மும்பை: "அரசியல்வாதிகளை திட்டுவதே அன்னா ஹசாரே குழுவினரின் ஒரே குறிக்கோள்' என, சிவசேனா தலைவர் பால்தாக்கரே விமர்சித்துள்ளார்.
சிவசேனா கட்சிப் பத்திரிகையான, "சாம்னா'வில் அவர் கூறியுள்ளதாவது: ஹசாரே குழுவினர், முதலில் நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சித்தனர். அந்த முயற்சியில், அவர்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றனர் என்பதை, நாடே பார்த்தது. தற்போது, ஹசாரே குழு கலைக்கப்பட்டு விட்டது. இதை அவர்கள் முன்பே செய்திருக்க வேண்டும். அரசியல்வாதிகளை திட்டுவது என்ற ஒரு அம்ச திட்டத்தைத்தான், குறிக்கோளாக கொண்டு அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஹசாரே குழுவினர் மற்றொரு வடிவில், மீண்டும் வருவார்களா என்ற கேள்வி தான் தற்போது எஞ்சியுள்ளது. ஊழலை ஒழிக்கப் போவதாக பிதற்றிக் கொண்டிருந்த ஹசாரே குழுவினர், இந்த நாட்டு மக்களுக்கு துன்பத்தைத்தான் கொடுத்துள்ளனர். இருந்தாலும், தற்போது, அந்தக் குழு கலைக்கப்பட்டதன் மூலம், தலைவலியில் இருந்து மக்கள் விடுபட்டுள்ளனர். அன்னா ஹசாரே கூட, தற்போது துன்பத்திலிருந்து விடுபட்டுள்ளார். ஹசாரே குழுவினரால், அரசியல் சட்ட அமைப்பிற்கே ஆபத்து ஏற்பட இருந்தது. இவ்வாறு தாக்கரே கூறியுள்ளார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
இந்திய அரசியல் சாசனசட்டத்தை மதிக்காத,இந்திய அரசாங்கத்திற்க்கே சவால் விடக்கூடிய மும்பை தாதாக்கள் எல்லாம் வாய் திறக்க ஆரம்பித்துவிட்டார்கள்.வாழ்க நம் ஜனநாயகம்
பாஜகவை விமர்சிக்கமால் காங்கிரசுக்கு எதிராக பேசினால் அவர் நல்லவர்... ஆனால் இப்போது பாஜகவையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிட போவோம் என்று சொன்னால், உடனே அவர் மோசமானவர்.....இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா...பாஜகவினர் இப்போது முழி பிதுங்கி நிற்பதை பார்த்தல் சிரிப்பாக தான் வருது...
அன்னா ஹஜாரே கட்சியெல்லாம் ஆரம்பிக்க மாட்டார். அதுக்கு உழைக்கணும், கை காசு செலவு செய்யணும். எவன்னோ வெளிநாட்டு ஏஜென்ட் கொடுத்த காசு தீரும் வரை கூட்டம் ( அந்த காசில் பாதியை ஆட்டையைப் ) போட்டு விட்டு, ஊர் போய் சேர்ந்துவிட்டார். இனி அடுத்த பேமென்ட் வந்தால் அடுத்து உண்ணாவிரதம் அறிவிப்பார். இருக்கிற கட்சிகளுக்கே தொண்டர்களையும், வாக்காளர்களையும் காணோம். இன்றைய இளைய தலைமுறையில், படித்தவர்கள், வேலை கிடைத்தவர்கள் எல்லாம் அரசியல், ஊழல் எதிர்ப்பு என்றெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. வேலை செய்தால் சாப்பாடு, வசதிகள் பெருக உழைக்க வேண்டும் என்று புரிந்திருக்கிறார்கள். படிக்காத, வேலை செய்ய வாய்ப்போ துப்போ இல்லாத வீணாப் போன சில இளைஞர்கள் தான் கட்சி, ரசிகர் மன்றம், ஊழல் எதிர்ப்பு என்று சுற்றுகிறார்கள். பணக்கார இளைஞர்கள் ஊழல் மற்றும் லஞ்சத்தை வளர்க்கிறார்கள், ஏனெனில் அவர்களிடம் தானே எல்லோரும் லஞ்சம் கேட்கிறார்கள். தனியார் கம்பெனி முதலாளிகளும் லஞ்சம் தராமல் இருப்பதில்லை (பிசினசில் இதெல்லாம் பார்த்தால் முடியுமா சார்- ஒரு கால் டாக்சி கம்பெனிக்காரர் கூட ஒரு மாவட்ட செயலாளருக்கு வண்டி அனுப்பினால் அவர் கட்டணம் தருவதும் இல்லை - இவர் கேட்பதும் இல்லை - "இருக்கட்டும் சார்" என்று சொல்லிவிட்டு வந்து விடுவது கூட லஞ்சம் தானே). .
மராட்டியர்களை விட்டுக் கொடுக்காத இந்த பால் லோக்பால் விஷயத்தில் மட்டும் ஆரம்பத்திலிருந்தே தெளிவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சரத்பவாருக்கு எதிராக ஹசாரே குழு விஷம் கக்கியதால் வந்த வினை. எதிரும் புதிருமாக தானும் பவாரும் இருக்கும் போது இடையிலே இன்னொன்னு எதற்காக முளைக்கனும் என்று தாக்ரே நினைப்பதில் தவறில்லை, அவரை பொறுத்த வரை.
இந்தியாவின் ஊழல்வாதிகள் அனைவரும் அவரை எதிர்க்கிறார்கள் ? அங்கே அடிச்சா இங்கே வலிக்கும். அன்னா ஊழலை ஒழிப்பதை விட எதிரிகளை மக்களுக்கு அடையலாம் காண்பிக்க இது ஒரு வழி அரசியல்வாதிகளே எச்சரிக்கை...
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.