Don't ask about Nithyananda: Madurai Adheenam | நித்யானந்தா குறித்து கேள்வி வேண்டாம்: மதுரை ஆதீனம் சலிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நித்யானந்தா குறித்து கேள்வி வேண்டாம்: மதுரை ஆதீனம் சலிப்பு

Updated : ஆக 07, 2012 | Added : ஆக 05, 2012 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருத்துறைப்பூண்டி: ""நித்யானந்தா குறித்து பதில் கூறி சலித்து விட்டது. எனவே, அவர் குறித்து கேள்விகள் கேட்க வேண்டாம்,'' என, நிருபர்களிடமிருந்து மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நழுவினார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கச்சனம் கைக்கிணேஸ்வரர் கோவிலுக்கு, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நேற்று வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி: வட இந்திய புனித யாத்திரைக்குச் செல்லும் இந்துக்களுக்கு, மாநில அரசு சலுகைகள் அறிவித்துள்ளதை பாராட்டுகிறோம். கோவில் சன்னிதானத்தில் ஏழை, பணக்காரன், நடுத்தர வர்க்கம் என்னும் பாகுபாடு இல்லை. ஆனால், "தரிசனக் கட்டணம்' என்னும் பெயரில் வசூல் செய்வதை, அரசு ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும், காலத்தோடு மழையும் பெய்யாத நிலையில், வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அன்று திருவையாறில், திருஞானசம்பந்தர் மழை பெய்வதற்காக பதிகம் பாடியுள்ளார். அப்பதிகத்தை பாடி, கூட்டு வழிபாடு நடத்தினால் மழை பொழியும். இவ்வாறு அவர் கூறினார்.

"மயிலாடுதுறையில் இருக்கும் தர்மபுரம் ஆதீனத்தை, ஏன் நீங்கள் சென்று நேரில் சந்திக்கவில்லை?' என, நிருபர்கள் கேட்டதற்கு, "மே 5ம் தேதி அவரை, நான் சந்திக்க அனுமதி கொடுத்தார். ஆனால், நித்யானந்தாவுடன் வந்தால் அனுமதியில்லை என மறுத்ததால் சந்திக்கவில்லை. காலம், நேரம் வரும்போது, நல்ல செய்தியை கூறுவேன்' என்றார். "நித்யானந்தா குறித்த உங்களின் நிலைப்பாட்டில் வேறு ஏதேனும் மாற்றம் உண்டா?' என, மீண்டும் மீண்டும் நிருபர்கள் கேட்டதற்கு, "இது குறித்து பதில் கூறியே சலித்து விட்டது. அது குறித்து எதுவும் கேள்விகள் கேட்க வேண்டாம்' என, பதில் அளித்து, முற்றுப்புள்ளி வைத்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pullatpandi - uae,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஆக-201214:27:21 IST Report Abuse
pullatpandi அப்பு எனக்கு ஒரு CD வேணும் சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க, ரொம்ப நாளாச்சு..................
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
06-ஆக-201213:12:50 IST Report Abuse
rajan உங்களை போலுள்ள ஜீவன்களை படைத்த அந்த கடவுளை நீங்கள் மன்னிப்பேராக உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும்
Rate this:
Share this comment
Cancel
hameed - riyadh,சவுதி அரேபியா
06-ஆக-201213:08:39 IST Report Abuse
hameed பன்னிகுட்டியோட சேர்ந்த கன்னுக்குட்டி போல ......................... திருஞானசம்பந்தர் புகழ் பாடிய வாய் இப்படி ஆச்சே........
Rate this:
Share this comment
Cancel
06-ஆக-201212:49:16 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் அருணா..நித்தி . அடேய் யாத்திரையில் என்ன பார்த்தே.(பதில்) நித்தி வேறென்ன மலைமுகடு,, பள்ளத்தாக்கு,etc அருணா: அப்போ சாமி தரிசனம்...? நித்தி சாமி தரிசனமெல்லாம் உங்களுக்கு இளைஞன் எனக்கோ தேவி தரிசனமே போதும்.
Rate this:
Share this comment
Cancel
jayan - Salem,இந்தியா
06-ஆக-201212:12:08 IST Report Abuse
jayan சலிப்பு ஏன்னு தெரியலையா ரஞ்சிதா இல்லாததால்
Rate this:
Share this comment
Cancel
அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா
06-ஆக-201210:59:22 IST Report Abuse
அன்வர்-ஹல்வானி பிடதி ஆசிரமத்தில் இளம்பெண்களுடன் ஆடிப்பாடினோம். மிகவும் நன்றாக இருந்தது, சந்தோஷமாக இருந்தது. மனிதன் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்.. நித்தி ரொம்ப நல்லவர். அவர் ஆன்மீகவாதி மட்டுமல்ல ஆள் பலமிக்க வாதி,, ஆதினத்திற்கு அவர் தான் பொருத்தமானவர் என்று நான் புரிந்துகொண்டதோடு சிவனே என் கனவில் வந்து அவரை கைகாட்டி விட்டு போனார்.. அன்று.... அவன் நாசமா போவ, என்னமா என்ன கட்டம் கட்டிட்டு அவளை கொத்திட்டு போய்ட்டான். அவன் உருப்படவே மாட்டான். என்னோட சாபம் சும்மா விடாது.. நான் எவ்வளவோ சொன்னேன், போறா இருந்தா நீ மட்டும் போ. அவளை கொண்டு வந்து என்னோட கஸ்டடி இல விட்டுட்டு, இல்லாட்டி ஒன்னோட நானும் வாறேன், அவளையும் கூட்டிட்டு போவோம்.. ம்ஹூம் மசியழியே பாவி.. இப்ப பாருங்க இந்த பத்திரிக்க காராலாம் என்னமா கேள்வி கேக்கறா. எனக்கு கோவம் கோவமா வருது... நித்திய பத்தி சுத்தி சுத்தி என்னிடம் கேள்வி கேக்காத ஓய்... இன்று... ரொம்ப படுத்துரானுங்கடா...
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
06-ஆக-201215:32:20 IST Report Abuse
Kasimani Baskaran"நித்திய பத்தி சுத்தி சுத்தி என்னிடம் கேள்வி கேக்காத ஓய்" - சூப்பர்......
Rate this:
Share this comment
Cancel
Suganya - chennai,இந்தியா
06-ஆக-201210:47:25 IST Report Abuse
Suganya இன்னும்மா இந்த அருணகிரி நித்தி மேல் நம்பிக்கை வைத்துள்ளார்? துறவிகள் என்றாலே எளிமையின் சின்னமாக விளங்க வேண்டும். இந்த இருவருமே உடல் முழுதும் ஆபரணங்கள் மற்றும் பயன்படுத்தும் நவீனரக கார் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் பார்க்கும் பொது துறவறம் பூண்டதற்குரிய அடையாளமே இல்லை. இதில் ஒரு படி மேல போனது நித்திதான். சுத்தி எத்தனை பணிப்பெண்கள் சீடர்கள் என்ற பெயரில்? இவர்களை பார்க்கும் பொது அன்றாடம் மக்கள் படும் பாடுதான் கண்ணில் நிற்கிறது. தங்கள் தேவை குழந்தையின் தேவை சமுதாய இன்னல்கள் அனைத்தையும் தாண்டி தங்கள் முதுமைக்கு என அவர்கள் சேமிக்க படும் இன்னல்கள் எத்தனை? ஆனால் இந்த காவி பட்டுக்கரை வேஷ்டி ஆசாமிகள் அனுபவிக்கும் சுகபோகங்கள் என்ன? ஒப்பிட்டு பார்த்தால் நடவடிக்கை எடுக்காத அரசாங்கத்தின் மீதும் இதையெல்லாம் தட்டி கேட்க்க துணிவில்லாமல் இருக்கும் மக்களாகிய நம்மீதும் வேதனை உண்டாகிறது. அப்படியென்ன இவர்கள் இறைவனுக்கு தொண்டு செய்து கிழித்து விட்டார்கள்? கோவில்கள் அனைத்தும் பொதுமக்களும் அரசாங்கமும் பராமரிக்க வேண்டிய போதுசொத்து. இதை இவர்களை போன்ற கயவர்கள் மட்டும் அனுபவிப்பதில் ஞாயம் இல்லை. படித்த ஹிந்துக்களுக்கு இது போன்ற கோவில் பணிகளை அரசாங்க வேலையாகவே தரலாம். வேதமும் தமிழும் முறைப்படி கற்றவர்களுக்கு தேர்வு வைத்து முறைப்படி வென்றவர்களை பணியில் அமர்த்த வேண்டும். சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பையும் முறையாக ஹிந்துக்களே அரசாங்கத்தின் மேற்பார்வையில் செய்ய வேண்டும். அதில் வரும் பணத்தை வாழ வழியில்லாத ஹிந்துக்களுக்கு உதவ உபயோகபடுத்த வேண்டும். இதே போல ஒவ்வொரு மதத்தினரும் தங்களின் புனிதத்தை பாதுகாத்து தங்கள் இனத்தவர்களுக்கும் மதத்தவர்களுக்கும் உதவி செய்யலாம். இது சட்டமானால் நிச்சயம் வேண்டாத சடங்கு அறிவுகெட்ட மூடநம்பிக்கை சித்து விளையாட்டு அனைத்தும் ஒழியும்.
Rate this:
Share this comment
Cancel
Sara Vanan - Rajapalaiyam,இந்தியா
06-ஆக-201210:46:46 IST Report Abuse
Sara Vanan கோவில் சொத்துகளை எல்லாம் அரசு கைப்பற்றி இந்த மாதிரி சாமியார்களை ஓட ஓட வெரட்டனும் .
Rate this:
Share this comment
Cancel
"Karuthu" KANDASAMY - Singapore,சிங்கப்பூர்
06-ஆக-201209:44:05 IST Report Abuse
அட போங்கப்பு. சும்மா சும்மா நித்தியானந்தாவை பற்றி கேட்டா, எனக்கே தெரியாம ஏதாவது உளறிகொட்டிரபோறேன்...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-ஆக-201209:34:09 IST Report Abuse
Nallavan Nallavan என்னவோ ஏமாற்றம் இவருக்கு அது என்ன-ன்னுதான் புரியலை
Rate this:
Share this comment
moorthi ihtroom - tirupur,இந்தியா
06-ஆக-201213:49:06 IST Report Abuse
moorthi ihtroomவீரபாகு , கணபதி ஐயர் டீலிங் வொர்க் அவுட் ஆகலைன்னு நினைக்கிறேன் ,பேkகரியையும் , ...............யும் நித்தியே வச்சுகிட்டார் . அதனால் இவர் ரொம்ப மூட் அப்செட் ஆகிட்டார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை