சென்னை: பள்ளி பேருந்து ஓட்டை வழியே சிறுமி விழுந்து பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, பள்ளியின் தாளாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளரின் ஜாமின் மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னை, தாம்பரம் சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் குலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த மாணவி ஸ்ருதி, கடந்த மாதம் 27ம் தேதி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து, உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானாள்.
ஜாமினுக்கு எதிர்ப்பு: இதையடுத்து, பேருந்து ஓட்டுனர் சீமான், கான்ட்ராக்டர் யோகேஷ், பள்ளி தாளாளர் விஜயன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தாளாளர் விஜயன், ஆய்வாளர் ராஜசேகரனின் ஜாமின் மனுக்களை, செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்களை, நீதிபதி அக்பர் அலி விசாரித்தார். ஜாமின் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அட்வகேட் - ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் வாதாடினர்.
நீதிபதி அக்பர்அலி பிறப்பித்த உத்தரவு: வழக்கு டைரியில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கும் போது, ஏழு வயது சிறுமி விழும் அளவுக்கு, பெரிய அளவில் ஓட்டை உள்ளது தெரிகிறது. ஓட்டையின் முனைகளும், மேற்பரப்பும், பலகையால் மூடப்பட்டுள்ளது. பேருந்து நகரும் போது, அந்தப் பலகையும் நகர்ந்துள்ளதால், அந்த ஓட்டை வழியாக, சிறுமி கீழே விழுந்துஉள்ளார்.
உரிமையாளர் பொறுப்பு: அந்த பேருந்தில் பயணித்த இரண்டு பெற்றோர், ஓட்டைப் பற்றி, ஓட்டுனர், கிளீனர் மற்றும் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். எனவே, இதுகுறித்து தங்களுக்கு தெரியாது என, மனுதாரர்கள் கூற முடியாது. வாகன உரிமையாளர் என்ற முறையில், அந்த வாகனத்தை முறையாக பராமரிப்பதும், பஸ்சில் பயணிக்கும் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பராமரிப்பதும், அவரது பொறுப்பு. ஓட்டை பற்றி கவனித்தும், அந்த ஓட்டையை அப்படியே விட்டுள்ளனர். பேருந்தில் ஓட்டை இருப்பதை கவனிக்கவில்லை என, மோட்டார் வாகன ஆய்வாளர் கூறுவது பொய். ஓட்டையை பலகையால் அடைத்திருப்பதை பார்த்து, அதை புறக்கணித்திருக்க வேண்டும் அல்லது அந்தப் பேருந்தை ஆய்வு செய்யாமல் இருந்திருக்க வேண்டும்.
யார் மீது குற்றம்? இதன்மூலம், அந்த பேருந்தில் பயணிப்பதன் மூலம், உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படக் கூடும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். எனவே, மனுதாரர்கள் இருவருக்கும், அஜாக்கிரதை மற்றும் அந்த செயலால் உயிரிழப்பு ஏற்படும் எனத் தெரிந்துள்ளது என்பதால், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304(2) பொருந்தும். மனுதாரர்கள் வசதி படைத்தவர்கள்; செல்வாக்கு உள்ளவர்கள். சாட்சிகளை கலைக்கக் கூடும் எனக் கருதுவதற்கு காரணம் உள்ளது. குற்றத்தின் கடுமையைப் பார்க்கும் போது, எந்த தவறும் செய்யாத ஏழு வயது அப்பாவி குழந்தை உயிரிழந்துள்ளார் என்பதால், அதற்கு யார் மீது குற்றம் சொல்வது? பேருந்தில் இருந்த ஓட்டை மூலம் இறப்பு நேரிடும் என்பதை தெரிந்தவர்கள் மீது தான், குற்றம் சொல்ல முடியும்.
மனு தள்ளுபடி: மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு குழந்தை திரும்பிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் கனவுகள், அதன் பெற்றோரின் கனவுகள், நீர்க்குமிழி போல் உடைந்து விட்டது. சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற குழந்தைகளும், பொது மக்களும், அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்க மாட்டார்கள். குற்றத்தின் தன்மை இந்த அளவுக்கு கடுமையாக இருக்கும் போது, தாங்கள் அப்பாவி என, மனுதாரர்கள் கோர முடியுமா? அதற்கு விடை, "இல்லை' என்பது தான். எனவே, இந்தக் கட்டத்தில் மனுதாரர்கள் நிவாரணம் பெற உரிமை இல்லை. ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி அக்பர்அலி உத்தரவிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
என் பிள்ளை இந்த பள்ளிக்கூடத்தில் தான் படிக்கிறான் . கட்டணம் மிக குறைவு. தாளாளர் திரு விஜயன் மிகவும் அன்பானவர். முகம் கூட சுளிக்கமட்டார். கடந்த பாத்து வருடங்களாக நூறு சதவிகிதம் தேர்ச்சி. அவருக்கு அறுவது வயது எப்படி ஐம்பது பேருந்துகளிலும் ஏறி சோதனை செய்யமுடியும். வட்டார போக்குவரத்தில் கொடுத்த சான்றிதழை பார்த்து மட்டுமே அவர் செயல் பட முடியும். அனைத்து பேருந்துகளிலும் எப்படி அவர் பார்க்கமுடியும் அதற்காகதான் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. அவர்கள் வேலையை நேர்மையாக செய்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா. இதை அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும். பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் இரண்டாவது குற்றவாளி. இதை நீதிபதி சிந்திக்கவேண்டும்.
தவறு செய்தவர்களை ஜாமீனில் விடுவிக்க மறுத்து தீர்ப்பு அளித்தது குறித்து நீதிபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்ளுகிறேன். மற்றும் இந்த வழக்கில் இனிமேலும் இதுபோல தவறு நடக்காமல் தவிர்ப்பதற்காக குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டவனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களுடைய குழந்தையை திருப்பி கொடுக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் இழப்பீட்டு தொகையையாவது உரிய நேரத்தில் கிடைக்க வழி செய்வது நல்லது.. குற்றவாளிகளுக்கான தண்டனை இனிமேலும் இதுபோல தவறு நடக்காமல் தடுக்கும் வகையில் கடுமையாக இருக்க வேடியது மிக மிக அவசியம்....
பூபாலன், அபுதாபி.
இவனுங்கள எழுந்திருக்க எழுந்திருக்க அடிக்க வேண்டும்...15 வருஷம் ஜெயில போடணும்...வேலை இல்லை, சம்பளம் இல்லை, PF இல்லை என்று விரட்ட வேண்டும்...சுருக்கமாக சொன்னால் Citizen படத்துல அஜித் கேக்குற "குடியுரிமை பறிப்பு" இவர்களுக்கு தரவேண்டும்,....இனிமேலாச்சும் இப்படி நடக்காமல் இருக்க உண்டு கொழுத்த, பிடுங்கி தின்னும் அதிகாரிகளை கவனிக்க வேண்டும்.........
Parents , do not think studying in big school will make your little ones life brighter. Try to put our child in an school near your reach and sp moor time with child and make them understand the importance of the moral values. An moral good child will excel in the life in any platform. Just for the name of the school and hi-fi living we the people are ing child hood .
எத்தனை கும்பகோணம் சம்பவங்கள்? எத்தனை பள்ளி குழந்தைகள் கசக்கி பிழிந்து தள்ளப்படுகின்றன? மீண்டும் மீண்டும் குற்றம் நடக்கின்றன ஆனால் குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் திரிகின்றனர்ஒரு முறையேனும் கடும் தண்டனை விதிக்க படுகிறதா? இல்லவே இல்லை தினமலர்க்கு ஒர் கோரிக்கை நாங்கள் கூறும் இந்த கருத்துக்கள் சும்மா போட வேண்டும் என்ற நோக்கத்துடன் இங்கு பதிவு செய்யப்படுவதில்லை.எங்களால் முடிந்த தகவல்களை இங்கு பதிவு செய்கிறோம். அதற்க்கான தீர்வினை எதிர்பார்க்கிறோம். இந்த வாசகர் கருத்துக்கள் எல்லாவற்றையும் நீதி மன்றம் மக்களின் சாட்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கருத்துக்களை எதன் மூலமாகவேனும் நீதி மன்றத்திற்கு செலுத்தி மக்களின் கருத்துக்களை அவர்கள் பரிசீலிக்குமாறு வேண்டி இந்த குற்றத்திற்கான காரணிகளை கண்டு பிடித்து தண்டனையை விரைவில் தர ஆவன செய்யவேண்டும். செய்யும் என எதிர்பார்க்கிறோம் ஒரு முறையேனும் நீதி ஜெயிக்கட்டும்
அப்படியே சேர்த்து எங்க ஊர் மந்திரி செந்தில் பாலாஜியையும் போடுங்கள். அந்த தாம்பரம் ஆர்.டி.ஓவை காப்பாற்ற கடுமையான முயர்சிகள் எடுத்து கொண்டார் என்று செய்தி வருகிறது. இவர் செய்யும் தகுதி உள்ளவர். மணல் கொள்ளையை தடுத்த ஆர்.டி.ஓ சங்கீதாவை மாற்றியவர். ஜெயித்தவுடன் செந்தில் பாலாஜி ஆளையே காணாம். தோத்துப்போனாலும் அந்த பொண்ணு ஜோதி மணியை பார்க்க முடியும். பி.எஸ்.ஐ -3 விதி முறைகளில் உள்ள நடைமுறை சிக்கலில் உதவியது ஜோதி மணிதான். சொந்த ஊரில் உள்ள பஸ் பாடி கட்டும் தொழிலை காப்பாற்ற தெரியாதவர் தமிழ் நாட்டுக்கே போக்குவரத்து மந்திரி. எப்படி உருப்படும்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.