World friendship day | என் பிரண்ட போல யாரு மச்சான்: இன்று உலக நண்பர்கள் தினம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

என் பிரண்ட போல யாரு மச்சான்: இன்று உலக நண்பர்கள் தினம்

Added : ஆக 04, 2012 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சூரியன் - சந்திரன்
இரவு - பகல்
ஆண் - பெண்


இறைவனின் படைப்பில், இப்படி எல்லாமே இரண்டாக உருவாக்கப்பட்டுள்ளது. கடிகாரத்தின் முட்களை பார்க்க நேரிடும் போதெல்லாம், இதிலும் இணைந்த கைகளாக இருக்கிறதே என்று, முட்கள் நகரும் போதும், பழுதாகி நிற்கும் போதும் நிரூபணம் செய்து வருகிறது. ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஏதாவது ஒரு தேடுதல், நம்மை அறியாமலேயே, நிழலாக பயணித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த பயணத்தின் ஏதோ ஒரு நிறுத்தத்தில், நொடிப்பொழுது உதித்து, புருவத்தை உயர்த்தும் பார்வை, இன்றளவும் இனம் புரியாத இன்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதில், காதலையும், காமத்தையும் மட்டுமே எடுக்கும் வழக்கம், புரையோடிக் கிடக்கிறது. "காதல் தான் எல்லாம்' என்ற திரைப்பட வசனத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறது. ஆனால், அதற்கும் மேலாக, எல்லாவற்றையும் தகர்த்தெறியும் சக்தி நட்புக்கு உண்டு என்றால், அவ்வளவு சீக்கிரம் யாரும் மறுக்க முடியாது. காதலில் எதிர்பார்ப்பு இருக்கும். நட்பில், என்ன எதிர்பார்ப்பு இருந்து விடப் போகிறது. எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது தானே உண்மையான நட்பு. இருந்தால், அது நட்பிலிருந்து வெளிநடப்பு செய்வதற்கு சமம் என்று தானே அர்த்தம். ஆணும், ஆணும் நட்பாக இருக்கும் போது, சந்தேகக் கண்ணை திறந்து பார்க்காத இந்த உலகம், ஆணும், பெண்ணும் நட்பாக இருக்கும் போது மட்டும், விரித்த பார்வைக்கு அடைக்கலம் கொடுக்கிறது. நட்பின் எல்லையை விட்டு தாண்டாத இருவர், சிரித்து பேசிக் கொண்டிருந்தால், காலம் முத்திப் போச்சு என்பதாக இருக்கும் இவர்களின் பேச்சு. இப்படித் தான் இந்த சமூகம், நட்பை கொஞ்சம், கொஞ்சமாக சந்தேகித்து, அவர்களின் மனதில் இனம் புரியாத ஊனத்தை உண்டாக்குகிறது. ஏன்? ஆணும், பெண்ணும் நட்பாக பழகக் கூடாதா? என்ற கேள்வி எழும் போது, ம்ஹூம்... என்ற பதில் மட்டும், பலரின் உதடு திறக்காத வார்த்தையாக உருவாகி, ஒற்றைப் புள்ளியில் முறிக்க காரணமாகி விடுகிறது, அவர்கள் ஸ்நேகத்தை.


மகிழ்ச்சியில்
தலையில் குட்டி
கோபத்தில்
தலை வருடி விடும் கைகள் தாம் தோழியுடையவை.


என்று, லயித்து சொன்ன ஒரு கவிஞரின் வரி தான் நினைவுக்கு வருகிறது. முதலில் நட்பாக தொடரும் உறவு, பின்னாளில் காதலில் தான் முடியும் என்று, சிற்சில சம்பவங்கள், சந்தேகங்களுக்கு வக்காலத்து வாங்கினாலும், இதையெல்லாம் புறம் தள்ளி காதலை உள்ளே அனுமதிக்காமல் பழகுவோர் இருக்கத் தான் செய்கிறார்கள். காதல் காவியத்தை மட்டுமே படித்து பழக்கப்பட்டவர்களுக்கு, காவியமான நட்பை தெரிந்துக் கொள்ள முன்வராதது, துரதிர்ஷ்டத்தின் அதிர்ஷ்டம். ஆனால், இப்படியான நண்பர்கள், நண்பர்களாக இருக்கும் போது தான், நட்பின் சுவாசம், மற்றவர்களின் நுரையிரலுக்குள் செல்லும். மேற்சொன்ன அதே கவிஞர், மற்றொரு கவிதையையும் அருமையாக வடித்துள்ளார்.
அந்த மழை நாளில்
ஆளுக்கொரு குடை பிடித்தபடி
நடந்துக் கொண்டிருந்தோம்.
வீசிய காற்றில் காணாமல் போனது
என் கையில் இருந்த குடை.
கேலியாய் சிரித்த படி
உன் குடையையும்
காற்றுக்கு கொடுத்து விட்டு
கைகளை நீட்டினாய்
இருவரும் நடக்கத் துவங்கினோம்
நட்பின் குடைக்குள்.
வாழ்க்கைக்கு ஒரு இலக்கணம், திருமணத்துக்கு ஒரு இலக்கணம், காதலுக்கு ஒரு இலக்கணம் இருக்கும் போது, நட்புக்கு என்று ஒரு இலக்கணம் எழுதி வைக்காத படைப்புகளாக, இந்த உலகத்தின் பாணியில், தனி வழியில், காவியமாக வீரு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. காதல் வேண்டுமானாலும் தோற்கலாம்; ஆனால், நட்பு தோற்றதாக, கல்வெட்டில் கூட பதிக்கவில்லை வரலாறு. உன்னதமான நட்பை வாழ்த்துவோம்...! இந்த உலகம், இன்னும் உயிரோடு இருக்கும். இன்று, நண்பர்கள் தின விழா.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohanadas Murugaiyan - Ras al Khaima,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஆக-201219:22:51 IST Report Abuse
Mohanadas Murugaiyan அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்........
Rate this:
Share this comment
Cancel
Asokan Sivavadivel - Jeddah,சவுதி அரேபியா
05-ஆக-201214:39:10 IST Report Abuse
Asokan Sivavadivel நண்பர் Willium Shakespere முகம்நக மொழிபவர் நட்பல்லர்-நம் அகம்துயர் அடைகையில் அருகிலிரார் காற்றைப் போலே மொழியிருக்கும் காண்பதற் கரியர் மெய்நண்பர் அனைவரும் உனக்கு நண்பரடா அளவின்றி செலவிடப் பணமிருந்தால் களஞ்சியம் குறைந்தால் எடுப்பதற்குக் களிப்புடன் எவருளர் கொடுப்பதற்கு உடுக்கை இழந்தவன் கைபோலே இடுக்கண் களைய வருவாரே-நம் துயரினில் கண்ணீர் சிந்துவார் தூங்கார் நாம்விழித் திருக்கையிலே துன்பம் இதயத்தைத் துளைக்கையிலே தானும் தவிப்பார் மெய்நண்பர் இவையேப் பிரித்து அறிதற்கு மெய்யினர் பொய்யினர் எவரென்றே.
Rate this:
Share this comment
Cancel
poo beckham - Salem,இந்தியா
05-ஆக-201213:17:27 IST Report Abuse
poo beckham Between boy and girl friendship is very difficult to continue as like that forever. at certain we have to reduce or should stop talking to our girl friends other wise they have to face some problem in there circumstance. Everyone won&39t think same side. Boy and girl can be good friends before there marriage.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை