புதுடில்லி: ""தேர்தலின் போது, அரசியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தித் தரும் ஒரு கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும்,'' என, சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தன் வலைதளத்தில் கூறியுள்ளதாவது: நாட்டிற்கு தேவை, ஒரு நல்ல மாற்றத்தை தரக்கூடிய அரசியல் கட்சி. அப்படிப்பட்ட கட்சிக்கு ஆதரவு அளிப்பது என, கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கு 90 சதவீத ஓட்டுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தீர்மானம் தேவை: மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எல்லாம், ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராம சபைகளும், மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சிக்கு ஆதரவு தருவது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றச் செய்ய வேண்டும். நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, சரியான ஒரு பதிலீட்டு கட்சியை உருவாக்குவது எளிதான வேலையல்ல. அதே நேரத்தில், அது முடியாத காரியமும் அல்ல. நான் அரசியல் கட்சி துவக்க மாட்டேன்; தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, நான் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன். நல்லவர்கள் பார்லிமென்டிற்கு செல்வதை உறுதி செய்வேன். ஊழலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, ஒரு அரசியல் கட்சி உருவாவதை ஆதரிப்பர். தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் அதிகார போதையிலும், பணம் சம்பாதிக்கும் வேகத்திலும் உள்ளனர். அவர்களால் நாட்டில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை தர முடியாது. இவ்வாறு ஹசாரே கூறியுள்ளார்.
குஜராத்தில் போட்டியா? இதற்கிடையில், ""இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,'' என, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த பிரசாந்த் பூஷன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ""அன்னா ஹசாரே குழுவின் உயர் மட்டக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும். அப்போது, சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவது உட்பட பல பிரச்னைகள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கெஜ்ரிவால், கிரண் பேடி, ராம் தேவ் ஆகியோர் ஊழல் மற்றும் கருப்பு பணம் ஆகிய குற்றசாட்டிற்கு ஆளானவர்கள் ,அண்ணா ஹசாரே மீதும் அவரின் ட்ரஸ்ட் சம்பந்தமான குற்றச்சாட்டு உள்ளது, இப்படிப்பட்ட உத்தமர்கள்தான் ஊழலை ஒழிக்கப்போவதாக கூப்பாடு போட்டனர்,எத்தர்களின் பேச்சு எட்டு நாளைக்கு தான் எனபது போல இவர்களின் நாடகம் முடிவுக்கு வந்ததில் சந்தோசம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.