புதுடில்லி: ""இயற்கை வளங்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்வதன் மூலம், பெரிய அளவில் ஊழல் நடப்பதை தடுக்க முடியும்,'' என, தன்னார்வ அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததை அடுத்து, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இயற்கை வளங்களை, ஏலத்தின் மூலமே, ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தொடர்பாக, ஜனாதிபதி மூலம் விளக்கம் கேட்டு, மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான ஐந்து நபர் கொண்ட, அரசியலமைப்பு பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது நல சட்ட மையம் என்ற, தன்னார்வ அமைப்பின் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் சாந்தி பூஷன் கூறியதாவது: இயற்கை வளங்களை, ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்வது தான், சிறந்தது. இதன் மூலம், பெரிய அளவில் ஊழல் நடப்பதை தடுக்க முடியும். தனியார் நிறுவனங்களுக்கு, இயற்கை வளங்களை, ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்வதன் மூலம், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். இயற்கை வளங்களை ஏலத்தின் மூலமே ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவை, ஒரு சில இயற்கை வளங்களுடன் கட்டுப்படுத்தி விடக்கூடாது. இந்த உத்தரவு, அனைத்து இயற்கை வளங்களுக்கும் பொருந்தும். ஏலத்தின் மூலம், ஒதுக்கீடு செய்வது, வெளிப்படையான நடைமுறையாக இருப்பதால், ஊழல் நடக்காமல் தடுக்க முடியும். இவ்வாறு சாந்தி பூஷன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.