வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழ் 99 விசைப்பலகையை எந்த இயங்குதளத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். (இதற்கென தனி விசைப்பலகை (கி போர்டு) தேவைஇல்லை ஆனால் தமிழ் 99 விசைப்பலகையில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் மேலும் அதற்கான மென்பொருள் இருக்க வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழகம் இதற்காக ஒரு மென்பொருளை உருவாக்கி இலவசமாக பதிவிறக்கம் செய்ய இணையதளத்தில் இட்டுள்ளது. தற்போது இலவசமாக மாணவர்க்கு வழங்கப்படும் மடிக்கணினிகளில் கூட இந்த மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழ் 99 விசைப்பலகையில் தட்டச்சு செய்யவேண்டுமனால் அதை தட்டச்சு பயிலகத்திலிருந்தோ அல்லது அதற்காக ஒரு பயிற்சையோ அளித்தால் தான் இதில் தட்டச்சு செய்ய இயலும்.
இங்கேயும் அதே தான் பிரச்சினை, எப்பிடி தமிழ் வளர்ச்சி துறை என்று ஓன்று மந்திரி தலைமையில் பொறுப்பில்லாமல் செயல் படுகிறதோ அதே போல தான் தமிழில் பொறியியல் பாடங்களை ஆரம்பிப்பதும், கடைசியில் மூடு விழா செய்வதும், அதற்கு காரணம் மக்கள் ஆதரவு இல்லை என்பார்கள். நாமும் விவரம் இல்லாமல் தமிழ் சிறந்ததா, ஆங்கிலம் சிறந்ததா என்று நமக்குள் பட்டி மன்றம் செய்து கொண்டு கடைசியில் ஆங்கிலம் தான் சிறந்தது அது தான் உலக அளவில் பிராக்டிகலாக சிறந்தது என்று தீர்ப்பு சொல்லி தமிழுக்கு சமாதி கட்டுவோம். மற்ற நாடுகளை வளர்ந்து வரும் சிறிய நாடுகளை பாருங்கள், மன்னராட்சி முறை இருந்தாலும் அவர்கள் அவர்களது தாய் மொழியை வளர்ப்பதில் எவ்வளவு அக்கறை கொண்டு செயல்படுகிறார்கள் என்பது புரியும். அவர்கள் எண்ணிக்கையில் சிறிய அளவில் இருந்தாலும், ஒரு பொருளை சந்தைபடுத்துதலில் போதிய நுகர்வோர் பலம் இல்லா விட்டாலும், கணினி, மடிக்கணினி இல் இருந்து மொபைல் வரை அனைத்தும் அவர்கள் தாய் மொழியில் கி போர்டு இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்து அதை சாதிக்கிறார்கள். ஆங்கில அறிவு இல்லாதவர்கள் கூட அவர்கள் தாய் மொழியில் மொபைலில் SMS அனுப்புகிறார்கள். ஆனால் இங்கே நமது தமிழ்நாட்டில் மக்கள் தொகையின் அளவு, அதில் நுகர்வோர் பலம் என்று எடுத்து கொண்டால் நாம் நமக்கு தேவையானதை சந்தை படுத்துவோரிடம் இருந்து பெற முடியும், அவர்களை நிர்பந்த படுத்த வேண்டியது இல்லை. நாம் கேட்பதை செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள்......., இருக்க வேண்டும் அது தான் வியாபார அணுகுமுறை. ஆனால் செய்கிறோமா? இல்லை, ஏன் ?. இது ஒரு சாம்பிள். இப்பிடி ஒவ்வரு துறையாக கவனம் செலுத்தி தமிழ் மொழிக்குறிய வாய்ப்புகளை உருவாக்கும் போது, தமிழ் கற்பவர்களின் தேவை உயரும், தேவை உயரும் போது அந்த துறையில் கல்வி கற்க ஆர்வம் அதிகம் ஆகும். அதை அடுத்து கல்வி துறையும் அதற்க்கு ஏற்றார் போல் அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். காலம் மாறி வருகிறது, நாம் அண்ணாந்து பார்த்த காலம் மாறி, உலகம் நம்மை பார்க்க, நம்மை அணுக ஆரம்பித்துள்ளது. எந்த மக்கள் தொகை நமக்கு பாரமாக தெரிந்ததோ அதே மக்கள் தொகை, இன்றய தொழில் நுட்ப புரட்சியில் உலகத்தில் உள்ள அனைத்து சந்தைகளுக்கு சொர்க்க பூமியாக உள்ளது, அதை உணர்ந்து தக்க முறையில் புத்திசாலித்தனத்தோடு செயல் பட்டால் நாம் முன்னேறுவது மட்டுமில்லை நமது தமிழ் மொழியையும் உலகம் கற்றுக்கொள்ள வைக்க முடியும். பணம் சம்பாதிக்க திறமைசாலிகள் வெளிநாடுகளுக்கு சென்ற காலம் போய், இப்போது இந்தியாவின் முதலீட்டாளர்களை மற்ற சிறிய நாடுகள் எதிர் பார்க்க வேண்டிய நிலையில் முன்னேறி இருக்கிறது. ஆனால் நாம் நமது கலாசாரம், மொழி, நமது பண்பாடு பற்றி கவலை படாமல், பணம் ஒன்றை மட்டுமே குறியாக கொண்டு செயல்படும் அரசியல் வாதிகளின் தலைமையில் இந்தியா இயங்கி கொண்டு இருப்பதால் கண்ணை விற்று சித்திரம் வாங்கும் நிலை. இதை மாற்ற பொருளாதாரம் ஒரு தடையே இல்லை, நமது நல்ல சிந்தனை மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் வலியுறுத்துவது போல விழிப்புடன் கூடிய கனவு வேண்டும்.
தமிழ் 99 என்பது தேவையற்ற ஒன்று. (தமிழில் தட்டச்சிடத் தெரியாதவர்களுக்குத் தொடக்க நிலையில் உதவலாம்.) தட்டச்சு முறையில் விரல் பயன்பாட்டிற்கு ஏற்ப விசைப்பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதே முறையில்தான் கணிணி விசைப்பலகையும் இருக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கில் தட்டச்சு வெற்றியாளர்களை உருவாக்கிக் கொண்டு அதற்கு முரணான கணி விசைப்பலகையைப்பயன்படுத்த வேண்டும் என்பது உளவியலுக்கும் மூளை வளர்சிக்கும் எதிரானது. பயன்பாட்டு நடைமுறையை உணராமல் அறிவிக்கப்படும் தமிழ் 99 என்பதும் வேறு வணிகர்களுக்கு நன்மை தரக்கூடியதே. எனவே, புதிய தட்டச்சு முறை, முந்தைய தட்டச்சு முறை, பரிந்துரைக்கப்படும் தமிழ் ௯௯ முறை என எவ்வகையிலும் தட்டச்சிடலாம் எனத் தற்பொழுது இருக்கும் நடைமுறையே தொடரலாம். எழுத்துருக்களும் சீருரு ( யூனிகோடு) என்றெல்லாம் வரையறுக்காமல் குறிப்பிடத் தகுந்த எழுத்துருக்களில் எதைப் பயன்படுத்தினாலும் அனைவரும் அறியும் வண்ணம் கணியமைப்பை உருவாக்க வேண்டும். தட்டச்சு நிறுவனங்கள் அனைத்தும் கணித்தட்டச்சு பயிற்றுவிக்கப்படும் வகையில் உரிய தேர்வு முறை மாற்றங்கள் தேவை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம் /
ஐயா இலக்குவனார்,
இந்த செய்தி என்ன சொல்கிறது என்றாவது புரிந்து கொண்ட பிறகு பதிலிருத்திருக்கறீர்களா?
கணினி விசைப்பலகையில் ஏ என்ற ஆங்கில எழுத்தை அடிக்கும் போது ஏ என்ற ஆங்கில எழுத்து அச்சிடப்படுவது ஆங்கிலத்தில் எழுத்துரு ஒழுங்கு படுத்தப் பட்டிருப்பதால்.
தமிழில் பத்தாண்டுகள் முன்புவரை பல எழுத்துருக்கள் பயன்பாட்டில் இருந்தனஒவ்வொருவரும் வேறு வேறு பெயர்களில் எழுத்துருக்களை உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக ஒரு எழுத்துருவில் உருவாக்கப்பட்ட பக்கம் வேறொரு எழுத்துருவைப் பயன்படுத்துபவர் படிக்க இயலாமல் இருந்ததுஇன்னும் சொல்லப்போனால் அது எந்த எழுத்துருவில் உருவாக்கப்பட்டது என்று கூட அறிய இயலாவண்ணம் இருந்தது.
இதனால் கணினித் தமிழ் பயன்பாடு மிக சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தது.
இந்த நிலையில்தான் டாம் 99 எழுத்துறு அரசின் முயற்சி மூலம் சீரான எழுத்துருவாக அறிவிக்கப்பட்டது.
டாம் 99 ஐ உருவாக்க பலர் விசைப்பலகை மென்பொருள்களை இப்போதும் உருவாக்கலாம்ஆனால் எழுத்துரு டாம் 99 தான் என்பதில் குழப்பங்கள் இருக்கக் கூடாது.
இன்று பல இலவச மென்பொருள்கள் கூட டாம் 99 க்குக் கிடைக்கிறது.
அரசு தானாக எப்போதும் ஒன்றும் கிழிப்பதில்லை.தமிழ்க் கணிமை உபயோகிப்பாளர்கள் பலர் சிங்கப்பூர் தமிழ்க் கணிமை மாநாட்டில்தான் முதலில் யூனிகோட் எழுத்துருவைப் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தவர்கள்.
அதை அறிவித்தது மட்டுமே தமிழக அரசு.
அறிவித்ததைப் பின்பற்றக் கூட அரசு அமைப்புகளுக்கு யாராவது நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.
டெக்னிகலாக எதுவும் புரிந்து கொள்ளாமல்,தமிழே விழி தமிழா விழி என்றெல்லாம் உங்களைப் போன்றவர்கள் உதார் விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.....
இந்த மாற்றத்தை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருக்கவேண்டும். ஆழ்த்த உறக்கத்தில் இருப்பவர்கள் போல நடிப்பவர்களை எப்படி எழுப்புவது? ஆப்பிள் மகிண்டோஷில் இரண்டு முறைப்படியும் (தமிழ் 99 மற்றும் அஞ்சல் 99 ) எளிதில் தமிழை உபயோகப்படுத்தலாம் (எல்லா மென் பொருளிலும்). விண்டோஸ் 7 இலும் கூட இது முடியும் என்றே நினைக்கிறேன். தெரிந்தவர் யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.