அவனுடைய கடமை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்