Ajmal Kasab was roped in 'Ops Jundal' by security agencies last year | அபு ஜுண்டாலை பிடிக்க உதவிய பயங்கரவாதி அஜ்மல் கசாப்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அபு ஜுண்டாலை பிடிக்க உதவிய பயங்கரவாதி அஜ்மல் கசாப்

Added : ஆக 05, 2012 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அபு ஜுண்டாலை பிடிக்க உதவிய பயங்கரவாதி அஜ்மல் கசாப்

மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கியகுற்றவாளி அபு ஜுண்டாலை கைது செய்ய, பயங்கரவாதி அஜ்மல் கசாப் உதவி புரிந்தது தற்போது தெரிய வந்துள்ளது.


மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி அபு ஜுண்டால், தன் பெயரை ரியாசத் அலி என கூறினார். அவன் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருப்பதாகவும், கராச்சியில் வழங்கப்பட்ட தனி நபர் அடையாள அட்டை வைத்து இருப்பதுவும் தெரியவந்தது.


புகைப்படம்: இதையடுத்து, கைதானது அபு ஜுண்டால் தான் என்பதை உறுதி செய்ய, மும்பை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிடம், சவுதி அரேபிய அரசு அனுப்பிய அபு ஜுண்டாலின் புகைப்படத்தை, மும்பை போலீசார் காண்பித்து, அவன் யார் எனக் கேட்டனர். அந்தப் படத்தைப் பார்த்த கசாப்பால், அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் பின், அபு ஜுண்டாலின் தந்தையிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, டி.என்.ஏ., சோதனை நடத்தப்பட்டது. அந்தசோதனையின் அறிக்கையும், சவுதியில் அபுஜுண்டாலிடம் நடத்தப்பட்ட டி.என்.ஏ., சோதனை அறிக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. அதில், கைதானவன் அபுஜுண்டால் தான் என்பது உறுதியானது.


அடையாளம் காண்பித்தான்: டி.என்.ஏ., சோதனை மூலம் அபு ஜுண்டாலின் அடையாளம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சவுதி அரேபிய நிர்வாகத்தினர், அவனின் புதிய புகைப்படம் ஒன்றை, இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் படத்தை கசாப்பிடம் காண்பித்த போது, அவன் உடனே அபு ஜுண்டாலை அடையாளம் கண்டு கொண்டான். படத்தில் இருப்பது அபு ஜுண்டால் தான் என்பதை உறுதி செய்ததோடு, கொஞ்சம் உடம்பு பெருத்திருப்பதாகவும் கூறினான். பின், சவுதி அரேபிய நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அபு ஜுண்டால் கைது செய்யப்பட்டான்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hameed - riyadh,சவுதி அரேபியா
06-ஆக-201213:16:07 IST Report Abuse
hameed நாட்டுக்கு துரோகம் பண்றவன நாய்போல சுடனும்.........
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
06-ஆக-201213:08:39 IST Report Abuse
villupuram jeevithan இதே போல் ராசா உதவுவாரா?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
06-ஆக-201208:44:24 IST Report Abuse
villupuram jeevithan எலிப் பொறி வடையா இவன்?
Rate this:
Share this comment
Cancel
Krish - India,சிங்கப்பூர்
06-ஆக-201207:55:24 IST Report Abuse
Krish அப்போ பிரியாணி போட்டது வோர்த்னு சொல்லுங்க. வாழ்க பிரியாணி, வளர்க வறுவல்.. இந்த மாதிரி அதிசயம் எல்லாம் இந்தியாவில் மட்டும்தான்.
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
06-ஆக-201204:45:15 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை தப்பு செஞ்ச அஜ்மல் கசாப் திருந்தி இந்திய அரசாங்கத்துக்கு நல்லது செய்ய ஆரம்பிச்சுட்டான் , அண்ணா ஹசாறேவும் தொந்தரவு கொடுக்காம சீக்கிரம் திருந்தினா நல்லா இருக்கும்
Rate this:
Share this comment
kalan - chennai,இந்தியா
06-ஆக-201209:58:52 IST Report Abuse
kalanகபட நாடகம் ஆடிஊரை கொள்ளை அடித்தவர்களுக்கு அன்னா ஹஸாரே பார்த்து பயம். ஊழல் கண்டிப்பாக ஒழிக்கப்படும்....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
06-ஆக-201204:03:57 IST Report Abuse
Kasimani Baskaran நல்ல வேலை அடையாளம் காட்டியதற்காக கசாப்க்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
06-ஆக-201203:38:24 IST Report Abuse
மதுரை விருமாண்டி கசாப்புக்கு கொடுத்த பிரியாணிக்கு அவன் நன்றியோடு செயல்பட்டிருக்கிறான்.. இங்கே உள்ளேயே இருந்து நாட்டை சூறையாடுபவர்களை விட இவன் நல்லவன் ஆகி விடுவான் போல இருக்கு.. இவனால் உயிர் விட்ட அப்பாவிகள் ஐம்பது பேர் தான்.. ஆனால் நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளின் கையாலாகாத திட்டங்களாலும், பல லட்சம்கோடி ரூபாய் ஊழல்களாலும் உயிரிழக்கும் இந்தியர்கள் ஆயிரக்கணக்கான பேர்.. நமது கேடு கெட்ட அரசியல்வாதிகளை விட இவன் நல்லவனாகி விடுவான் போலிருக்கே..
Rate this:
Share this comment
Cancel
Jai - ,கனடா
06-ஆக-201200:48:50 IST Report Abuse
Jai தினம் பிரியாணி கிடப்பதால், அபு ஜிந்தாலும் பெருதிருப்பார், கசாபும் பெருத்து இருப்பார். நடக்கட்டும். ரெண்டு பேரையும் ஜிம்மில் சேர்த்து விட்டால், கொஞ்சம் ட்ரிம்மாக இருந்து, அடுத்து இந்தியாவிற்கு என்ன நன்மை செய்யலாம் என்று, யோசிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை