Madurai Adheenam consults about removal of Nithyananda | நித்யானந்தாவை நீக்குவது குறித்து மதுரை ஆதீனம் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நித்யானந்தாவை நீக்குவது குறித்து மதுரை ஆதீனம் ஆலோசனை

Updated : ஆக 10, 2012 | Added : ஆக 08, 2012 | கருத்துகள் (48)
Advertisement

மதுரை: "மடத்தில் நித்யானந்தா சீடர்கள் மரபுப்படி நடப்பதில்லை. இதை பார்த்து நான் சும்மா இருக்க போவதில்லை,' என ஆவேசமடைந்த மதுரை ஆதீனம் அருணகிரி, நித்யானந்தாவின் கார், சீடர்களை புறக்கணித்து, தனது காரில், கஞ்சனூர் புறப்பட்டு சென்றது, தெரிய வந்துள்ளது.

நித்யானந்தாவை இளைய ஆதீனமாக அருணகிரி நியமித்தது முதலே, தொடர் சர்ச்சைகள் எழுந்தன. பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் ஏற்பட்ட பிரச்னையால், சிறைக்கு சென்று, ஜாமினில் வெளிவந்த நித்யானந்தா, மதுரை, கொடைக்கானலில் முகாமிட்டார். தற்போது கைலாச யாத்திரையில் உள்ளார்.


ஆதீனம் புறக்கணிப்பு: இவருக்கும், ஆதீனத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில், "நித்யானந்தாவுடன் ரஞ்சிதா சென்றது எனக்கு தெரியாது' என்று ஆதீனம் வேதனைப்பட்டார். நித்யானந்தா மடத்தின் கார் மற்றும் சீடர்களை புறக்கணித்துவிட்டு, தனி ஆளாக, கஞ்சனூருக்கு தனது சுமோ காரில் புறப்பட்டார். அங்கு, "மடத்தில் நித்யானந்தா சீடர்கள் மரபுப்படி நடப்பதில்லை. இதை பார்த்து நான் சும்மா இருக்க போவதில்லை' என ஆவேசமடைந்தார். மூன்று நாட்களுக்கு பின், நேற்று முன் தினம் இரவு, மதுரை மடத்திற்கு திரும்பினார்.


மடத்தைச் சேர்ந்த சிலர் கூறியதாவது: தன்னை கேட்காமல் நித்யானந்தா செயல்படுவதாக, அருணகிரி அதிருப்தி அடைந்துள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இதுவும் ஒரு காரணம். இதை அவர்கள் வெளி காட்டாமல் உள்ளனர். நித்யானந்தா இளைய ஆதீனமான பின், அவரையும், சீடர்களையும் அழைத்துக் கொண்டு, கோயில்களுக்கு செல்வதை அருணகிரி வழக்கமாக கொண்டிருந்தார். தற்போது தனி ஆளாக சென்று வந்துள்ளார். மடத்தில், நித்யானந்தா சீடர்கள் 15 பேர் இருந்த நிலையில், தற்போது அன்னதானத்தை கவனிப்பதற்காக 3 பேர் மட்டுமே உள்ளனர். நித்யானந்தாவை நீக்கலாமா என, பிற ஆதீனங்களுடன் அருணகிரி ஆலோசிக்கிறார். ஏற்கனவே, 2004ல் சுவாமிநாதன் என்பவரை இளைய ஆதீனமாக நியமித்து, சில மாதங்களில் அவரை நீக்கி அருணகிரி சர்ச்சையில் சிக்கினார். இதேபோல், "நித்யானந்தாவையும் நீக்கினால், சர்ச்சையில் சிக்க வேண்டியிருக்குமோ' என்ற மனக்குழப்பத்தில் அருணகிரி உள்ளார். இதனால், ஆறு மாதங்கள் வரை நித்யானந்தாவுக்கு "வாய்ப்பு' கொடுத்து, அதன் பிறகும் கீழ்ப்படியாமல் இருந்தால், அவரை நீக்க திட்டமிட்டுள்ளார், என்றனர்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஆக-201223:02:45 IST Report Abuse
Sivakumar Manikandan பாத்து இருங்க பெரிய ஆதினம் அருணகிரிநாதர் அவர்களே..........இளைய ஆதினம் நித்தியானந்த மடாதிபதி சட்டப் பிரகாரம் உங்க மேல நடவடிக்கை எடுக்காம இருந்தா சரி.................கடைசீல எனகளுக்கு மிச்சம் ரஞ்சிதா மட்டும் தான்........
Rate this:
Share this comment
Cancel
raj - Coimbatore,இந்தியா
09-ஆக-201222:08:04 IST Report Abuse
raj வேற வேலைய பாருங்கப்பா இந்த காவியோடோ ஒரே தொல்லே
Rate this:
Share this comment
Cancel
thamilan - tiruchi,இந்தியா
09-ஆக-201219:14:07 IST Report Abuse
thamilan எந்த சாமியார் மீது புகார்கள் இல்லை? பணம் அரசியல் பலம் வைத்து மறைத்து விடுகிறார்கள். சிலர் அதிகமாகவே மாட்டிக்கொள்கிறார்கள். மொத்தத்தில் திருடனா பார்த்து திருந்தப்போவதுமில்லை இந்த சாமியார்கள் பின்னால் போகும் மக்களும் திருந்தபோவதுமில்லை. இவர்கள் கூத்து நடந்துகொண்டுதானிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
sekar - Muscat,ஓமன்
09-ஆக-201215:03:30 IST Report Abuse
sekar நீங்க செய்றதெல்லாம் செய்வீங்க...அப்புறம் கனவுல அப்பர் சொன்னார் ஞானசம்பந்தர் சொன்னார்னு சிவபெருமானே கைலாசத்துக்கு லீவ் போட்டு வந்து சொன்னார்னு கத உடுவீங்க...கைல காசு வரலன்னு இந்தப் பேச்சு...மகனே உன்னையும் சங்கராச்சியார் மாதிரி கம்பிக்குப் பின்னால வெச்சா தான் வெளங்கும்....அதென்ன தலைல எப்பவும் அத்தன கொட்ட? ஊர எமாத்துரதுக்கு தான் இவ்ளோ வேஷம் தேவை.....ஆனா உங்களுக்குன்னு அடிக்குது பார்ரா அதிர்ஷ்டம்.....கோவில் சொத்தெல்லாம் அனுபவிக்குறீங்க.. வேளா வேளைக்கு ஒரு கார்ல போறீங்க...5 star hotel ல தான் தங்குறீங்க......என்ன வாழ்க்கை டா? ன்னுதான் தோணுது.......
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
09-ஆக-201214:29:29 IST Report Abuse
Prabhakaran Shenoy அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
Rate this:
Share this comment
Cancel
maakkaan - chennai,இந்தியா
09-ஆக-201214:26:34 IST Report Abuse
maakkaan உங்க தலையில, கழுத்துல இருக்குற கொட்டைகளுக்கு இடையே இருக்கும் உலோகம் தங்கமா?
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
09-ஆக-201214:18:26 IST Report Abuse
maran தூக்கத்தில் இருந்து சாமி இப்போதான் விழித்தாரோ .....?புத்தி எங்கே போனது ........
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
09-ஆக-201214:14:26 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar இதுபோன்று செய்திகள்.., மக்கள் மனதில் ஆன்மிக நாட்டம் குறைந்து வருகிறது. ஒருமனிதன் ஒழுக்கமாக இருக்க ஆன்மிகம் உதவுகிறது. நல்ல ஆன்மிக நெறி மக்கள் கையில் இருக்கு..,ஏசுவின் போதனைகள்..,நபிகள் பொன்மொழிகள்...ஸ்ரீ. கண்ணனின் கீதை.., 64 நாயன்மார்கள்.., 12 ஆழ்வார்கள்..., புத்தர்.., மகாவீரர்..,விவேகனந்தர்.. போன்ற சமய பெரியோர்கள் சிந்தனைகள்.., தூய தத்துவங்கள்....,போன்றவை ஒழுக்க வாழ்க்கைக்கு பெரிதும் உதவுபவை.., இவை பொதுமக்கள் உணர வேண்டும். போலி சாமியார்கள் போலி மடம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். தன் சொத்துகளை மற்றும் நன்கொடைகளை போலி மடங்களிடம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். முதல்வர் நிதிக்கு உதவி பணமாக கொடுத்து ஆலய அன்னதான திட்டத்திற்கு உதவலாம் நம் மனதில் தேவையற்ற பயம்..பொறாமை..கோபம் .., தவறான மோகம் போன்ற தீய உணர்வுகளை நீக்கி.. நம் பிராத்தனையாக.., ஸ்ரீ கிருஷ்ணனாக பிறந்து ஸ்ரீ ராமனாக வாழவேண்டும் இத் கோகுல அஷ்டமி நன் நாளில் பாரதியார் கண்ணன் பாடலில் பரமாத்மாவை வழிபடுவோம்- பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
Appavi Tamilan - London,யுனைடெட் கிங்டம்
09-ஆக-201213:59:03 IST Report Abuse
Appavi Tamilan இந்த நிலைமை எதிர்பார்த்ததுதான்...இதெல்லாம் சரி...ஜெயா அரசு ஏன் இந்த பிரச்னையில் பாராமுகமாக இருக்கிறது? ஆதீனத்து கிழவனே எல்லாவற்றையும் சொல்லி விட்டான்...நித்தி அயோக்கியன் 100 கோடி குடுப்பேன் என்று சொல்லித்தான் அந்த பதவியை வாங்கினான், அவனுடைய அடியாள் சீடர்களின் அட்டூழியம் அதிகம் என்று......ஜெயா உடனே நடவடிக்கை எடுக்கலாமே....கர்நாடக அரசு மிக எளிதாக நித்தியின் கொட்டத்தை அடக்கியது...நம் மாநில அரசால் முடியாதா? அதுவும் இதனை அசிங்கங்கள் நடந்தேறிய பின்பும் எந்த நடவடிக்கையும் இல்லை? ஒரு வேலை அங்கும் பெட்டிகள் கைமாறிவிட்டதா? அல்லது தான் ஒன்றும் தமிழர் அல்ல...தனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால் போதும்..தமிழகம் என்ன அனால் என்ன என்று நினைப்பா? ஆச்சரியமாக உள்ளது...
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - chennai,இந்தியா
09-ஆக-201213:12:59 IST Report Abuse
meenakshisundaram தினமலர் ஆக்க பூர்வமான மக்களுக்கு நல்லது செய்யும் பணி இல் ஈடுபட வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை