Karunanidhi anger over party man to delay TESO meet works | டெசோ மாநாடு பணிகளில் சுணக்கம் காட்டிய நிர்வாகிக்கு கருணாநிதி டோஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

டெசோ மாநாடு பணிகளில் சுணக்கம் காட்டிய நிர்வாகிக்கு கருணாநிதி டோஸ்

Updated : ஆக 07, 2012 | Added : ஆக 05, 2012 | கருத்துகள் (105)
Advertisement

டெசோ மாநாடு குறித்த எதிர்ப்பு கருத்துகள் டுவிட்டர், பேஸ்புக்கில் அதிகரித்துள்ளதால், அவற்றை முறியடிக்கும் வகையில், இலங்கை அரசியல் கட்சித் தலைவர்களுடன், தி.மு.க., தலைவர் கருணாநிதி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், மாநாடு குறித்த தகவல்களுடன் வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. மாநாட்டுப் பணிகளில் சுணக்கம் காட்டிய, தி.மு.க., நிர்வாகி ஒருவருக்கு கருணாநிதி டோஸ் விடுத்த சம்பவம், அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 12ம் தேதி, டெசோ மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கான பணிகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி, பிரபல பந்தல் கான்ட்ராக்டர் ஒருவரிடம் வழங்கப்படுகிறது. மாநாட்டு அரங்கம் பிரமாண்டமாக சினிமா செட்டிங் போல் அமைக்கப்படுகிறது. அரங்கத்தின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனையை, கருணாநிதி வழங்கியுள்ளார்.

டெசோ வெப்சைட்: டெசோ மாநாடு கருணாநிதியின் நாடக ரயில் என்றும், அதற்கு யாழ்தேவி என்ற பெயர் சூட்டப்பட்டு, வவுனியா வரை பயணம் செல்லும் என்ற எதிர்ப்பு கருத்துகள் டுவிட்டரில், பேஸ்புக்கில் ஏராளமாக காணப்படுகின்றன. இந்த எதிர்ப்பை முறியடிக்கும் வகையில், நேற்று முன்தினம் டெசோ மாநாட்டு நிகழ்ச்சி விவரங்கள், மாநாட்டில் பங்கேற்கவுள்ள இலங்கைத் தமிழ் தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களை குறித்த தகவல்களை தெரிவிக்கும் வெப்சைட்டை, கருணாநிதி துவக்கி வைத்தார். இந்த வெப்சைட்டிற்கு தலைவராக கருணாநிதி உள்ளார். செல்வா, சபாரத்தினம், அமிர்தலிங்கம் போன்ற இலங்கையைச் சேர்ந்த மூத்தத் தலைவர்களுடன் கருணாநிதி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளன. மாநாடு முடிந்த பின், இந்த வெப்சைட் தொடர்ந்து செயல்படவுள்ளது.

ஸ்டாலின், கனிமொழி: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "டெசோ மாநாட்டிற்கு, தி.மு.க., இளைஞர் அணியினர் வெள்ளைச் சீருடையில் வரவேண்டும்' எனக் கூறியுள்ளார். ராஜ்யசபா எம்.பி., கனிமொழி விடுத்துள்ள அறிக்கையில், "பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப, துயரங்களுக்கும் மருந்து போடுகிற மாநாடு தான், டெசோ மாநாடு' எனக் கூறியுள்ளார்.

நிர்வாகிக்கு டோஸ்: இதற்கிடையில், மாநாட்டுப் பணிகள் தொடர்பாக, மாநில நிர்வாகி ஒருவரிடம் கருணாநிதி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனால், அந்த பணிகளை செய்து முடிப்பதில் மாநில நிர்வாகி காலதாமதம் ஏற்படுத்தினார். இதனால் அதிருப்தி அடைந்த கருணாநிதி, "எனக்கு கை, கால் இல்லைன்னு நினைச்சிட்டீங்களய்யா... நானே அந்த பணியை செய்து முடிக்கிறேன்னு' மாநில நிர்வாகிக்கு டோஸ் விடுத்தது தான் தாமதம், அந்தப் பணியை துரிதமாக அவர் செய்து முடித்ததாக, அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yasodha - Chennai,இந்தியா
08-ஆக-201212:55:56 IST Report Abuse
yasodha மாப்பு உன்னக்கு வேன்னுமா இன்னும் ஒரு ஆப்பு
Rate this:
Share this comment
Cancel
Ratan Kan - Bangalore,இந்தியா
06-ஆக-201214:50:02 IST Report Abuse
Ratan Kan கூட்டணிக் கட்சிகள் நிர்ப்பந்தம் கொடுத்தால், சொந்த நாட்டையே விலைபேசும் காங்கிரஸ் கட்சி, கருணாநிதி நிர்ப்பந்தம் கொடுத்தால் கண்டிப்பாக இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும். கனிமொழியா கடைக்கோடித் தமிழனா என்று கேட்டால், கருணாநிதி கண்ணை மூடிக்கொண்டு காட்டிக் கொடுத்து விடுவார். கவலையே வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
pullatpandi - uae,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஆக-201214:35:39 IST Report Abuse
pullatpandi அய்யா இங்கயும் சினிமா மானாட மயிலாட தானா? நான் உங்களை என்னவோ ஏதோனு நேனைசுட்டேன்கைய , மன்னிக்கணும் நீங்க அதுக்கு சரி பட்டு வர மாட்டீங்க........................
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
06-ஆக-201213:58:55 IST Report Abuse
saravanan இலங்கைல மிச்சம் இருக்கிற கொஞ்ச நஞ்ச தமிழன் கூட நிம்மதியா இருக்கிறது இவருக்கு பிடிக்கல போலிருக்கு......சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுக்க கெளம்பிட்டாரு............
Rate this:
Share this comment
Cancel
hameed - riyadh,சவுதி அரேபியா
06-ஆக-201213:27:04 IST Report Abuse
hameed ஆட்சியில் இருக்கும்போது சொல்ல முடியாததை எதிர்கட்சியாக இருக்கும்போது சத்தம் போட்டு சொல்லலாம் .இது அரசியல் எல்லா கட்சிக்கும் பொருந்தும்..........விடுங்க பாஸ்...................
Rate this:
Share this comment
Cancel
Sesha Narayanan - Chennai,இந்தியா
06-ஆக-201213:15:00 IST Report Abuse
Sesha Narayanan அடுத்த நாடக படைப்பு விழா. நாடகத்தின் பெயர் டெசோ மாநாடு. இடம். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.,மைதானம். நாடக தேதி. 12 ஆகஸ்ட் ௨௦௧௨. எதிர்ப்பு கருத்துகள் டுவிட்டர், பேஸ்புக்கில் அதிகரித்துள்ளதால், அவற்றை முறியடிக்கும் வகையில், இலங்கை அரசியல் கட்சித் தலைவர்களுடன் முக தலைவர் கருணாநிதி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் விழாவில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பெரிய பந்தல்கள், வரவேற்ப்பு தோரணங்கள். அனைவரும் வருக
Rate this:
Share this comment
Cancel
Balamurugesan Sivaperumal - London,யுனைடெட் கிங்டம்
06-ஆக-201213:10:41 IST Report Abuse
Balamurugesan Sivaperumal ஈழம் பற்றி பேசி இருக்க வேண்டிய நேரத்தில் மகனுக்கும், மகளுக்கும், அவள் நண்பருக்கும், மருமகனுக்கும் மந்திரி பதவி கேட்டு கெஞ்சி கூசி குறுகி நின்ற இவர் சொக்கத்தங்கம் சோனியாவின் விருப்பப்படி இலங்கை தமிழர்கள் அழிக்கப்பட்ட போது இரண்டு மணி நேர உண்ணாவிரதம் இருந்து போர் முடிந்ததாக அறிவித்தவர். சாராயக்கடைகளை திறந்து தமிழருக்கு மகிழ்வூட்டியவர். மானாட, மயிலாட ஆட்சி புரிந்தவர். இவர் இப்போது போராடுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Raja Nandhagopal - Tiruchirappalli,இந்தியா
06-ஆக-201213:08:11 IST Report Abuse
Raja Nandhagopal கொள்ளை அடித்த பணம் போதும் கலைஞர் குடும்பமே. மக்களை விட்டு விடுங்கள், அவர்கள் இனியாவது நன்றாக வாழட்டும்
Rate this:
Share this comment
Cancel
Venkatesan - Bangalore,இந்தியா
06-ஆக-201213:01:21 IST Report Abuse
Venkatesan இனிமேலும் தமிழ் மக்களை கருணாநிதி ஏமாற்ற முடியாது. காப்பாற்ற வேண்டிய நேரத்தில் காப்பாற்றாமல் இப்பொழுது அரசியல் அதாயதிற்கு தான் இந்த ஏமாற்று வேலை. தமிழக மக்களே இனிமேலும் தயவு செய்து ஏமாறாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
06-ஆக-201212:50:02 IST Report Abuse
rajan இந்த மாநாட்டுக்கு அப்புறம் தலிவரு ராசபக்சே கிட்ட பேசி இலங்கைல ஒரு தனி ஈழம் போர்ட் மாட்டி உங்க குடும்பத்துக்குன்னு ஒரு வவுனியா எடுத்து அப்புறம் தனி ஈழம் ரியல் எஸ்டேட் தொழில் துவங்கி கொட்டோ கொட்டுன்னு பணமழை துவகுவாரு. அப்புறம் என்ன ஈழ தி மு க எனும் புது கட்சி துவங்கி கொடி எத்துவாறு தலிவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை