அணுஆயுதம் இல்லா உலகம் வருமா: இன்று ஹிரோஷிமா நினைவு தினம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதுவே உலகின் முதலும், கடைசியுமான அணுகுண்டு தாக்குதல். இந்த தாக்குதல்களால், இரண்டாம் உலகப்போர், முடிவுக்கு வந்தது.


அணுகுண்டின் ஆரம்பம்: இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா மீது 1945, ஆக., 6ம் தேதி, அமெரிக்கா, அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. “லிட்டில் பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த அமெரிக்க விமானம், ஹிரோஷிமா மையப் பகுதியில், அணுகுண்டை வீசியது. இது 4 சதுர மைல் அளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர். 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதில் இறந்தனர். கதிர்வீச்சால், பல்லாயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர் (இதன் பாதிப்பு இன்னும் தொடர்கிறது). குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து, அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். (அணுகுண்டை சோதித்து பார்க்க, இதை அமெரிக்கா செய்தது எனவும் கூறப்படுகிறது) இதன் பிறகே, ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது, உலக நாடுகளுக்கு தெரியவந்தது.


மீண்டும் தாக்குதல்: மூன்று நாட்கள் கழித்து ஆக., 9ல், ஜப்பானின் நாகசாகி நகரின் மீது "பேட் மேன்' என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது. இந்த தாக்குதல்களால் இரண்டு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. கதிர்வீச்சால் இறந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. ஆறு நாட்கள் கழித்து, 1945 ஆக., 15ம் தேதி, சரணடைவதாக ஜப்பான் ஒப்புக்கொண்டது. அத்துடன் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. தற்போது இந்த நகரங்கள், அந்த சுவடே தெரியாத அளவு பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்தது, அந்நாட்டின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.


மக்கள் எதிர்பார்ப்பது: அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா ஆகிய நாடுகள் அணுகுண்டு சோதனை நடத்தி, அணு ஆயுத நாடுகளாக காட்டியுள்ளன. இதைத்தவிர இஸ்ரேல் மற்றும் ஈரானும் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக அமெரிகக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஜப்பான் அழிவிற்கு பின், அணுகுண்டு தாக்குதல் உலகின் எந்த மூலையிலும் நிகழவில்லை என்பது வரவேற்கத்தக்க விஷயம். மக்கள் எதிர்பார்ப்பது, அணு ஆயுதம் இல்லாத உலகைத் தான்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
06-ஆக-201207:21:50 IST Report Abuse
g.s,rajan Japan is the best example how a country should be,It is a Marvellous development. Quality always persists. g.s.rajan,chennai.
Rate this:
Share this comment
Cancel
Vijayan Durai - chennai,இந்தியா
06-ஆக-201207:00:05 IST Report Abuse
Vijayan Durai லிட்டில் பாய் அனுகுண்டின் எடை: 9,700 pounds (4,400 kg)[source: ://en.wikipedia.org/wiki/Little_Boy]
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

ஏப்ரல் 30,2017