சென்னை: "டெசோ மாõநாடு பற்றி இலங்கை அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள தவறான பிரசாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, உலகத் தமிழர்களோ நம்ப வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கையின் விவரம் வருமாறு: இலங்கை அரசின் சார்பில், கடந்த, 6ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரான விஷயம் என்றும், இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கையர் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், இந்த மாநாட்டை இலங்கை அரசு வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் சார்பில் ஊடகத்துறை அமைச்சர் ஒருவர், "இந்த மாநாட்டில் பங்கேற்போர் மீது, அரசு கவனம் செலுத்தி வருகிறது' என கூறியிருப்பதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன. இலங்கை அரசின் அறிக்கையும், இலங்கை அமைச்சர் கூறியிருப்பதும் கற்பனையான குற்றச்சாட்டுகள். இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்காகத்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது கவலையைத் தருகிறது.
இலங்கைத் தமிழர் நலன் பேணும் முயற்சிகளை இம்மாநாடு முன்னெடுத்துச் செல்லும். அதற்காவே இந்த டெசோ மாநாடு நடைபெறுகிறது. இலங்கை அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள இந்தத் தவறான பிரசாரத்தை, இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, உலகத் தமிழர்களோ நம்ப வேண்டாம். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கருணாநிதி இலங்கை பிரச்சனையில் சில தவறுகள் செய்து இருக்கலாம் (உண்ணாவிரதம், மனித சங்கிலி போராட்டம், ராஜினாமா கடித நாடகம் என்று) அதுக்கு காரணம் தமிழக அரசியல் நிலை தான், இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிடும் அதிகாரம் கருணாநிதிக்கு இல்லை, மத்திய அரசும் நேரடியாக இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது, மேலும் சிங்களவர்களும் நாங்களும் சகோதரர்கள் இதில் மூன்றாம் நாடான இந்தியா எங்களுக்குள் நடக்கும் சண்டையில் தலையிட கூடாது என்று புலிகள் சொல்லியுள்ளனர் (இந்திய அமைதிப்படை காலத்தில்), மேலும் புலிகளுக்கு அமைதியான முறையில் பிரச்சனையை தீர்பதற்கு சந்தர்ப்பங்கள் பல கிடைத்தது ஆனால் அதை குருட்டு தனமான வெறுப்பினால் புலிகள் தவற விட்டனர். ஐக்கிய நாடு சபை, போர் சமயத்தில், புலிகளை போரை நிப்பாட்டிவிட்டு பேச்சு வார்த்தைக்கு வரும்படி பல முறை சொல்லியும் புலிகள் கேட்கவில்லை, எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அமைதிப்படை காலத்தில் இருந்து இந்திய எதிர்ப்பை கடைப்பிடித்து வரும் புலிகள் போரில் தோர்ப்போம் என்று தெரிந்தவுடன் இந்தியா உதவ வேண்டும் தொப்புள் கோடி உறவு அது இது என்று சொன்னால் எப்படி உதவுவார்கள். அமெரிக்காவின் ஜனாதிபதியை கொன்று விட்டு அந்த நாட்டின் உதவியை யாரவுது வாங்க முடியும்மா, ராஜீவ் காந்தியை இறக்கம் இல்லாமல் கொன்று விட்டு (அவரின் மனைவியிடமே) இந்தியா உதவ வேண்டும் என்று சொல்லுவது எப்படி நியாமாகும், ஐக்கிய நாடு சபை அறிக்கையின் படி புலிகள் போர் களத்தில் சொந்த மக்களை கேடயமாக பயன்டுத்தி கொன்று உள்ளனர் ஆனால் கருணாநிதியை இவ்வுளவு விமர்சிப்பவர்கள் புலிகளின் இந்த பாவத்தை யாரவுது ஒரு ஆள் விமர்சனம் செய்து இருக்கிறிர்களா ? கேட்டால் இதை ஐக்கிய நாடு சபையின் பொய் குற்றச்சாட்டு என்பிர்கள் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது, தீவிரவாதிகளின் பொய்களை நம்புவிர்கள் ஆனால் ஜனநாயக நாட்டின் ஒரு மூத்த அரசியல் தலைவரை அவரின் கடைசி காலத்தில் முடிந்த அளவு அவதுறு பரப்பி அவரை வேடனை படுத்துவிர்கள். தமிழ் இனம் இன்னொரு இஸ்லாமிய தீவிரவாத நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்பது நன்றகவே தெரிகிறது இதன் பாதிப்பு பல தலைமுறையை அழித்து விடும்... இன்றைய நிலையில் ஆக்கபுர்வமான சிந்தனைகளும் இலங்கை பிரச்சினைக்கு அறிவு பூர்வமான யோசனைகள் தான் வேண்டும் இலங்கை தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி போன்றவைகளை எப்படி மேம்படுத்துவது என்ற சிந்தனை வேண்டும் ஆனால் இப்போது நடப்பது மீண்டும் எப்படி போரை ஆரம்பிக்கலாம் என்ற தீய சிந்தனைகள் தான்.
ராஜபக்சே, நீ என்ன லூசாப்பா? உனக்கு இந்தியாவில் இருந்து ஒத்த எண்ணம் கொண்ட ஒரே ஒருவர் எங்கள் தலிவர் மட்டும்தான். உங்க ரெண்டு பேரோட எண்ணமும் ஒன்றே, தமிழர்களை கொன்று,சுரண்டி குடும்பத்தை வளர்க்க வேண்டும்.
இல்லை ராஜபக்சே எதுவும் சொல்லாமலே, கலைஜர் புப்ளிசிட்டிக்காக இப்படி சீனை போடுறாரோ? அப்பதான் மக்கள் டெசோ உண்மையாலுமே தமிழ் ஈழத்துக்குதான் என்று நினைப்பார்கள் என்று ? தலிவா கலக்கீடிங்க. ரொம்ப சாக்கிரதைய இருக்க நானே நம்பிட்டேன்ன பார்த்துகோங்களேன்.
டெசோ வுக்கு தி.மு.க காரர்களிடையே கூட மதிப்பு இல்லாமல் போனதால் தலைவரே இலங்கையிலிருக்கும் நண்பர்களின் மூலம் இந்த மாநாட்டினை தமிழர்களுக்கு முக்கியமானது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி , அந்த முக்கியமான மாநாட்டை நடத்திய பெருமையின் மூலம் , 2 G மூலம் சரிந்திருக்கும் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயல்கிறாரோ என்று நினைக்க தோன்றுகிறது ......
ஏண்டி அருக்காணி சாதாரணமா நான் ஒரு மொக்க ஜோக்கு சொன்னாலே கெக்க பிக்க..கெக்க பிக்கன்னு சிரிப்பியே இப்ப நம்ம பெரியவர் இம்மா பெரிய சோக்கு அடிச்சி இருக்காரு கொஞ்சம் கூட சிரிக்காம குத்து கல்லு மாறி இருக்கியே என்னடி ஆச்சி உனக்கு...அட போங்க மாமா,பெரியவர் வாய தொறந்தாலே வயிறு பத்தி கிட்டு எறியுது இதுல எங்க இருந்து சிரிக்கிறது அவருக்கு தான் வேள இல்ல ஏதோ காமெடிங்கற பேர்ல கடுப்ப கெளப்புறாரு நீங்க அதுக்கு மேல இருக்கிங்களே.வாங்க வந்து கஞ்சிய குடிச்சிட்டு உருப்புடுற வழிய பாருங்க...நன்றி ராம்
தலைவர் வசமாக மாட்டிக்கொண்டார்..... ஈழ பிரச்னையை வைத்து இழந்த அரசியல் செல்வாக்கை மீட்கலாம் என நினைத்தவருக்கு இடி மேல் இடி, அடி மேல் அடி, இவரோ பல்டி மேல் பல்டி..... சமயத்திற்கு தகுந்தார் போல் நன்றாக நாடகமாடி பல்டி அடித்து வருகிறார்.... என்னதான், மாநாடு, மருந்து, அது இது என ஊரை ஏமாற்றினாலும் காங்கிரசுக்கும் ராஜபக்க்ஷேவிற்கும் கைகட்டி வாய் பொத்தி இவர் பதில் சொல்லியாக வேண்டும், ஏனென்றால் இவர் காங்கிரசுடன் கூட்டணி.... காங்கிரஸ் கட்சி ராஜபக்க்ஷேவிடம் கூட்டணி....... இது பற்றி தலைவரிடம் கேட்டால் கசப்புடன் நீடிக்கிறோம் என பசப்புடன் கூறுவார்.....
ஹல்லோ காமெடி பீஸ் என்ன சார் உங்களோட பெரிய ரோதனையா போச்சி, சண்டை முடிஞ்சி அவனுகலே ஏதோ மக்களுக்கு குடுக்கலாம் அப்பிடின்னு நினைச்சா , நீங்க இப்படி அப்பிடின்னு பேசியே கெடுத்துடுவீங்க போல. சார் நல்ல வேலையா இருந்தா பாருங்க, பேசாம உங்க அல்லகை மரிய குட பேசி காலத்த நகர்த்துங்க . சத்தியமா மனசார சொல்றான் உங்களோட உதவிய யாரும் எதிர்பார்கள போதும் இப்ப தான் கஷ்டப்பட்டு எல்லாம் ஒருவழியா ஒருவேளை சாப்பாடு சாபுட்ராங்க . இங்க உட்கார்துகிட்டே அதையும் கெடுதுராதீங்க. உங்களுக்கு யாராவது எதிர்கனமுன்னா , நித்தியானந்தாவ விடாதீங்க. ப்ளீஸ் எங்களை வாழ விடுங்க
கலைஞர் ஒன்னும் தெரியாதவர் இல்லை..நம் தான் வடி கட்டின முட்டாள்கள் .. அமைதி படை திரை படத்தில் வரும் அரசியல்வாதி கதா பாத்திரத்துக்கு பொறுத்த மானவர் இவர்..இந்த மாநாட்டு மூலமாக பல காய்களை அடிக்க பயன் படுத்து கிறார் .. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்..நிச்சயமாக அது சாத்தியமில்லை...நிச்சயமாக காங்கிரஸ் இன் மறைமுக ஆதரவு உண்டு...அதற்காகத்தான் இவர் பல் வேறு விதமாக பல்டி அடிக்கிறார் ..முதலாவது - ஸ்பெக்ட்ரம் வழக்கு அவர் நினைத்தபடி நகர ஆரம்பித்து விட்டது..மக்களையும் பத்திரிகையும் திசை திருப்ப எடுத்த துருப்பு சீட்டு இதுவே..இரண்டாவது) அடுத்த பாராளுமன்ற தேர்தலை நிச்சயமாக காங்கிரஸ் உடன் தான் கூட்டணி அமைப்பார் அதற்கு தேவை இந்த மாநாட்டில் அவருக்கு கிடைக்க உள்ள வரவேற்பு ....இன்னும் பல...கடைசியாக) இதுவே இன்று உள்ள சூழ்நிலையில் மானம் கெட்ட அரசியல் நடத்த தி மு க விடம் உள்ள கடைசி பிரம்மாஸ்திரம் .... கலைஞர் போன்ற திறமையான மனிதர் இங்கு எவரும் இந்த கால கட்டத்தில் இல்லை என்று நிச்சயமாக சொல்லுவேன் ...அவரின் சிந்தனை மட்டும் சுய நலம் இல்லாமல் இருந்து இருந்தால் ...நிச்சயமாக தமிழனின் சிறப்பை உலகம் அறிந்து இருக்கும்...இறைவா என் மக்களை நலமுடன் வைக்க அருள்வாயாக..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.