தீவிர அரசியலில் குதிக்கிறார் பிரியங்கா
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, தீவிர அரசியலில் குதிக்கிறார். முதல் கட்டமாக அவர், தன் தாயாரின் ரேபரேலி லோக்சபா தொகுதி பொறுப்புகளை கவனிக்க உள்ளார்.

பிரியங்கா, தீவிர அரசியலில் குதிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அலுவலக பொறுப்பாளர்கள் அனைவரும், "பிரியங்கா எப்போதும், ரேபரேலி தொகுதி மக்களுடன் கலந்துரையாடி வருபவர். அதனால், இதில் புதிய விஷயம் ஒன்றும் இல்லை' என்றனர். அதேநேரத்தில், ஒவ்வொரு புதன்கிழமையும், இனி பிரியங்கா, ரேபரேலி தொகுதிக்கு செல்வார் என்றும், அங்கு மக்களையும், கட்சித் தொண்டர்களையும் சந்தித்து குறைகளைக் கேட்பார் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. ஏற்கனவே, இந்த ஆண்டு முற்பகுதியில், உ.பி., சட்டசபை தேர்தல் நடந்த போது, ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில், பிரியங்கா தீவிர பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "பிரியங்கா தீவிர அரசியலில் குதிக்கப் போவது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அவர் எப்போதுமே கட்சிக்கு ஆதரவாக இருப்பர். தன் சகோதரர் மற்றும் தாயாரின் தொகுதிகளில், அவர்களுக்கு உதவிகரமாக இருப்பவர்' என, காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறியுள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (46)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - tiruchi,இந்தியா
07-ஆக-201201:53:34 IST Report Abuse
babu நாட்டை கேவலபடுதுகிறார்கள்,
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
06-ஆக-201214:16:29 IST Report Abuse
rajan வேற பொழப்பு உங்களுக்கு ஏது. இந்த சாக்கடைல தான நீங்கள்ளாம் குளிச்சு புனிதமடையணும்
Rate this:
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
06-ஆக-201214:02:36 IST Report Abuse
S.M.Noohu அது தொண்ணூறு சதமானம் முழ்கியாகிவிட்டது .. இனி யார் (கேப்டனாக) வந்தாலும் பிரயோஜனமில்லை.
Rate this:
Share this comment
Cancel
K.vijayaragavan - chennai,இந்தியா
06-ஆக-201213:41:58 IST Report Abuse
K.vijayaragavan இனி இந்தியாவை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது தோற்றத்திலும், நடை உடை பாவனைகளிலும் இந்திராவை அப்படியே உரித்து வைத்திருக்கும் பிரியங்கா குணத்திலும் இந்திராவை கொண்டிருந்தால் அதில் ஆச்சரியமில்லை. நேரு குடும்பம் இந்தியாவை பிடித்த சாபக்கேடு.இந்தியாவுக்கு ஏற்கனவே இழைத்துக்கொண்டிருக்கும் கொடுமைகள் போதாது என்று இப்போது புதிதாக பிரியங்கா வேறு. சூரியனை கிரகணம் பிடிப்பது போல், இந்தியாவை நேரு குடும்பம் பிடித்துக்கொண்டிருக்கிறது. அந்த கிரகணம் எப்போது விடும் என்று தெரியும்.இந்த கிரகணம்?நேரு குடும்பம் என்னும் கிரகணம் விடும் வரை இந்திய சூரியன் ஒரு நாளும் பிரகாசிக்க முடியாது.
Rate this:
Share this comment
babu - tiruchi,இந்தியா
07-ஆக-201202:09:52 IST Report Abuse
babuசூது சுதந்திரம் பெற்ற போதே வைத்து விட்டனர், ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் கட்சி தலமைக்கும நாட்டின் பதவிகளுக்கும வரகூடாது , வாய்ப்புகள் நாட்டின் அணைத்து மக்களுக்கு ம கொடுக்க பட வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Ganyboy - Chennai,இந்தியா
06-ஆக-201213:12:23 IST Report Abuse
Ganyboy சார், இந்த அரசியல் ல குதிக்கிறேன் குதிக்கிறேன் நு சொல்றாங்களே, அது எத்தன அடி உயரத்துல இருந்து குதிபாங்க ? கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்...
Rate this:
Share this comment
Cancel
Mohonraj Mohon - p.metuppalayam ,இந்தியா
06-ஆக-201213:07:10 IST Report Abuse
Mohonraj Mohon வருக வருக இட்டாலியீன்வாரீச வருக வருக இந்தியாவ வீத்துட்டு இத்தாலிக்கு போங்க
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
06-ஆக-201209:48:30 IST Report Abuse
JAY JAY நீங்க குதிச்சே தான் ஆகணுமா...? அப்படியே ஓரத்துல நின்னு உங்க அண்ணாத்தே பண்ணுறத வேடிக்கை பாக்க கூடாதா?..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-ஆக-201209:35:35 IST Report Abuse
Nallavan Nallavan பாஜகவுக்கோ, ஹசாரே கட்சி துவங்கினால் அந்தக் கட்சிக்கோ இது இனிப்பான செய்தி
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
06-ஆக-201208:43:39 IST Report Abuse
Indiya Tamilan பிரியங்கா நீ ஒரு ஆள்தான் மிச்சம் இருந்தாய் பிள்ளை குட்டிகளையும் மறந்துடாம இழுத்து கொண்டு வாம்மா அரசியலுக்கு.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-ஆக-201209:37:26 IST Report Abuse
Nallavan Nallavanநண்பரே,,,, அதை நாம சொல்லி இவங்க தெரிஞ்சிக்கனுமா???? மீன் குஞ்சுக்கு நீஞ்சக் கத்த்துக் கொடுக்கணுமா???? குட்டி பதினாறு அடி பாயாதா????...
Rate this:
Share this comment
Cancel
SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
06-ஆக-201208:35:46 IST Report Abuse
SENTHIL KUMAR அண்ணன் உத்திரப்பிரதேசத்தில் இருந்து குதிச்சு கால உடச்சுக்கிட்டார். இப்போ தமக்கை பாவம் மக்கள் இந்த குடும்ப அரசியல் இந்தியமக்களின் சாபக் கேடு போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்